Friday, September 8, 2017

பாரியளவிலான வெடிகுண்டு செயலிழக்க வைப்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வேம்போடுகேணி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றுமுன்தினம் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் 500 கிலோகிராம் கிபிர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பளைப் பொலிசாரால் இந்திராபுரம் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமிற்றர் சுற்றளவில் உள்ள கிராம மக்களை வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது
அத்துடன் வயதானோர்களை வாகனங்களிலும் பொலிசார் ஏற்றி அக் கிராமத்தை விட்டு அப்புறப்படுத்தி உள்ளனர்.
பின்னர் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்திராபுரம் பகுதிக்கு விமானப் படையினர் வருகை தந்தனர்.
பின் குறித்த கிபிர்க் குண்டினை சுமார் பத்து அடிக் குழி ஒன்றினைத் தோண்டி அதனுள் வீழ்த்தியே நான்குமணி ஒரு நிமிடத்திற்கு செயலிழக்க செய்துள்ளனர்.
செயலிழக்கச் செய்யும் பொழுது யாழ் கண்டி வீதியின் போக்குவரத்து முகமாலைப் பகுதியிலும் பளைப் பகுதியிலும் நிறுத்தப்பட்டே செயலிழக்கவைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இனத்தில் பிறந்தது என் குற்றமா?

ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கிலிருந்து ஒரு தந்தையை பறிகொடுத்த சிறுமியின் கவிதை பலரையும் அதிர வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

அந்த பெண்ணின் கவிதையில்
ஜனாதிபதி அங்கிள்!

*நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார்.

*நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்று சம்பந்தர் தாத்தா கூறுகின்றார்.

*உங்களை கொல்ல வந்தவரையே நீங்கள் மன்னித்து விடுதலை செய்ததாக பத்திரிகை மாமாக்கள் கூறுகின்றனர்.

*அதுமட்டுமன்றி நீங்கள் உங்கள் வீட்டு சாப்பாட்டை உங்கள் கையாலே சாப்பிடுகின்றீர்களாம்.

*உங்கள் கைகால்களை உங்கள் கையால் கழுவுவதைக்கூட பெருமையாக சொல்லுவார்கள் போல் இருக்கு.

*இந்தளவு நல்லவாரன, எளிமையானவரான, அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் என் அப்பாவை மட்டும் எனக்கு காட்ட மறுக்கின்றீர்கள்?

*நான் பிறந்தது முதல் என் அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை. நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது அப்பாவை ராணுவம் பிடித்து சென்றதாக அம்மா கூறுகின்றா.

*சம்பந்தர் தாத்தாவின் மகள் அவருடன் கூட இருந்து ஒவ்வொரு நாளும் தன் தந்தையை பார்க்கிறார்.

*சுமந்திரன் மாமாவின் பிள்ளைகள் அவருடன் ஒன்றாக கூட திரிந்து மகிழ்கிறார்கள்.

*மாவை சேனாதிராசா மாமா தன் பிள்ளைகளை லண்டனில் சந்தோசமாக வைத்திருக்கின்றார்.

சரவணபவன் மாமாவின் மகள் பிறந்தநாளுக்கு நீங்களே வந்து கேக் ஊட்டுகின்றீர்கள்.

*சிறீதரன் மாமா தன் பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் வைத்து படிப்பிக்கின்றார்.

*நானும் அவர்களது பிள்ளைகள் போல் என் அப்பாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறேன்.

*நானும் என் அப்பாவின் கை பிடித்து பாடசாலை செல்ல விரும்புகிறேன்.
நானும் அப்பாவின் முதுகில் எறி உப்பு மூட்டை விளையாட்டு விளையாட விரும்புகிறேன்.

என் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா மாமா?
நான் என்ன தவறு செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை?
தமிழ் இனத்தில் பிறந்தது என் குற்றமா?

பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு

மோசமான பொடுகை வெங்காயச்சாறு விரட்டிவிடும்.. வெங்காயச்சாறை பயன்படுத்தி எப்படி பொடுகை விரட்டலாம் என்று இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
பொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது.
பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது.
குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும்.
இதற்கு வெங்காயச் சாறு எப்படி உபயோகப்படுத்தினால் பொடுகு போக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. உபயோகித்து அதன் பயனை பெறுங்கள்.
புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச் சாறு :
புடலங்காய் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். காய்ந்ததும் தலைமுடியை அலசவும்.
பாசிப்பயிறு மற்றும் வெங்காயச் சாறு :
பாசிப் பயிறை பொடி செய்து அதனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவி ஊற விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.
பீட்ரூட் சாறு மற்றும் வெங்காயச் சாறு :
பீட்ரூட் பொடுகை கட்டுப்படுத்தும். அதன் சாறு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.
ஆப்பிள் ஜூஸ் மற்றும் வெங்காயச் சாறு :
ஆப்பிள் மற்றும் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கூந்தல் அடர்தியாகவும் பொடுகின்றியும் ஆரோக்கியமக திகழும்.
கற்றாழை மற்றும் வெங்காயச் சாறு :
கற்றாழை சதைப் பகுதியுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை தரும்.
வெந்தயம் மற்றும் வெங்காய சாறு :
2 ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து அதனுடன் சின்ன வெங்காய சாறி அரை கப் கலந்து தலையில் தடவுங்கள்.
30 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.