Friday, August 18, 2017

இலங்கை கடற்படைத் தளபதியாகத் தமிழர் நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் சற்று முன்னர் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் 21 வது தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடற்படையின் தற்போது தளபதியாகப் பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில் விடுதலை புலிகளுடனான யுத்தத்துக்குப் பின்னர், முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்குத் தமிழர் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அறிவித்தல்!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஆலோசனைகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார்.
இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு முழுவதும் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் பரீட்சார்த்திகளுக்கென வெளியிட்டுள்ள ஆலோசனைகள் வருமாறு:
01. வினாப் பத்திரங்கள் இரண்டு வழங்கப்படும்.
முதலாவது வினாப் பத்திரம் காலை 9.30 முதல் காலை 10.15 வரையில் 45 நிமிடங்கள்
இரண்டாவது வினாப் பத்திரம் 10.45 முதல் நண்பகல் 12.00 மணி வரை 1 மணியும் 15 நிமிடங்கள்
02. காலை 9.00 மணிக்கு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களை பரீட்சை மண்டபத்தினுள்ளே அமரச் செய்ய வேண்டும். இது தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
03. பரீட்சார்த்திகள் தங்களது சுட்டிலக்கங்களை தனது ஆடையின் இடது பக்க மேல் பகுதியில் அணிந்திருத்தல் வேண்டும்.
04. விடை எழுதுவதற்கு பேனா அல்லது பென்சில் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்த முடியும்.
05. பரீட்சை சுட்டிலக்கத்தை தெளிவாக எழுதவும், வினாத்தாளில் 01 ஆம் பக்கத்திலும்,
03 ஆம் பக்கத்திலும் இதற்கான பிரத்தியேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
06. விடை எழுதும் போது வினாப் பத்திரத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
07. பரீட்சை வினாத்தாள் கையில் கிடைத்தவுடன் பதற்றப்பட வேண்டாம். வினாப் பத்திரத்தை சிறந்த முறையில் வாசித்து விடை எழுதவும்.
08. செய்கை வழிக்கான மேலதிக தாள்கள் வழங்கப்படும்.
பெற்றாருக்கான ஆலோசனைகள் :
01. காலம் தாமதிக்காமல் பரீட்சை மண்டபத்துக்கு பிள்ளைகளை அழைத்து வர வேண்டும்.
02. பெற்றோர் பரீட்சை மண்டபம் அமையப் பெற்றுள்ள பிரதேசத்திற்குள் பிரவேசிக்க கூடாது.
03. மாணவர்களின் இடைவேளை நேரத்தில் பெற்றோர் பரீட்சை மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
04. மாணவர்களுக்கு சிறியளவிலான உணவும், தண்ணீர் போத்தல் ஒன்றும் கொடுத்து அனுப்புங்கள்.
பரீட்சை தொடர்பிலான மேலதிக அறிவுறுத்தல்கள் பெற வேண்டியிருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் பெற்றோர் தொடர்புகொள்ளலாம் எனவும் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ள : 1911
பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழு : 0112 784208 / 0112 78 45 37 / 0112 31 88 350 / 0112 31 40 314
பொலிஸ் நிலையம் : 0112 42 11 11
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம் 119

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்.

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் அல்வா வாசு கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டு இருந்து இன்று காலமானார்.
இவர் 90ம் ஆண்டு காலப்பகுதியில் வடிவேலு மற்றும் பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் துயரால் ஏங்கித்தவிக்கும் இவரின் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளைப் பூண்டில் இவ்வளவு விஷயம் இருக்கா!!

மனித உடலில் கெட்ட கொழுப்புகள் இரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் படிவதுடன் இரத்த அழுத்தம் மிகுதியாக ஏற்பட்டு மிகக் சிறிய வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறப்பிற்கு வழிவகுக்கிறது.
அதற்காக கொழுப்பு உணவுகளை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு இதயம் நன்கு செயல்படும்.
வெள்ளைப் பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது.மேலும் இதில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் இது கொலஸ்ட்டால் அளவை வேகமாக குறைக்க உதவும்.
இதன் பலனை அறிந்து கொள்ள தினமும் ஒரு பல் வெள்ளைப் பூண்டை பச்சையாக சாப்பிடுங்கள்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்:
  • முருங்கைக்காய் – 4
  • பூண்டு – 5 விழுதுகள் (நசுக்கிய விழுதுகள்)
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • மிளகு – சிறிது
  • கருவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது – சிறிது
  • மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
  • சிறிய வெங்காயம் – 8 (தோல் நீக்கி, நான்காக குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவும்)
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • சாம்பார் பருப்பு – 5 டீஸ்பூன்
செய்முறை :
முருங்கைக்காய்யை விரல் நீளத்திற்கு வெட்டி கொள்ளவும்.
வெட்டிய முருங்கைக்காய்யுடன் சாம்பார் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்.
நன்கு வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்.
வேகவைத்த சாம்பார் பருப்பை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
சாம்பார் பருப்புடன் பிரித்து எடுத்த முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு விழுதுகள்,கருவேப்பிலை , மிளகு சேர்த்த பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்பு பிரித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துள்ள சாம்பார் பருப்புடன் கூடிய முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதிக்கும் பொது, கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிது நிமிடங்களில் இறக்கி விடவும்.
சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி.