தியாகி திலீபன் நினைவு தூபியை புனரமைப்புக்கான தீர்மானம் நேற்று (திங்கட்கிழமை) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை யாழ் மாநகர சபை புனரமைப்பு செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இணைத் தலைவர்கள் மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் புனரமைப்பு செய்வதற்குரிய தடைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
அதன் போது, கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் மாநகர சபைக்கு வழங்கியும் ஏன் இதுவரையில் புனரமைப்பு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
1989 ஆம் ஆண்டு தற்போது வடமாகாண சபை அவைத் தலைவராக இருக்கும் சீ.வி.கே.சிவஞானம் மாநகர ஆணையாளராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட தூபியை புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்கள்.
இருப்பினும், நல்லூர் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் நினைவுத் தூபி அமைந்துள்ளது.
இதனால் நல்லூர் ஆலய நிர்வாகத்துடன் கலந்தாலோசிப்பது மற்றும் நினைவு தூபி அமைந்துள்ள காணியை குத்தக க்கு எடுப்பது சம்பந்தமான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட பின்னர் புனரமைப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment