Wednesday, September 13, 2017

யாழ் ஊர்காவற்றுரையில் பாரிய விபத்து (படங்கள்)

 யாழ் ஊர்காவற்றுரையில் நடந்த பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.




அவுஸ்திரேலியா வீரரின் அதிரடிக் கருத்து

லட்சுமண் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி கொடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து நேற்று அளித்த ஒரு பேட்டியில்,
‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி அவுஸ்திரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கூறியிருந்தார்.
மேலும் கோலியே, தற்போதைய கட்டத்தில் சுமித்தை விட சிறந்த கேப்டன் என்றும் கூறினார்.
இந்தக் கருத்துக்கு அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பதிலடி அளித்துள்ளார்.
கோலி மற்றும் ஸ்மித் இருவரில் யார் அதிக ரன்கள் குவிப்பார்கள் என்பது ஒரு பிரச்சினையே அல்ல.
இறுதியில் யார் அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய கேப்டனாக இருக்கிறார் என்பது தான் முக்கியம் எனக் கூறினார்.

வித்யா வழக்கு: பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க விடுதலை!

புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஊர்காவற்துறை நீதிமன்றினால் கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
சந்தேகநபர்நார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணைக்கோரிக்கையினை முன்வைத்தனர்.
இதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் ஆஜனான அரச சட்டவாதி நிசாந்தன் தமது ஆட்சேபனையை தெரிவித்தார்.
எனினும் ஆட்சேபனைக்கான காரணங்களில் மன்று திருப்தியடைதாத காரணத்தினால் குறித்த சந்தேகநபரான பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை 3 லட்சம் ரூபாய் காசு மற்றும் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையுடன் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு இடம்பெறும் சந்தரப்பத்தில் சந்தேகநபர் வெளிநாட்டிற்கு செல்லத்தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டுள்ளது.
மேலும் குடிவரவு குடியகல்வு திண்ணைக்கள அதிகாரிகளுக்கு சந்தேநபர் தொடர்பில் நீதிமன்ற பதிவாளரினால் அறிவிக்க கட்டளையிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமூகமளித்து கையொப்பொம் இடுமாறும் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கை வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்

3 கோரிக்­கை­களை முன்வைத்து 2 நாள் வேலை நிறுத்தம்

இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் மூன்று கோரிக்­கை­களை முன்வைத்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இன்று (புதன்கிழமை) நண்­பகல் 12மணி முதல் 48 மணித்­தி­யால பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.
மூன்று கோரிக்கைகள்;
01. நுகர்­வோரின் மின் கட்­டண பட்­டி­யலை சரிப்­ப­டுத்­த ­வேண்டும்.
02. கொடுப்­ப­ன­வுகள் செலுத்­தப்­ப­டாமல் இருக்கும் ஊழியர் சேம­லாப நிதி­யத்தில் 2ஆயிரம் மில்­லியன் ரூபாய் வைப்­பி­லி­ட­வேண்டும்.
03. சம்­பள முரண்­பா­டு­களை தீர்க்­க­வேண்டும்
என்ற மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஐபோன் 8 வெளியீட்டு விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..

அப்பிள் நிறுவனத்தின் 3 புதிய ஐபோன்கள், வோட்ச் 3, டி.வி 4 கே உள்ளிட்ட தயாரிப்புகள் உலக சந்தையிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
உலகின் புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் அடுத்த தலைமுறைக்கான புதிய தயாரிப்புகளை இன்று (அமெரிக்க நேரப்படி) வெளியிட்டது.
இதையடுத்து அப்பிள் நிறுவனம் ஐ-போன் 8, 8 பிளஸ் மற்றும் ஐ- போன் எக்ஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட் போன்களை வெளியிட்டன. இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:
* டுவல் கெமரா(8 பிளஸ்)
* 8 அடுக்கு பிராசஸர்
* தண்ணீர் மற்றும் தூசுக்கான பாதுகாப்பு வசதி
* 4.7 இன்ஞ் தொடு திரை(ஐபோன் 8); 5.5 இன்ஞ் தொடு திரை(ஐபோன் 8 பிளஸ்)
* வயர்லெஸ் சார்ஜர்
* 60 பிரேம்களில் 4 கே வீடியோ எடுக்கும் வசதி
* ஐபோன் 7 ஐ விட மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் வசதி
* 240 பிரேம்களில் எச்.டி., வீடியோ எடுக்கும் வசதி
* இதன் விலை இலங்கை மதிப்பில் ரூ.107,460 (ஐபோன் 8); ரூ.122,026 (ஐபோன் 8 பிளஸ்)
ஐபோன் எக்ஸ்:

* பேஸ் ரிகக்னைசன்(பாதுகாப்பு அம்சம்)
* ஓ.எல்.இ.டி., தொடு திரை
* 5.8 இன்ஞ் தொடு திரை(458 பிக்சல் பெர் இன்ச்)
* அனிமேசன் ஆகும் இமோஜிக்கள்
* வயர்லெஸ் சார்ஜர்
* இதன் விலை இலங்கை மதிப்பில் சுமார் ரூ 152,850
அப்பிள் 4கே டிவி
* 4கே துல்லிய வீடியோ வசதி
* எச்.டி.ஆர்.,10 மற்றும் டால்பி விஷன் வசதிகள்
* ஏ.10 எக்ஸ் பிராசஸர் வசதி
* விளையாட்டு மற்றும் செய்திகளை நேரலையில் காணும் வசதி(தற்போது அமெரிக்காவில் மட்டும்; விரைவில் மேலும் 8 நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டம்)