உலகின் பணக்காரர் பட்டியலில் கடந்த 23 வருடங்களாக முதலிடத்தில் இருப்பவர் பில்கேட்ஸ்.
தற்போது அந்த இடத்தை அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ் கைப்பற்றியுள்ளார். அமேசான்.காம் நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் ஜெப் பேசாஸின் சொத்து மதிப்பு 90.6 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 90 பில்லியனாக இருப்பதால் அவர் இரண்டாம் இடத்தில் இருப்பதாக பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment