Thursday, August 31, 2017

கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போது அனலைத்தீவு கடற் பகுதியில் படகு ஒன்று மூழ்கியுள்ளது.
குறித்த படகில் பயணித்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளனர்.
பின்னர் கடற்படையினர் விரைவாக செயற்பட்டு நான்கு மீனவர்களை காப்பாற்றியதோடு படகையும் மீட்டுள்ளனர்.
இந்திய கடற்படை அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து மீட்கப்பட்ட மீனவர்கள் நால்வரையும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புளூவேல் விளையாட்டால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

புளூவேல் விளையாட்டு மதுரை கல்லூரி மாணவனின் உயிரை காவு வாங்கியுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள மொட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவன் புளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மன அழுத்தத்துக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், அவரது உடலில் புளூவேல் விளையாட்டின் அடையாளம் பச்சை குத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனை ஆதாரமாக வைத்து புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் குறித்த மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
முதன் முறையாக தமிழகத்தில் புளூவேல் விளையாட்டால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையகத்தில் தீப்பற்றிய இரவு என்ற போராட்டம்!

 தீப்பற்றிய இரவு என்ற போராட்டம்மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு 7 மணியளவில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஹட்டன், நுவரெலியா, தலவாக்கலை போன்ற நகரங்களிலும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகரின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் சைட்டத்துக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என கோரி தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி, 50ற்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மருத்துவ பீட மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவுகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இதேவேளை சைட்டம் தனியார் மருத்துவ கல்லூயின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலில் மூழ்கி சிகிச்சை பெற்ற யாழ்.பல்கலை மாணவி பலி!

கடலில் மூழ்கி, காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யாழ். யாழ்பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்துக்கு உள்ளானதில், ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பெண்கள் கடலில் மூழ்கியுள்ளனர்.
கடலில் மூழ்கிய 5 பெண்களும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவி செல்வி டயானா சகாயதாஸ் நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் விதிக்கப்பட்ட அதி கூடிய அபராதம்

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஒருவருக்கு முதல் முறையாக அதி கூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
119,000 ரூபாய் அபராதமாக செலுத்துமாறு குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு பலபிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட அதி கூடிய அபராதம் இதுவென கருதப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளின் எண்ணை மாற்றுதல், சைலன்ஸர் பீப்பாயை மாற்றி அதிக சத்தத்தில் பயணித்தமை, போலி இலக்க தகடு பயன்படுத்திய காரணங்களுக்காக இந்த மோட்டார் சைக்கிள் பட்டபொல பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

ரயில் மோதி விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
உயிரிழந்தவர் பிரபல தமிழ் பாட ஆசிரியர் மீராவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ மக்களின் போக்கை கண்டித்து விடுதலைப்புலிகள் விளம்பரம், அச்சத்தில் வவுனியா மக்கள்.

 வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன.

 சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு விடயங்களை முன்வைத்து குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒன்றில், “தமிழீழத்தில் ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி தவறிழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய துண்டுப்பிரசுரத்தில், வவுனியாவுக்கான முக்கிய அறிவித்தல்! என்ற தலையங்கத்தில், “தமிழீழத்திற்காக உயிரிழந்தவர்கள் கண்ட கனவுகள் உண்மையாகும் நேரம் வந்து விட்டது. இன்னும் நாங்கள் முற்றாக அழிந்து விடவில்லை.” போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.





Wednesday, August 30, 2017

பற்றி எரிந்த இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வாகனம்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், இலங்கை இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ வெளியேற்றப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று (29) இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து, பனாகொட இராணுவத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இதில் மூன்று இலங்கை இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர் என கூறப்படுகிறது.
மேலும் வாகனம் தீப்பிடிக்க ஆரம்பித்ததும் அவர்கள் வாகனத்திலிருந்து குதித்து தப்பிவிட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கியிருந்தார்.!

மகா­லிங்கம் சசிக்­குமார் அல்­லது சுவிஸ்­குமார் 2015.05.08 திக­தியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்­னு­டனேயே கொழும்பில் ஏஞ்சல் லொட்ஜில் தங்கியிருந்தார். எங்­க­ளுக்­கி­டை­யி­லான குடும்ப உறவு நன்­றா­கவே இருந்­தது என சுவிஸ்­கு­மாரின் மனை­வி­யான மகா­லக்ஷ்மி வித்­தியா படு­கொலை வழக்கின் ட்ரய­ல் அட்பார் நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணையில்  சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். 
குறித்த மாண­வியின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரய­ல்அட்பார் நீதாய விளக்க நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.
இவ்­வ­ழக்கில் வழக்குத் தொடு­நர்­த­ரப்பு சாட்சிப் பதி­வுகள் நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தொடர் வழக்கு விசா­ர­ணையின் பதி­னைந்­தா­வது நாளாக எதி­ரிகள் தரப்பு சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­தது. இதன்­படி இவ்­வ­ழக்கின் ஒன்­ப­தா­வது  எதி­ரி­யான மகா­லிங்கம் சசிக்­குமார் சார்பில் அவ­ரது மனை­வி­யான சசிக்­குமார் மகா­லக்ஷ்மி சாட்­சியம் வழங்க அழைக்­கப்­பட்­டி­ருந்தார். இவர்  சாட்­சிக்­கூண்டில் நின்று சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து தனது சாட்­சி­யத்தை வழங்­கி­யி­ருந்தார். இவ­ரது சாட்­சி­யத்தை ஒன்­ப­தா­வது எதிரி சார்பு சட்­டத்­த­ர­ணி­யான சின்­னையா கேதீஸ்­வரன் நெறிப்­ப­டுத்­தும்­போது அவர் அளித்த சாட்­சி­யத்தில்,
நான் சசிக்­கு­மாரை 2012 ஆம் ஆண்டு திரு­மணம் செய்­தி­ருந்தேன். அவர் வரு­டத்­திற்கு ஒரு முறை நாட்­டிற்கு வருவார். அந்­த­வ­கையில் 2015 ஆம் ஆண்டு நான்காம் மாதம் ஐந்தாம் திகதி இலங்கை வந்­தி­ருந்தார். அவ்­வாறு வந்­தவர் ஐந்­தாம்­மாதம் ஏழாம் திகதி  திரும்பி சுவி­ட்ஸர்­லாந்து போக இருந்தும் ஆனால் போயி­ருக்­க­வில்லை. அவர் 2015.05.08 திக­தியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்­னு­ட­னேயே வெள்ளவத்தை ஏஞ்சல் லொட்ஜில் தங்­கி­யி­ருந்தார். அச்­ச­ம­யத்தில் எங்­க­ளுடன் சசிந்­திரன் துசாந்தன் சுவிஸ்­கரன் ஆகி­யோரும் இருந்­தார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து இவ­ரது சாட்­சி­யத்தை சட்­டமா அதிபர் திணைக்­கள பிர­தி­சொ­லி­சிட்டர் ஜென்ரல் குமார்­ரட்ணம் குறுக்கு விசா­ரணை செய்­யும்­போது,
சசிக்­குமார் 2015.05.08 இலி­ருந்து 2015.05.12 ஆம் திக­தி­வரை தன்­னு­ட­னேயே இருந்தார் என அவ­ரது மனைவி சாட்­சி­ய­ம­ளித்தார். இதன்­போது பிர­தி­சொ­லி­சிட்டர் ஜெனரல் அதற்கு சாட்­சியம் ஏதும் இருக்­கின்­றதா என வின­வி­ய­போது அதற்கு சாட்­சியம் எதுவும் இல்லை எனவும் அவர் சாட்­சி­ய­ளித்­தி­ருந்தார். 
இதனைத் தொடர்ந்து குறித்த சாட்­சியை 9 ஆவது எதிர்­சார்பு சட்­டத்­த­ரணி மீள் விசா­ரணை செய்­யும்­போது, தனக்கும் தனது கண­வ­ருக்கும் இடையில் நல்ல சந்­தோ­ச­மான உறவே காணப்­பட்­டி­ருந்­த­தாக சசிக்­கு­மாரின் மனை­வி­யான மகா­லக்ஷ்மி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 
இதே­வேளை இவ்­வ­ழக்கில் ஐந்தாம் எதி­ரி­சார்­பாக சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு சட்ட வைத்­திய அதி­காரி மயூ­ரதன் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். அவ­ரிடம் 5 ஆம் எதிரி சார்பு சட்­டத்­த­ர­ணி­யான ரகு­பதி 5 ஆம் எதி­ரியை பரி­சோ­தனை செய்யும் போது அவ­ரிடம் ஏதா­வது உரை­யா­டி­னீரா எனக் கேட்­கப்­பட்­டது. அதற்கு சாட்சி சாதா­ர­ண­மாக  எம்­மிடம் பரி­சோ­த­னைக்காக வரு­ப­வர்­க­ளிடம் உரை­யா­டு­வ­தைபோன்றே  அவ­ரு­டனும் உரை­யா­டி­யி­ருந்தேன் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.
இதே­போன்று  7ஆம் எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் 2015.05.12 ஆம் திகதி கொழும்பில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை எங்­கெங்கே இருந்தேன் என  சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். எனினும் அவர் கூறிய அவ்­வி­ட­யங்கள் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவின் குறித்த எதி­ரியின் வாக்­கு­மூ­லத்தில் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. இது தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் உத­விப்­பொலிஸ் அத்­தி­யட்­சகர் திஷேரா வாக்­கு­மூலம் தொடர்பில் மறு­த­லிப்பு சாட்சியம் வழங்குவதற்காக மன்றிற்கு அழைக்கப்பட்டு அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இதன் படி அவரது சாட்சியத்தில் 7 ஆம் எதிரி குறிப்பிடுவது போன்று 12 ஆம் திகதி காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அவர் எங்கெங்கு இருந்தார் என்று விசேடமாக குறிப்பிட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட வில்லை என வாக்குமூல பதிவேட்டு புத்தகத்தைப் பார்த்து சாட்சியமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்

வவுனியாவில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

 வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இடம்பெற்ற  வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்,
இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 3வர் படுகாயமடைந்தv நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ஓடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் கல்குண்ணாமடுவ பகுதியில் எவ்வித சமிக்ஞைகளுமின்றி தரித்து நின்றபோது, அதே பாதை வழியே பயணித்த வீட்டின் மேல் கூரை அலங்கரிப்பு பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனம் தரித்து நின்ற வாகனத்தின் மீது மோதியே இந்த சம்பவித்துள்ளது.
 இவ்விபத்தில் தரித்து நின்ற வாகனத்தில் பயணித்த வன்னிமுத்து கிஸ்ணன் (வயது-48) என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Tuesday, August 29, 2017

விஜயகலா குறித்து சுவிஸ்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்!

வேலணை மக்கள் என்னைக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தபோது விஜயகலா மகேஸ்வரன் வந்து என்னைக் காப்பாற்றினாா் என வித்தியா படுகொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான சுவிஸ்குமாா் தீா்ப்பாயத்திடம் சற்று முன் சாட்சியம் அளித்தாா்
அவா் என்னை எனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வரை என்னுடனேயே இரண்டு மணிநேரமாகக் காத்திருந்தாா் என்றும் அவர் மேலும் சாட்சியமளித்தார்.
வித்தியா படுகொலை வழக்கின் எதிரி தரப்பு சாட்சியங்கள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற தீா்ப்பாயம் முன்னிலையில் நடைபெறுகின்றன.
இந்த வழக்கின் 9 ஆவது எதிரியான மகாலிங்கம் சசிக்குமாா் (சுவிஸ்குமாா்) தற்போது சாட்சியம் அளித்து வருகின்றாா்.
அவா் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது-
எனது தம்பியை ஊா்காவற்றுறை பொலிஸாா் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை குறித்து முறைப்பாடு செய்ய யாழ்ப்பாணம் புறப்பட்டபோது வேலணையில் என்னை வழிமறித்த மக்கள் போஸ்ரில் கட்டி வைத்து அடித்தாா்கள்.
அப்போது அங்கு வந்த விஜயகலா மேடம் என்னை சசியின் அண்ணாவா என்று கேட்டா?.
நான் ஓம் என்று சொன்னவுடன் மக்களைக் தாக்க வேண்டாம் என்றும், என்னை அவிழ்த்து விடுமாறும் மக்களிடம் கூறினாா்.
அதனால் மக்கள் என்னை அவிழ்த்து விட்டாா்கள்.
எனது குடும்பத்தினா் அந்த இடத்துக்கு வரும் வரை 2 மணி நேரமாக விஜயகலா மேடம் என்னுடனேயே இருந்தாா்.
அப்போது இரவு 12 மணி. பின்னா் எனது மனைவியும் எனது அம்மாவும் அந்த இடத்துக்கு வந்து என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்”- என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தா்ா.
அவரிடம் பிரதி மன்றாடியாா் அதிபதி குறுக்குவிசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது.

மருதானையில் துப்பாக்கி சூடு

மருதானை, மாளிகாவத்தையில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டின் காரணமாக முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ளவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சாவை கைப்பாற்றப்போன பொலிசார்: கிடைத்தது ஆட்டுப்புளுக்கை!

யாழ். கைதடி பகுதியில் கஞ்சா பொதிகள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்றபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
எனினும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
மேற்கண்ட பகுதியிலுள்ள பழைய வீடு ஒன்றில் கஞ்சா பொதிகள் இருப்பதாக சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்றுமுன்தினம் கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டனர்.
இதன்போது அந்த பழைய வீட்டில் கஞ்சா பொதிகள் கிடைக்கவில்லை. ஆட்டுப்புளுக்கைகளை  சிறிய பைகளில் போட்டு பொதி செய்து வைத்துள்ளனர் என சாவகச்சேரி பொலிசார் கூறியுள்ளனர்.

தலைவரின் கடைசி சந்திப்பு...


முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதியுத்ததின் உக்கிரம் ஏறிக்கொண்டிருந்த நாட்களில் இயக்கத்தின் இரண்டாம்நிலை தளபதிகளை  தலைவர் சந்திக்கின்றார்.சந்திப்பு இரவு பொழுதில் பங்கருக்குள் நடக்கின்றது.சிறுதுளியும் பதட்டமின்றி கண்களில் ஞானத்தீட்சை பெற்றவராய் ஒவ்வொரு சொல்லிலும் நம்பிக்கையின் உயிர்துடிப்பு.

அண்ணன் கதைக்கின்றார்

"தினையான் குருவி கண்டிருக்கியளோ வேலிகளில் பூச்செடிகளில் வயல்வெளிகளில் விநாடிக்கு இருமுறை வாலை ஆட்டி சிலிர்ப்பிக்கொண்டு தினைகள் சேகரிக்குமே தினையான் குருவி.குருவி இனங்களிலேயே மிகவும் சிறியது இதுதான்.ஆனால் வெயில் மழை புயல் பாம்பு காற்று இதுபோன்ற தன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்கின்ற ஏற்பாடுகளை சிறுக சிறுக ஆனால் கச்சிதமாகவும் பிசிரின்றியும் தன்னம்பிக்கையோடும் செய்யும்.நீங்களும் தினையான் குருவிபோல இருங்கள்.

போராட்டம் இன்று மிகவும் பின்னடைவு கண்டிருப்பது உண்மைதான் ஆனால் தினையான் குருவிகளை போல எமது போராட்டத்தையும் எமது மக்களுக்கான வாழ்வையும் மீளக்கட்டியெழுப்புவோம்.எதற்க்கும் அஞ்சாதீர்கள் நாம் எண்ணிக்கையில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதும் நமது தளராத மனவுறுதிதான் போராட்டத்தை பெரிதாக வளர்த்தது.அதே மனவுறுதியுடன் இருங்கள் பாரதி சொன்ன அக்கினி குஞ்சுகள் போலவும் இருங்கள். நமது வளங்கள் அழிந்து குறுகிவிட்டோமே என்று மனம் தளராதீர்கள்.முக்கியமாக அஞ்சாதீர்கள்.நம்பிக்கை இழக்காதீர்கள்.கொடூரத்தின் உச்சத்தில் நின்று கோரதாண்டவம் புரியும் சிங்கள பேரினவாதக் காட்டை அழிக்க பொந்திடை வைக்கும் சிறு அக்கினி குஞ்சு கானும்.எனென்டால் உண்மையும் நீதியும் வரலாறும் என்றானாலும் நமது பக்கமாய்தான் இருக்கமுடியும்.உடலை மட்டும் கொன்று விடுதலை வேட்கையை கொல்ல முடியாதவர்களை கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள.

தினையான் குருவிகள் போலவும் அக்கினி குஞ்சுகள் போலவும் நீங்கள் இயங்கினீர்களென்றால் விடுதலைப் போராட்டம் நிச்சயம் மீண்டும் துளிர்க்கும்.பீனிக்ஸ் பறவைகள்போல அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்துடிப்புடன் எழுவோம்.நமக்கு முன்சென்ற மாவீரர்களை விதைத்த போதெல்லாம் அவர்களை நாம் புதைக்கவில்லை விதைக்கின்றோம் என்று சொல்லிதான் விதைத்தோம்.பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களை தாங்கி எம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.

குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிக்கிற மக்களை நினைக்கதான் வேதனை.விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள்.அவர்களின் துயரத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய ஏலுமோ அனைத்தையும் செய்யுங்கள்.நம்மிடம் உள்ள உலர் உணவு மருந்து பொருட்கள் எல்லாத்தையும் மக்களுக்காய் கொடுத்திட தளபதிமாருக்கு சொல்லிட்டேன்.தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமைகள் செய்து அவலம் தந்தவர்கள் பலருண்டு ஆனால் ராஜபக்சே சகோதரர்களைபோல. கொடுமை செய்தவர் எவருமில்லை.

இவர்கள் தேர்தலில் வென்று ஆட்சிக்குவர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றசாட்டு நீங்கள் அறியாதது அல்ல.பின்னோக்கி பார்க்கையில் அக்குற்றசாட்டு உண்மைதான் இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்ககாரணம் தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற்கான புறசூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது.ஆனால் #இந்தியா_எமக்கெதிராய்_இத்துணை_இறுக்கம்காட்டுமென்றும்_ராஜபக்ஷே_அரசுக்கு_முழுபக்கபலமாய்_இருக்குமென்றும் இயக்கம் எதிர்பார்க்கவில்லை.எமது மக்களின் வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்திருக்கின்றோம்.சிங்கள பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தபடுகின்றநாள் நிச்சயம் வரும்.

இப்ப இங்க நிக்கிற நீங்களென்டல்ல இயக்கத்தின் எல்லா போராளியையும் என் சொந்த பிள்ளைகளாகதான் வளர்த்தேன்.பல்லாயிரம் போராளிகளை நாம் இந்த விடுதலைக்கு ஈகம் செய்தோம்.அதைவிட பெரிய நம்மக்கள் செய்த தியாகங்கள் எதையும் நம்மறக்கமுடியாது.அந்த சகலபேரது நினைவுகளின்ட புனிதசுமையை உங்க தோளிலதான் நான் நம்பிக்கையோடு வைக்கிறேன்.உயிரை கொடுக்க அச்சமில்லை என்ற தியாகமும் உறுதியும்தான் போராட்டத்தை வளர்த்தது அதே உறுதியுடன் முன் செல்லுங்கள் வரலாறு நமக்காக மீண்டும் வரும்.

இருநூறு வருடங்களுக்குமுன் பண்டாரக வன்னியன் இதே நிலத்தில்தான் விடுதலைப்போர் புரிந்தார் இதே முல்லைத்தீவில் வெள்ளைகாரன்ட கோட்டையை தகர்த்தார்.ஆனால் துரோகி காக்கை வன்னியனால் காட்டிக்கொடுக்கப்பட்டு கற்சிலைமடுவில் வீரகாவியமானார்.அன்று தரையில் விழுந்த பண்டாரகவன்னியனின் வாள் மண்முடி கூர்மழுங்கி துருப்பிடித்து இனிமேல் யாரும் பயன்படுத்தமுடியாது எனுமளவிற்கு ஆகிகிடந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றிய வீரத்திற்க்கு எடுத்துக்காட்டாக இருந்த அந்த வாளை இருநூறு ஆண்டுகளாக ஒருவரும் தொடவுமில்லை ஏறெடுத்துப் பாக்கவுமில்லை.

துருப்பிடித்து கூர்மழுங்கி கிடந்த அந்த வாளை இருநூறு ஆண்டுகளுக்குபின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் துணிவுடன் கையிலெடுத்தது இலட்சியஉறுதி இடைவிடாது பயிற்சி தியாகம் என நினைத்து பார்க்க முடியாத ஈகங்களால் அந்தவாளை பட்டைதீட்டி மேலும் கூர்செய்து பளபளக்கும் போர்வாளாக அதை உயர்த்தியது.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே அந்த போர்வாள் அது உறையில் கிடக்கவுமில்லை தரையில் விழவுமில்லை இனியும் உயர்த்தி பிடித்தபடி களமாடுங்கள் தமிழர்கள் அனைவருக்குமான போர்வாளாக நான் இதை தருகின்றேன் இனி இது கீழே விழக்கூடாது துருப்பிடித்துவிடக்கூடாது அந்த புனித கடமையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

இதே மண்ணில் 15ஆண்டுகளுக்கு முன் நாம் நடத்திய காட்டிய வரலாறு மீண்டும் வரும்.தினையான் குருவிகளைபோல அமைதியான உழைப்பும் அக்கினி குஞ்சுகளை போல அகத்தே நெருப்பும் சுமந்து தணிந்து போகாத விடுதலை தாகத்துடன் இயங்கினீர்களென்டால் புலிகளின் படை மீண்டும் முல்லைதீவில் தரையிறங்கும்.நான் உங்களோடுதான் இருக்கின்றேன்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
                     #தேசியத்தலைவர்

Monday, August 28, 2017

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த கஞ்சா மீட்பு!

மன்னார் வளைகுடா கடல் வழியாக இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 150 கிலோ கேரளா கஞ்சா போதிகள் மீட்கப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இந்த கஞ்சாக்கள் மீட்கப்பட்டுள்ளது.
தமிழக சிறப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோப் பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர சோதனையின்போது குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தனுஷ்கோடி அருகே கம்பிபாடு கடற்கரைபப்குதியில் நடுக்கடலில் பொதிகள் சில மிதந்துவந்ததை பொலிசார் அவதானித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொதிகளில் சுமார் 150 கிலோ கேரளா கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் சர்வதேச மதிப்பு பல இலட்சம் ரூபாயாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, August 27, 2017

ஆணழகன் போட்டியில் இலங்கையர் முதலிடம்!!

 ஆசியாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் இலங்கை பிரஜை கலந்து கொண்டார்.
 இந்த போட்டியில் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் முதலிடம் பெற்றுகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அத்தோடு அவர் வெற்றி பெற்றதை முன்னிட்டு பதக்கம் மற்றும் வெற்றி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும்.

பிரபாகரனின் மனைவி, மகள் எம்மிடம் கிடைத்திருந்தால் பாதுகாத்திருப்போம்-கோத்தா

பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எம்மிடம் கிடைத்திருந்தால் அவர்களையும் நாம் பாதுகாத்திருப்போம் ஆனால் அவர்கள் எம்மிடம் கிடைக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபாகரனின் தந்தையையும் தாயையும் கூட நாம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி அறிந்த பின்பும் நாம் அவர்களைப் பாதுகாத்தோம்.” என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தொலைபேசி அழைப்பை நாம் கேட்டோம் என கோத்தபாய கூறியுள்ளார்
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போரை கைவிட்டுவிட்டு வெளிநாட்டுக்கு ஓடி விடுங்கள் நாம் பிறகு ஒரு நேரம் வந்து நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிடம் கூறியமைக்கு என்னால் நிலைமைகளை மாற்ற முடியும், ஆயுதங்கள் சற்று தேவை, என கூறினார்.
இந்த உரையாடலானது நாம் பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது என தெரிவித்தார்.
அத்துடன் கோத்தபாயவின் உரையாடலின் போது மிக முக்கியமான கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.
அந்தக் கேள்வியில் பொட்டு அம்மான் மற்றும், பிரபாகரனின் மனைவி, மகள் துவாரகா ஆகியோர் எங்கே? அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கோத்தபாய களப்பு வழியாக தப்பிச்செல்ல முற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே அந்த தாக்குதலில் அவர்கள் இறந்திருக்கலாம். ஏனெனில் அங்கு இறந்தவர்களின் உடல்கள் சேதமாகி இருந்தன. உருகுலைந்த நிலையில் காணப்பட்டன. ஆகவே அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது என்று கூறினார்.
அத்துடன் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எம்மிடம் கிடைத்திருந்தால் அவர்களையும் நாம் பாதுகாத்திருப்போம். ஆனால் அவர்கள் எம்மிடம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து வாள்வெட்டு

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் மீது, உழவு இயந்திரத்தில் வருகைதந்த ஒருவர் வாளால் வெட்டி தப்பி சென்றுள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 53 வயது மதிக்கத்தக்க காந்திகிராமம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழிற்கு விரையும் பிக்குகள் குழு!!

பலத்த பாதுகாப்புடன், சாமோபாலி மஹா நிக்காய அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர் வரக்காக்கொட ஞானரத்ண மஹா தேரர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 28 ஆம் நாள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.
உலக பௌத்த சங்கத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் இக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ள இவர்கள் எதிர்வரும் 30ஆம் நாள் யாழ். மாவட்டச் செயலகத்தில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
அத்துடன் யாழ் புத்தூர் மடிஹே பஞ்சசீஹ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் அத்துடன் வேறு பலதரப்புகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.
இவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, August 26, 2017

வித்தியாவிற்கு அடுத்து மற்றுமொரு மாணவி கொடூரமான முறையில் கொலை!

நாட்டில் குற்ற செயல்கள் அதிகரித்து சென்று கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இறக்குவானை, படேயாய பகுதியில் உயர்தரத்தில் கற்று வந்த மாணவி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல மேலதிக நீதவான சரத் விஜேகுணவர்தன உத்தரவிட்டுள்ளார்.
படேயாய பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த மாணவி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், தந்தையுடனேயே இந்த மாணவி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு பகுதியில் உயர்தரம் கற்றுவந்த மாணவி வித்தியாவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதை தொடர்ந்து இந்த மாணவியும் பலவந்தப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

திருடிவிட்டு தப்பிச்சென்றவருக்கு வந்த சோதனை!

யாழ். கந்தர்மடத்தில் இனம் தெரியாத மர்ம நபரொருவர் நூதன முறையில் திருடிய சம்பவம் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று (25) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இனம்தெரியாத நபர் ஒருவர் அடுத்தடுத்த வீடுகளில் பணம், எரிவாயு சிலிண்டர், கைத்தொலைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுள்ளார்.
வீடுகளில் திருடிய பின் தப்பிச் சென்ற போது, இரு வீடுகளில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அவரது உருவம், அவர் பயன்படுத்திய வாகனம் என்பன மிகத் தெளிவாக குறித்த கண்காணிப்புக் கெமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே திருடனைப் பிடிப்பதற்கு இவை இலகுவாக இருக்கும் என்று யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் வடகொரியா அடாவடி: தென்கொரியா சாடல்!!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
வடகொரியா இன்று (சனிக்கிழமை) காலை புதிய ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் அறிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த அணு ஆயுத சோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் செவிடன் காதில் ஊதிய சங்கபோல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது.
வடகொரியாவின் காங்வான் மாகாணத்தில் இருந்து இன்று காலை செலுத்தப்பட்ட ஏவுகணை 250 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து கடலில் விழுந்துள்ளதாக தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹார்வி புயலால் அமெரிக்காவுக்கு ஆபத்து: ஆர்ப்பரிக்கும் அலைகள்!

 தற்போது உருவாகியுள்ள ‘ஹார்வி புயல்’ எனும் அதிபயங்கர புயலினால் அமெரிக்கா பேரழிவை சந்திக்கவுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா – மெக்சிக்கோ வளைகுடா கடலில் ‘ஹார்வி’ எனும் அதிபயங்கர புயல் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகியுள்ளது.
இந்த புயலின் எதிரொலியாக கடலின் நீர்மட்டம் தற்போது 12 அடி உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகதிறது.
டெக்சாஸ், லூசியானா மற்றும் வடக்கு மெக்சிக்கோ பகுதிகளில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்வதாக கூறப்படுகிறது.
அத்துடன் 97 சென்ரி மீற்றர் மழை வீழ்ச்சி இருந்தமையால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்வி’ புயல் இன்று அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என கூறப்படும் நிலையில், குறித்த புயலானது கரையைக் கடக்கும்போது மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
 கடும் மழையும் வெள்ள அபாயமும் ஏற்படலாமென்பதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2005 ஆம் ஆண்டு புளோரிடாவை வில்மா புயல் தாக்கியிருந்தது.
இதனைத்தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓகஸ்ட் 26: அன்னை தெரசா பிறந்த தினம்!!

அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட அன்னை தெரசா 1910 ஆம் ஆண்டு ஓகஸ்டு 26 ஆம் திகதி பிறந்தார்.
இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.
1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் நிலையிலிருந்தவர்களுக்குக் கூட தொண்டாற்றியவர்.
முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
1979இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, August 25, 2017

யாழில் ட்ராக்டர் கவிழ்ந்து விபத்து!

இன்று பிற்பகல் யாழ் நகரில் உள்ள அரியகுளம் சந்தியில் மணல் ஏற்றி வந்த ட்ராக்டர் திடீரெனக் கவிழ்ந்ததில் அதன் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் மணல் ஏற்றிய நிலையில் வேகமாக வந்து திருப்ப முயன்ற நிலையிலேயே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

"வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம்" பண்டார வன்னியனின் நினைவுதினம் இன்று

முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.
பண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும்.
இலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.
அத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் – செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.
இதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது. அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு செய்யவே தூண்டுகின்றது.
இவ்வாறு தென்பாகத்திலும் பார்க்க தொல்லியல் ஆதாரம் கொண்ட வடபாகம் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நாகர்களினால்ஆளப்பட்டிருக்கிறது. பின்னர். அது தென்னிந்திய ஆட்சியாளர்களின் ஆட்சிகளுக்கும், தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் இடைப்பட்டுஆளப்பட்டிருக்கிறது. பின்னர் ஐரோப்பியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆளப்பட்ட வன்னிப்பிரதேசத்தில் தென்னிந்திய ஆட்சியாளர்களின் ஆட்சிக்கும், ஐரோப்பிய காலணித்துவத்தின் ஆட்சிவரையான காலப்பகுதியில் (பிரித்தானியர் காலம் வரை) இலங்கையின் வடபாகத்தில் யாழ்ப்பாண அரசுக்கும், தென்னிலங்கை அரசிற்கும் அடங்காது வன்னிப்பிராந்தியத்தை வன்னியர்கள் ஆண்டிருக்கிறார்கள். இதை ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பயணக்குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.
போர்த்துக்யேர் ஆட்சிக்காலத்தில் வன்னி கைலாயவன்னியனது ஆட்சிக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்பின்னர் ஒல்லாந்தரும் அதனைத் தொடர்ந்து வந்த பிரித்தானியரும் வன்னியை ஆண்டிருக்கிறார்கள். ஒல்லாந்தரது இறுதிக்காலப் பகுதியிலும், ஆங்கிலேயரது ஆரம்ப காலப்பகுதியிலும் வன்னியில் வாழ்ந்தவனாக பண்டாரம் வன்னியனார் திகழ்கின்றார். இப்பண்டாரம் வன்னியனார் இலங்கையின் தேசிய வீரர்களுள் 1982ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார். டச்சுக்காரரின் காலத்திலும், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கெதிராக எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் இலங்கையில் தேசிய வீரர்களாக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒல்லாந்தர்களின் இறுதிக் காலத்திலும் ஆங்கிலேயர்களின் ஆரம்ப காலத்திலும் அந்நியர்களை ‘எமது தாய்மண்ணில் இருந்து வெளியேற்றுவேன்’ என சபதம் பூண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த தமிழ்த் தலைவர்களுள் பண்டாரம் வன்னியனார் முக்கிய இடத்தைப் பெறுகிறார். இவரை இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய வீரராக (வன்னி பண்டார) அங்கீகரித்திருக்கிறது இலங்கை அரசு.
இப்படிப்பட்ட இலங்கையின் தேசிய வீரர்களுள் ஒருவரான பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வன்னிப் பிராந்தியத் தளபதி வொன் டிறிபேர்க் அவர்களால் கற்சிலைமடுவில் தேற்கடிக்கப்பட்டு ஓடிய நாளை பண்டாரவன்னியன் நினைவு நாளாகக் கொண்டாடுகின்றோம். ஆங்கிலப்படைகளிடம் தோற்றோடிய பண்டாரவன்னியனை நாம் அவனது நினைவு நாளாக கொண்டாடுகிறோம். ஏனெனில் பண்டாரவன்னியன் எப்போது இறந்தான் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடமில்லாததன் காரணத்தினாலேயே ஆகும்.
எனவே அவன் ஆங்கிலேயத் தளபதியிடம் தோற்று நிராயுதபாணியாக பண்டாரவன்னியன் ஓடிய நாளையே நாம் நினைவுகூருகிறோம். அதுவும் பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களிடம் தோற்றோடி கிட்டத்தட்ட 100 வருடங்களின் பின்னர். அதாவது1904 – 1905ல் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரசாங்க அதிபராக இருந்த ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவரால் 1803 ல் பண்டாரம் வன்னியனாரை கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904ல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னர்ஒரு நடு கல் நாட்டப்பட்டது.
“HERE ABOUTS CAPTAIN VON DRIEBERG DEFEATED PANDARA VAWNIYAN 31ST OCTOBER 1803.”
என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நடு கல்லிலே பண்டார வவுனியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஆங்கில தமிழ் வரலாற்று நூல்கள் அனைத்திலும் பண்டார வன்னியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நடுகல் நிறுவப்பட்டு எட்டு வருடங்களின் பின்னர் 1913ல் ஜே.பி.லூயிஸ் அவர்கள் தொகுத்த ‘இலங்கையில் உள்ள நடுகற்களும்நினைவுச் சின்னங்களும்’ என்ற நூலிலே கற்சிலைமடுவில் உள்ள நடுகல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
எனவே பண்டாரவன்னியன் ஆங்கிலேயரிடம் தோற்றோடிய நாளை நாம் அவனது நினைவு தினமாக கொண்டாடுவதா என்கின்ற சர்ச்சை எழுந்தது. இதனால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் 1997ஆம் ஆண்டு பண்டாரவன்னியனின் நினைவு நாளை மாற்றியமைத்தனர். அதாவது பண்டாரவன்னியன் 2வது தடவையாக (ஆனால் ஆங்கிலேயருக்கு முதல் ஒல்லாந்தர் இக்கோட்டையில் இருந்த போது தகர்த்தான்) ஆங்கிலேயர்களின் கோட்டைகளில் ஒன்றான முல்லைத்தீவை கைப்பற்றி அங்கிருந்த பீரங்கிகளையும் இழுத்துச்சென்ற ஓகஸ்ட் 25 (1803) நாளை தமிழர் படைபலத்தின் திருநாளாக கொண்டாடினர். அதன்பின்னர் கற்சிலைமடு மக்களினால் 2002ஆம் ஆண்டு பண்டாரவன்னியனின் நினைவுருவம் அமைக்கப்பட்டது.
இதன் பின்னர் கடந்த 07.03.2010 ஆம் ஆண்டு இலங்கையின் தமிழர்களின் வீரனாகவும், சிங்கள மக்களின் தேசிய வீரனாகவும் கருதப்பட்ட பண்டாரவன்னியனின் சிலைகள் இலங்கைப் படைகளால் அடித்து உடைக்கப்பட்டன. உன்மையில் பண்டார வன்னியனின் வீரத்தினை உறுதிப்படுத்துகின்ற ஓகட்ஸ் 25 திகதியே பண்டாரவன்னியனின் வீரத்தின் நாளாக கொண்டாடப்படவேண்டும் பண்டாரவன்னியனின் வரலாறு. பண்டாரவன்னியனின் வரலாற்றில் பல வரலாற்றுக் குழப்பங்களை பலரும் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர். பண்டாரவன்னியனின் குடும்ப ஆய்வை முதன்முதலாக சுவாமி ஞானப்பிரகாசரே செய்தவராவார். இதில் சுவாமி ஞானப்பிரகாசர் தெளிவாக பனங்காம வன்னியர் பரம்பரையை குறிப்பிட்டு 1936 ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் 30ஆம் திகதி றோயல் ஏசியாற்றிக் சபைக்கு கட்டுரை ஒன்றினைச் சமர்ப்பித்தார். அத்துடன் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் வெளியிட்ட யாழ்ப்பாண சரித்திரம் 1933ஆம் ஆண்டு (பக்கம் 111 -112) இல் நல்லமாப்பாணன் பரம்பரையையும் தெளிவாக விளக்குகிறார். இதில் வன்னியர்களுடைய பரம்பரையை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் என்கின்ற பெயர் எவ்வாறு புனைகதை மூலம் புகுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.
இதன் பின்னர். 1982 இல் பண்டார வன்னியன் தமிழ் சிங்கள இனங்களுக்கும் தேசிய வீரனாக 2 தடவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நவரத்தினம் எம்.பி. அவர்களின் முயற்சியால் வவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுருவத்தினை அமைத்து அவர்குறித்த வரலாற்றினை சிறிய ஆய்வுரையாக வழங்கினார். இதுதான் பண்டாரவன்னியன் குறித்த கருத்தை எம்மக்கள் மத்தியில் வேரூன்றச்செய்தது எனலாம். இதன் பின்னர். பண்டாரவன்னியனின் நாடகத்தை இயற்றிய திரு முல்லைமணி (வே.சுப்பிரமணியம்) அவர்கள் பண்டாரவன்னியனின் பெயரை குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என ஒரு பெரும் வரலாற்று வடுவுடன் புனைந்துவிட்டார்.
அத்துடன் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில்அதாவது பண்டாரவன்னியனுக்கு 150 வருடங்கள் முன்னர் பனங்காமத்தை ஆட்சி செய்த கைலாயவன்னியனை பண்டாரவன்னியனின் தம்பியாக்கி, சங்கிலியனை போர்த்துக்கேயரிடம் காட்டிக்கொடுத்த ஊர்காவற்றுறையின் தலைவனான காக்கைவன்னியனை (யாழ்ப்பாணவைபவமாலை – மயில்வாகனப்புலவர்) பண்டாரவன்னியனை காட்டிக் கொடுத்தான் எனக்குறிப்பிடுகிறார்.
(வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழா மலரான மருதநிலா இதழில் பேராசிரியர் பொ.பூலோகசிங்கம் அவர்கள் தனது வன்னிநாட்டின் வரலாறு என்ற கட்டுரையில் சங்கிலியனைக் காட்டிக்கொடுத்தாக போர்த்துக்கேய வரலாறுகள் கூறும் இருவர்களில் அதாவது புவிராச பண்டாரத்தின் மாப்பிளையும் தளபதியுமாக இருந்தவன் (1582 – 1592) , மற்றையவன் எதிர் மன்ன சிங்கன் இரகுவம்சம் இயற்றிய அரசகேசரியின் சகோதரனாவான்.
ஆகவே 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த மாதகல் மயில்வாகனப்புலவர் தனது யாழ்ப்பாண வைபவ மாலையிலேதான் முதன் முதலாக காக்கை வன்னியன் என்கின்ற கதாபாத்திரத்தினை உருவாக்குவதாக சொல்கிறார். GAGO என்கின்ற போத்துக்கேயச்சொல்லுக்கு கொன்னையன் என்பது பொருள் என்றும் தமிழில் காகோ என்றால் பிரமா படைக்காத படைப்பு, பெற்றோர் இடாத பெயர் ஆகவே மயில்வாகனப் புலவர் அந்த காகோ என்கிற பெயரை தமிழில் காக்கை என விளங்கிகொண்டு யாழ் சங்கிலியன் அரசவையில் மாப்பாண வன்னியர்கள் இடம்பெற்றதனால் காக்கையுடன் வன்னியனையும் இணைத்து காக்கை வன்னியன் என புதுபெயரைப் புனைந்தார் என்று பேராசிரியர் பூலோகசிங்கம் மருதநிலா இதழில் குறிப்பிடுகிறார்.
எனவே இவற்றையெல்லாம் (யாழ்ப்பாணவைபவமாலை – மயில்வாகனப்புலவர்) வாசித்த முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களும் தான் எழுதத்துடித்த பண்டாரவன்னியனின் கதாபாத்திரத்தில் மயில்வாகனப்புலவர் உருவாக்கிய காக்கை வன்னியனுக்கு இரண்டாவது தடவையும் உயிர் கொடுத்திருகிறார்.
இதைவிடப் பெரும் சோகம் என்னவெனில் பண்டாரவன்னியன் ஆங்கிலேயப்படைகளினால் கைது செய்யப்பட்டு கற்சிலைமடுவில் தூக்கிலிடப்படுகிறான் எனவும் முல்லைமணி வே.சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார். இது மிகப்பெரும் வரலாற்றுத் திரிபும், துரோகமும் ஆகும். முல்லைமணி அவர்கள் கற்சிலை மடுவில் உள்ள பண்டாரவன்னியன் வொன் றிபேக்கிடம் தோற்ற நினைவிடத்தினை அவனது கல்லறை என மனதில் நிறுத்தி பண்டாரவன்னியன் நாடகம் இயற்றியிருக்கிறார். பின்னர் இந்த பண்டாரவன்னியன் நாடகத்தினை 2006 நூலுருவில் கொண்டுவந்த போதும் தான் இந்த நாடகத்தினை இயற்ற காரணமாக இருந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களின் நாட்குறிப்புக்களை கோடிட்டுக் காட்டியிருந்தபோதும் அந்த நாடகத்தில் இருந்த தவறை அவர் திருத்த முன்வரவில்லை
அத்துடன் முல்லைமணி பண்டாரவன்னியன் நூலில் குறிப்பிடும் போது முன்னர் நான் குறிப்பிட்ட ஞானப்பிரகாசர் 1936 இல் றோயல் ஏசியாற்றிக் சபைக்கு கொடுத்த அறிக்கையில் தொன்பிலிப் நல்ல மாப்பாணனின் மகள் குழந்தை நாச்சனின் மகனே பண்டாரவன்னியன் எனக்குறிப்பிட்டுள்ளார். 1645 இல் பிறந்த நல்ல மாப்பாணனின் பேரன் பண்டாரவன்னியன் 1811 வரை வாழ்ந்திருக்க முடியாது அதே அட்டவணையில் எல்லைக்காவேத நல்ல நாச்சனின் பிறப்பு (1730) கணவன் நல்ல மாப்பாணன் டொன் ஜூவான் குலசேகரன் என்னும் வன்னித்தலைவனின் பெயர் இடம்பெற்றது. இவனின் முழுப்பெயர் டொன் ஜுவான் குலசேகர நல்லமாப்பாண ஆகும்,
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் 1933 ஆம் ஆண்டு வெளியிட்ட யாழ்ப்பாண சரித்திரம் என்னும் நூலில் நல்ல மாப்பாணருடைய பரம்பரையை அட்டவணைப்படுத்துகிறார். அதில் நல்லமாப்பாண முதலியாருக்கும், எல்லைக்காவேத நல்லநாச்சனுக்கும் பிறந்தவளே கதிரை நாச்சன் அவனுடைய கணவன் முகமாலை வைரமுத்து வன்னியனார் என வகைப்படுத்துகிறார். இனி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடும் நல்ல மாப்பாண முதலியாரை சுவாமி ஞானப்பிரகாசர் காட்டும் டொன் ஜுவான் குலசேகர மாப்பாணனாக இனங்கானலாம். எனவே மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் முகமாலை வைரமுத்து வன்னியனார் மகனே பண்டாரவன்னியன் எனக்கொள்ளலாம். போரன் குலசேகர மாப்பாணனின் பெயருடன் தந்தை வைரமுத்துவின் பெயரையும் சேர்த்தே குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என குறிப்பிடப்படுகிறது, எனவே பண்டாரவன்னியனுடைய தாய் குழந்தை நாச்சி இவரை கதிரை நாச்சி எனக்கொள்வதே பொருத்தம். என ஒரு வரலாற்றை சமைத்திருக்கிறார் முல்லைமணி. இங்கே ஒரு நாட்டுக்கூத்தாளர் (அண்ணாவி) வரலாற்றைப் படைக்கின்ற பொழுது எவ்வகையில் அது திரிபடைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது,
எனவே 1936 களில் சுவாமி ஞானப்பிரகாசர் ஏசியாற்றி சபைக்கு வழங்கிய மாப்பாண வன்னியர் பற்றிய கட்டுரையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களின் நாட்குறிப்பின் தகவல்களும் பொருந்தி வருகின்றன. அந்தவகையில் ஞானப்பிரகாசர் புவிநல்ல மாப்பாணனின் மகள் கதிரை நாச்சன் (பெரிய பொன்னார் வன்னிச்சி) மகளே எல்லைக்காவேத நல்லநாச்சன் என்கிறார். இவருடைய கணவனே டொன் ஜுவான் குலசேகரன் நல்லமாப்பாணன். – இந்த டொன் ஜுவான் குலசேகரன் நல்லமாப்பாணனுடைய மகனாக மாப்பிள்ளை வன்னியனையே காட்டுகிறார் ஞானப்பிரகாசர். ஆனால் முல்லைமணியோ இவருடைய மகனாக பண்டார வன்னியனைக்காட்டுகிறார்.
மேலும் மயில்வாகனப்புலவர் வைபவமாலையில் கதிரை நாச்சி மகளாக முகமாலை வைரமுத்து வன்னியனாரை காட்டுகிறார். ஞானப்பிரகாசரோ கதிரை நாச்சனுக்கும் இலங்கை நாராயணனுக்கும் வள்ளி நாச்சன் என்று ஒரு மகள் இருந்ததாகவும் இந்த வள்ளிநாச்சனுக்கும் தியாகவன்னியனுக்கும் ஒரு மகள் இருந்ததாகவனும் அம்மகள் கதிர்காம வன்னியனை மனம் முடிததாகவும் அவர்களது மகனே வண்டா வைரமுத்து (1813 – 1901) என்று கூறுகிறார். இந்த வண்டா வைரமுத்து பற்றி ஜே.பி லூயிஸ் அவர்கள் தனது இலங்கையின் வன்னிமாவட்டங்கள் என்னும் நூலில் குறிப்பிடும் காலம் சரியாக ஞானப்பிரகாசரின் கட்டுரையுடன் பொருந்துகிறது. ஆகவே எப்படி 1811 இல் பிறந்த வண்டா வைரமுத்துவின் மகனாக 1811 இல் இறந்த பண்டாரவன்னியன் இருக்கமுடியும்?
அத்துடன் ஞானப்பிரகாசர் நல்லமாப்பாணன் மள் குழந்தை நாச்சனின் மகனே பண்டாரவன்னியன் என்று குறிப்பிடுகின்றார். ஒல்லாந்த வரலாற்றுக் குறிப்புக்களும் நல்ல நாச்சன் மகனே அதாவது அழகேசன் புவிநல்ல மாப்பாணன் மகனே பண்டாரம் என குறிப்பிடப்படுகிறது. இது ஒல்லாந்த வன்னித்தளபதி தோமஸ் நாகலின் குறிப்பில் தெளிவாக உள்ளது. அப்படியிடுக்க நாம் வைரமுத்துவின் மகன் பண்டாரம் என ஆதாரப்படுத்துவது பொருத்தம் அற்றது.
முல்லைமணி கற்பனையில் இயற்றிய பண்டாரவன்னியன் நாடகத்தினை மையமாக வைத்து சோழ சாம்ராச்சியத்தை மனதினில் நிறுத்து கலைஞர் கருனாநிதி ஐயா அவர்கள் பண்டாகவன்னியன் என்ற நாவலை படைத்திருந்தார்.
அதில் பண்டாரவன்னியனுக்கு நளாயினி ( நல்லநாச்சன்) என்று ஒரு தங்கை இருந்ததாகவும் அவன் பண்டாரவன்னியனின் அவைக்கழப் புலவனை காதலித்ததாகவும், சோழசாம்ராச்சியப்பார்வையில் நாவல் புனைந்திருந்தார். இதுவே இன்றும் மக்கள் மத்தியில் திகழ்கிறது. உண்மையில் பண்டாரவன்னியனின்குலமரபினை எடுத்துக்கொண்டால் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் அல்ல அவனது முழுப்பெயரை வரலாறுகளைத் தட்டிப்பார்த்தால் டொன் தியோகு பண்டாரம் அழகேசன் புவிநல்ல மாப்பாண வன்னியனாராகும். மற்றும் ஒரு விதமாகக் கூறினால்புவிநல்ல மாப்பாண அழகேசன் பண்டாரம் என்பதாகும்.
இவனுடைய வரலாற்றினை விரிவாகப் பார்த்தால். போர்த்துக்கேயர் இலங்கைத் தமிழ் வரலாறுகளில் பறங்கியர் எனகுறிக்கப்பட்டுள்ளனர்.1505ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது; அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவின் கரையோரப்பகுதி மன்னார், மற்றும் பறங்கிச் செட்டிகுளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை பறங்கியரால்தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் போனது. இதனால்அங்கு ‘வன்னியர்கள்’ இருப்பதாகவும், அதுவன்னியனார்களுடைய மாகாணம் எனவும் வன்னியனார் பற்று எனவும், தங்களுடைய வரலாற்றுக் குறிப்புகளில் சொல்லிச் சென்றனர்.
போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பலருக்கு முதலியார் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் வன்னிப்பிரதேச நிர்வாகத்தை பறங்கியர் நடத்தி வந்தனர். முதலியார் பதவி பெற்றவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்போது ‘டொன் ‘பட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. பதிவுகளில் டொன் பட்டமும் ‘நல்ல’ என்ற பெயரும் அவருடைய குலப் பெயருமான மாப்பாணவெள்ளாளர் என்ற பெயரும் பதவியும் சேர்த்து பதியப்பட்டுள்ளது.1644ம் ஆண்டு தொடக்கம் 1678ம் ஆண்டு வரை கயிலை வன்னியனார் பாணங்காமத்தில் ஆண்டுவந்தார்
அவர் 1678 இறக்க காசியனார்என்பவர் ஒரு வருடம் பனங்காமத்தில் பதவி வகித்தார்.அப்போது பூநகரி கரைச்சிப் பிரதேசத்தில் பரந்த பல வயல் வெளிகளுக்கு சொந்தக்காரராக இருந்த டொன் நல்ல மாப்பாண முதலியாரை, 1679ம் ஆண்டு டொன் பிலிப் நல்ல மாப்பாண முதலி வன்னியனார் எனப் பெயர் சூட்டி பனங்காமத்திற்கு பொறுப்பானவன்னியனாராக ஒல்லாந்தர்கள் நியமித்தனர்.(1679 – 1697) இதேவேளை டொன் பிலிப் நல்ல மாப்பாணருடைய மைத்துனரான டொன் புவி நல்ல மாப்பாண முதலியார் வன்னிப் பிரதேசத்தின்கிழக்குப் பிரதேசங்களான கருநாவல் பற்று, கரிக்கட்டுமூலை போன்ற பிரதேசங்களுக்கு முதலியாராக இருந்தார். இவரை டச்சுக்காரர்டொன் தியோகு புவிநல்ல மாப்பாண முதலி வன்னியனார் என்ற பெயரில் நியமித்தனர்.
பனங்காமத்தில் 18 வருடங்கள் அதிகாரம்செலுத்திய டொன் பிலிப் நல்ல மாப்பாண வன்னியனாருக்கு ஒரு;, அருமைத்தாய், கதிரைநாச்சி-1 அல்லது பெரிய பொன்னார் வன்னிச்சிமற்றும் குழந்தை நாச்சன் என்ற பெயர்களில் மூன்று பெண் பிள்ளைகளும் இருந்தனர்.அதேவேளை கருநாவல்பற்று கரிக்கட்டு மூலை ஆகிய பகுதிகளுக்குப் பொறுப்பான டொன் தியோகு புவி நல்ல மாப்பாணருக்குஅழகேசன் அல்லது அகிலேசன் என்ற பெயரில் மகன்
இருந்தார்
பானங்காம வன்னியனாருடைய கடைசி மகளான குழந்தை நாச்சனை, கருநாவல்பற்று கரிக்கட்டு மூலை வன்னியனாரான டொன் தியோகுபுவி நல்லமாப்பாணரின் மகன் டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாணர் திருமணம் செய்திருந்தார்.இவர் 1742ம் ஆண்டு மாசி மாதம் 21ந் திகதி கருநாவல்பற்றிற்கும், கரிக்கட்டு மூலைக்கும் டொன் தியோகு அழகேசன் புவிநல்லமாப்பாணர் வன்னியனாராக நியமிக்கப்பட்டிருந்தார். டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாணர் என்பவர் மன்னார்தொடக்கம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு வரைக்கும், பொதுவாக அடங்காப்பற்று – வன்னிப் பிரதேசம் முழுவதற்கும்பொறுப்பாக இருந்ததினாலேயே, 1767ல் டச்சுக் கவர்னர் யாழ்ப்பாணம் சென்றபோது, அவரை மன்னாரிலும், ஆனையிறவிலும்,முல்லைத்தீவிலும் வரவேற்று உபசரித்துள்ளார்.
கரிக்கட்டுமூலை கருநாவல்பற்று டொன் தியோகு அழகேசன் புவி நல்ல மாப்பாண முதலி வன்னியனாருக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தவர் பெயர் சின்னநாச்சன், இளையவர் பெயர் பண்டாரம்1767க்குப் பின்னர் கருநாவல்பற்று, கரிக்கட்டுமூலை, முல்லைத்தீவு போன்ற இடங்களுக்குப் பொறுப்பாக டொன் தியோகு அழகேசன்புவி நல்ல மாப்பாணரின் மூத்தமகளான சின்ன நாச்சன் வன்னிச்சியாராக நியமிக்கப்பட்டார்.
அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்திலிருந்து முறையாக திறைகள் செலுத்தப்படாத காரணத்தினால், அதனை நெறிப்படுத்த, 1782 ம்ஆண்டு கப்ரன் தோமஸ் நாகெல் வன்னிப் பிரதேசத்திற்கு பொறுப்பாக டச்சுக்காரால் நியமிக்கப்பட்டார்;. 1783ம் ஆண்டு லெப்ரினன்ற்தோமஸ் நாகெல் முல்லைத்தீவை கைப்பற்றுகிறான்.இதனால் சின்னநாச்சனும், பண்டாரமும் அனுராதபுரத்திற்கு அண்மையில் உள்ள நுவரகலாவௌ என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.நுவரகலாவௌ சென்ற பண்டாரமும், சின்னநாச்சனும் புலான்குளம முதியான்சேயின் பாதுகாப்பில் இருந்தனர்.
அப்போதுபுலான்குளம் முதியான்சேயினுடைய மூத்த மகன் குமாரசிங்க கனியே திசாவையாக இருந்தார். வன்னிச்சிமார் வேறு இடங்களுக்குசென்றிருந்த காரணத்தினால் 1785ம் ஆண்டு ஜுன் மாதம் பனங்காமமும் ஒல்லாந்த கப்ரன் தோமஸ் நாகெல்லினால் கைப்பற்றப்பட்டது.1785ம் ஆண்டு ஜுலை மாதம் 22 ந் திகதி கலவரம் செய்த அனைவருக்கும் கப்ரன் தோமஸ் நாகெல் பொது மன்னிப்பு அளித்தான் இதனால் பண்டாரமும், சின்னநாச்சனும் தமதிடத்திற்கு திரும்பி வந்தனர்.1785 ம் ஆண்டு ஜுலை மாதம் 22 ந் திகதி அதிகாரத்தில் இருந்த பலருக்கான நியமனங்களில் டச்சுக்காரர் பல மாற்றங்கள் செய்தனர்.
இக்காலத்தில் பல பிரிவுகளின் எல்லைகள் மாற்றப்பட்டும் குறைக்கப்பட்டும் இருந்தன. 1785ம் ஆண்டு சின்னநாச்சன் நுவரவௌ குமாரசிங்க திசாவையை திருமணம் செய்;துகுமராசிங்க திசாவையுடன் (வன்னியனார்)சின்னநாச்சன் தனது புகுந்த வீடான நுவரகலாவௌ சென்றார். சின்னநாச்சனுக்குப் பின்னர் அவரது சகோதரர் பண்டாரம்கரிக்கட்டுமூலைக்கு ‘வன்னியனராகப்’ பதவி ஏற்றார். வெறுமனே பண்டாரம் என அழைக்கப்பட்டவர் வன்னியனார் பதவி பெற்றதும்பண்டாரம் 10 வன்னியனார் ஆனார். இதற்குப் பின்னர் டச்சு ஆட்சியாளர்களால் இவர் பண்டார வன்னியன் என அழைக்கப்பட்டார்.
ஒல்லாந்தர் சாயவேரை இலவசமாக பிடுங்கித்தரும்படி கட்டளையிட பண்டாரவன்னியன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில்இருந்த ஒல்லாந்தர் கோட்டையை முதன்முதலாக தாக்குகிறான் இது தோல்வியில் முடிந்தது. இதனால் பண்டாரத்திற்குவழங்கப்பட்டிருந்த வன்னியனார் பதவி 1795இல் பறிக்கப்படுகிறது. அப்போது பதவியிழந்த பண்டாரவன்னியன் சிங்களதிசாவைகளினால் ‘வன்னிப் பண்டாரம்’ என அழைக்கப்பட்டான்.1795ம் ஆண்டு மார்ச் மாதம் 18 ந் திகதி தொடக்கம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் படிப்படியாக ஆங்கிலேயர் வசப்பட்டன.
1800 ஆம் ஆண்டு கவர்ணராக நோர்த் நியமிக்கப்ட கவர்ணர் நோர்த் ஒல்லாந்தர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களுக்குநியமணங்களை வழங்கினார். அதன்போது பண்டாரவன்னியனுக்கும் இலுப்பைக்குளம் என்ற பகுதிக்கு வன்னியனாக நியமணத்தைநோர்த் வழங்குகிறான். இப்பிரதேசம் பின்னர் பண்டாரஇலுப்பைக்குளம்; என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.
1801ம் ஆண்டு முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கு வொன் டிறிபேர்க் என்ற ஒல்லாந்தன் டிறிபேர்க் ஆங்கிலேயர் காலத்திலும் பிஸ்கலாகவும்தளபதியாகவும் நியமிக்கப்பட்டான்.இதன்பின்னர். 1803; ஆண்டு ஜுன் மாதம் 26ந் திகதி கண்டி அரசன் விக்கிரம ராஜசிங்கனும் முதன்மந்திரி பிலிமத்தலாவையும் சூழ்ச்சிசெய்து ஆங்கிலேயரின் பாதுகாப்பில் இருந்த முத்துச்சாமியை சிரச்சேதம் செய்தனர்.
இதனால் கண்டி ராஜதானியில் மீண்டும் முறுகல்நிலை ஏற்பட்டது. இதைச்சாட்டாக வைத்து பண்டாரவன்னியன் ஆங்கிலேயர்களைத் தனது பிரதேசத்திலிருந்து வெளியேற்றவேன் என சபதங்கொண்டுகொட்டியாரத்தில் முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதலைத் தொடங்குகிறான். இதனால் பிரித்தானியப்படை அங்கிருந்துபின்வாங்கியது. ஆங்கிலேயர் மன்னாருக்குச் செல்லும் வீதி முழுவதும் மரங்களைத் தறித்து விழுத்தி மன்னார் யாழ்ப்பாணத்திற்கானபோக்குவரத்தை தடை செய்தார்.
இதன்பின்னர். தனது மைத்துனரான குமாரசிங்க வன்னியருடன் இணைந்து 1803 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்… 25ந் திகதி முல்லைத்தீவிலிருந்த அரசாங்க இல்லத்தையும் கோட்டையையும் தாக்கினான் கப்ரன் டிறிபேர்க் யாழ்ப்பாணத்திற்கு தப்பிஓடுகிறான். முல்லைத்தீவைக் கைப்பற்றிய பண்டாரம் வன்னியனார் தன்னோடு வந்திருந்த குமாரசிங்க திசாவை வன்னியனாரிடம் அப்பிரதேசத்தை ஒப்படைத்துவிட்டு ஆனையிறவில் தாக்குதலை மேற்கொள்ள கற்சிலைமடுவிற்கு சென்று தங்கியிருந்தார்.
அங்கிருந்து ஆனையிறவிற்கு அண்மையிலிருந்த சிறு சிறு கோட்டைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் இருந்தார்.இதன்போது 1803ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31 ந் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரிலிருந்து துணுக்காய் சென்ற வொன் றிபேக் பண்டாரவன்னியன் தங்கியிருந்த கற்சிலைமடுவில் அதிரடித்தாக்குதலை மேற்கொள்கின்றான். இதனால் பலர் கொல்லப்பட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 வீடுகளில் இருந்த பண்டாரத்தின் சொத்துக்கள் எரிக்கப்பட்டன. ஒன்றரை இறாத்தல் குண்டுகள் போடக்கூடிய கண்டி இராஜதானியின் முத்திரை பொறிக்கப்பட்ட பீரங்கித் துப்பாக்கி, 55 ஆயுதந் தாங்கிகள், பன்னிரண்டு ஈட்டிகள், இரண்டு வாள்கள், இரண்டு கிறிஸ் கத்திகள், ஒரு துப்பாக்கி வாய்ச் சரிகை, ஒரு துப்பாக்கிக் குழாய், இரண்டு கூடை துப்பாக்கி ரவைகள் போன்றவற்றை ஆங்கிலப் படைகள் மீட்டனர்.
இதனால் பண்டாரவன்னியன் தனது இருப்பிடமான பண்டார இலுப்பைக் குளத்திற்கு தப்யோடினார். இதன் நினைவாக வொன் றிபேக்கின் தினக்குறிப்பிலிருந்த தகவலைப்பார்த்த 1904 – 1905ல் முல்லைத்தீவு பிரிவிற்கு உதவி அரசாங்க அதிபராக ஆர்.ஏ.ஜி.வெஸ்ரிங் என்பவர் இருந்தார்.
1803 ல் பண்டாரம் வன்னியனாரை கற்சிலைமடுவில் வொன் டிறிபேர்க் தோற்கடித்ததை உறுதிப்படுத்த, 1904ல் அதாவது சுமார் நூறு வருடங்களின் பின்னர் ஒரு நடு கல்லை நிறுத்தினார். இந்தக் கல்லிலே
“HERE ABOUTS CAPTAIN VON DRIEBERG DEFEATED PANDARA VAWNIYAN 31ST OCTOBER 1803.”
என்று பொறிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய பண்டாரவன்னியன் 1811 ஆம் ஆண்டுவரை ஆங்கிலேயப்படைகளை தாக்கும் திட்டத்துடன் நடமாடினான் என கதிர்காமநாயக்க முதலி ஆளுநர் ரேணருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். இவரே பண்டாரவன்னியனின் நடவடிக்கைகளை ஆங்கிலேயருக்கு தெரியப்படுத்தியவராவார். மாறாக காக்கைவன்னியன் அல்ல.எனவே பண்டாரவன்னியன் பெரும் மன்னாகவோ இல்லாது சாதாரண படைத்தளபதியாக கிளர்ச்சியாளனாகவே செயற்பட்டிருக்கின்றான்.
அத்துடன் திரிபுபட்டிருக்கின்ற அவனுடைய வரலாறு எவ்வளவு பெரிய வரலாற்றுத் திரிபை எமக்குத் தந்திருக்கிறது. இதன்மூலம் வரலாற்றில் இல்லாத பழைப்பகுதியில் 1901 ஆண்டுகளில் வாழ்ந்த பண்டா வைரமுத்து என்கின்ற பெயரை வைத்துக்கொண்டு குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன் என்று முல்லைமணி அவர்கள் கற்பனையாக புனைந்த காவியம் இன்று வரலாறாகி நிலைக்க உண்மை வரலாறு மங்கியே விட்டது.
வெறும் 150 வருடங்களின் முன் வாழ்ந்த பண்டாரவன்னியனது வரலாற்றிலேயே இவ்வளவு திரிபு என்றால் மகாவம்சம் முதலான வரலாற்று நூல்களில் எவ்வளவு திரிபு இருக்கும் என எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை. வரலாறு என்பது ஒரு இனத்தின் காலத்தைக்காட்டும் கண்ணாடி எனவே வருங்காலத்திலாவது வரலாற்று திரிபில்லாது வரலாற்றுண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே எல்லோரது ஆசையாகும்.
உசாத்துணை நூல்கள்
1, 1928 இல் சுவாமி ஞானப்பிரகாசரினால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம்.
2, 1933 இல் முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்ப்பாண சரித்திரம்.
3. அடங்காப்பற்று வன்னி வரலாறு பாகம் 2 (பண்டாரவன்னியன்)
4, Account of the Vanni – 1793 By Liet.Thomas nagel RAS Journal – 1948
5, Duch reports – 1795 Translated By R.G.Anthoniz
6, Manual of The Vanni District (Nothren Province) 1895 By j.pentry Lewis
7, List of Inscriptions on Tomstones and Monuments in Ceylon – 1913 By John Pentry Lewis
8, கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மை By பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்,
பண்டாரவன்னியனின் 214 ஆம் ஆண்டு நினைவுநாளில் இன்று வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.