Monday, August 14, 2017

செஞ்சோலை படுகொலை: யாழில் அஞ்சலி!

விமானக்குண்டு வீச்சின் மூலம் செஞ்சோலைச் மாணவர்கள் 54 பேர் படுகொலை செய்யப்பட்ட 11வது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் மதியம் 1.00 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் பொது ஈகைச்சுடரினை ஏற்றி மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர், மாணவர்கள் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியும் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முல்லைதீவு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளட்டதில் 54 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் பணியாளர்கள் என பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆவா குழுவினர் என்பது புலிகள் இல்லை!

வடக்கின் தாக்குதல்களுக்கு புலிகளின் பெயர் பயன்படுத்துவது ஏற்கத் தகாதது என புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஆவா குழுவினர் என்பது புலிகள் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
வடக்கில் அண்மைக்காலமாக அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இவ்வாறான சம்பங்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளே காரணம் என தவறான கருத்து மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயற்படுவோரை முன்னாள் போராளிகள் என கூறுவது ஏற்க முடியாது.
அத்துடன் வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு தொடர்பில் இராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

செஞ்சோலையில் எம் பிஞ்சுகளை சிங்களவன் அழித்த தினம் இன்று...

14.08.2006 அன்று சிங்கள நாய்கள் எமது பிஞ்சு குழந்தைகள் மீது கொடூரமான விமானத்தாக்குதல்கள்
எங்கள் நெஞ்சம் மறக்குமா.???

செஞ்சோலை

வதங்கிய செடிகளில்
வாடிட மலர்கள்
வசந்தங்கள் காணாது
வாழ் விழந்திடக் கூடாதென
வலிகள் மறக்க
வறியவன் வரைந்த ஓவியம்
வன்முறை சூடிய சிங்கள
வதைகளில் சிதைந்த
வையம் காணா
வலிகளின் சாட்சியம்
தமிழீழம் தாளா
தலைமுறைகள் சிதறிய
செஞ்சோலைக் காவியம்

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்

தென்னமரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் இலங்கை தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தென் அமெரிக்காவின் பரகுவேயில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியிலேயே யாழ்ப்பாணம், காரைநகர் பக்தர்கேணியை சேர்ந்த சிவபாலன் நவமணி தம்பதியரின் மகனான நிமலன் என்பரே சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

குறித்த போட்டியில் அவர் 42 கிலோமீற்றர் தூரத்தினை 5 மணித்தியாலங்கள் 23 நிமிடங்கள்  53 செக்கன்களில் கடந்து சாதனைபடைத்து இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது இவரது இரண்டாவது மரதன்ஓட்ட போட்டி என்பதுடன் இவரது முதலாவது போட்டி கடந்த 2014 ஆம் ஆண்டில் பங்குபற்றி இதே தூரத்தினை 5 மணித்தியாலங்கள் 44 நிமிடங்களில் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்காவில் தரையிறக்கம்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று (திங்கட்கிழமை)  முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை பாரியளவு பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது.
அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தரையிறங்கவுள்ளது.
குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த அதிரடிப்படை!

யாழ். பல்கலைக் கழக சட்டத்துறை மாணவர்களின் நூல் வெளியீட்டின்போது சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்தவர் உள் நுழைவது தொடர்பில் எம்மிடம் முன் அனுமதி பெறப்படவில்லை என துணைவேந்தர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை மாணவர்களின் நீதம் நூல் வெளியீட்டிற்கு வருகைதந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வருகைதந்திருந்தார்.
அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளும் கைலாசபதி கலையரங்கின் உள்ளேயும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பல்கலைக் கழக வளாகம் மற்றும் நிகழ்வு மண்டபங்களின் உள்ளே விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் ஆகியோர் ஆயுதங்களுடன் நின்றமை தொடர்பில் துணைவேந்தரிடம் தொடர்பு கொண்டு கேண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் துணைவேந்தர் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ். பல்கலைக் கழக சட்டத்துறை மாணவர்களின் நூல் வெளியீட்டின்போது சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்தவர் உள் நுழைவது தொடர்பில் எம்மிடம் முன் அனுமதி பெறப்படவில்லை.
அதாவது நிகழ்விற்கு நீதிபதிகளை அழைத்திருந்தோம் இருப்பினும் அவர்களின் பாதுகாப்பிற்கு பொலிசாரே உள்ளே வருவர் என்றே எண்ணியிருந்தோம்.
இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் வருவதாக முன்கூட்டியோ அல்லது அந்த சந்தர்ப்பத்திலோ எமற்குத் தெரியப்படுத்தவில்லை.
வந்தவுடன் உள் நுழைந்தனர். இவ்வாறு உள் வந்த அதிரடிப்படையினர் நிகழ்வு முடிவுறும் வரையில் உள்ளே நின்று சென்றனர் என்றார்.

ஓகஸ்ட் 14: பாகிஸ்தான் தனிநாடாக பிரிந்தது!

பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக ஆன நாள் இன்று.
1947 இல் இந்தியாவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாகிஸ்தான்.
ஓகஸ்ட் 14- 1947 இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் அதிக அளவு கலவரங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு படையினர் குவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
பர்கினாவின் தலைநகர் ஔகடோவுகோவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டின் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயல் நாட்டினர் அதிக வந்து செல்லும் உணவு விடுதி ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது ஆகும்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கக் கூடும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
அமெரிக்க தூதரகத்தில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
பருத்தித்துறை கடற்பகுதி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்கள் சென்ற படகும் சிறைபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.