Wednesday, August 16, 2017

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் வாகனம் இரண்டு முறை நிறம் மாற்றம்!

செங்சிலுவை சங்கத்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சிரிலிய சமூக அமைப்புக்கு வழங்கப்பட்ட வாகனம் 2 முறை நிறம் மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்ட வாகனம் முதலில் நீலநிறமாக மாற்றப்பட்டு பின்னர் கறுப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்பின்னர் ஊதா நிறமாக அதை மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தாக தெரியவருகின்றது.
மேலும் வானகத்தின் நிறத்தினை மாற்றியமை தொடர்பில் செஞ்சிலுவை சங்கத்தினருகோ அல்லது மோட்டார் வாகன திணைக்களத்துக்கோ அறிவிக்கவில்லை என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
இறுதியாக செஞ்சிலுவை சங்கத்தின் முகாமையாளரின் வீட்டு வாளாகத்திலிருந்தே குறித்த வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இதுதொடர்பில் முகாமையாளரை விசாரித்த போது சிரிலிய சமூக அமைப்பு வழங்கப்பட்ட வாகனம் மீண்டும் எப்படி தன்னுடைய வீட்டு வாளாகத்தினுள் வந்தது என்பது பற்றி தனக்கு தெரியவில்லையெனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பில் சமூகநல அமைச்சிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பணிபுரிபவர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
2011 ஆம் சிரிலிய அமைப்பின் நிகழ்ச்சியொன்றுக்கு வாகனமொன்று தேவை என்று வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைவாக 0642 என்ற இலக்கத்தை உடைய குறித்த வாகனம் ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு செஞ்சிலுவை சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் குறித்த வாகனம் யோசித ராஜபக்‌ஷவிடம் இருந்ததாகவும் அதை அவர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இதுதொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கு இன்றும் யோசித ராஜபக்‌ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதரவுள்ளார்.
முன்னாள் றக்பி வீரர் வஸீம் தாஜீதினின் கொலைக்கு குறித்த வாகனம் பய்ன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment