Saturday, October 7, 2017

முல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு!

மீன்பிடித் தொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மீனவர் நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடித்தொழிலுக்கு சென்றிருந்தபோது இன்று வரை அவர் கரைதிரும்பவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து குறித்த மீனவரை தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் குறித்த மீனவர் சென்ற படகானது கொக்குளாய் கிழக்கு பகுதி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில், குறித்த மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட நீதிபதி உடலத்தை பார்வையிட்டதோடு தற்போது உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.

No comments:

Post a Comment