Thursday, August 3, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் அரசுக்கு நஷ்டம்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் அரசாங்கத்துக்கு 46000 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.
மேலும் ஒருவருடத்திற்கு 9100 மில்லியன் ரூபா செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்த்தில் வறிய குடும்பங்களின் வீடமைப்பு திட்டத்திற்காக 600 குடும்பங்களுக்கு 1 இலட்சம் ரூபாவும், 256 குடும்பங்களுக்கு உபகரங்களும் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்துக்கொண்டார்.
இதுதொடர்பில் அமைச்சர் தலதா அத்துகோரல கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை போல நாட்டின் நலனை பற்றி சிந்திக்காது தமது குடும்ப நலனை மட்டும் சிந்திக்கவில்லை. இன்று நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.
உமா ஒயா திட்டம் மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் 535 அமெரிக்க டொலர் செலவில் ஆரம்பிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டளவில் அதன் 62 சதவீதமான பணிகள் நிறைவுப்பெற்றிருந்தது. ஆனால் பதுளை, பண்டாரவளை மக்கள் இன்றைய அரசாங்கத்தில் தான் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் அரசாங்கத்துக்கு 46000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒருவருடத்திற்கு 9100 மில்லியன் ரூபாய் செலுத்தப்படுகின்றது.
காலிமுகத்திடலில் அமைக்கப்படும் கோப் சிட்டிக்கு 535 ஹெக்டயரும் 2ஹெக்டயர் ஹெங்கிலா சின்கர கம்பனிகளுக்கும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எழுதிகொடுக்ககப்டும் போது யாரும் ஆர்பாட்டங்களையோ, கருத்துகளையோ தெரிவிக்கவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடரவில்லை.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே பிரதமர் சீகா அரசாங்கத்துடன் பேசி மறுபடியும் அவற்றை பெற்றுக்கொண்டது என அவர் தெரிவித்தார்.

யாழில் மீண்டும் வாள்வெட்டு

யாழ். சுன்னாகம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், வாள்வெட்டுக்கு தாக்குதலுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையிலும், மற்றொருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சமீபகாலமாக யாழில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாள்வெட்டில் ஈடுபட்டது முன்னாள் போராளிகள் இல்லை– சட்டத்தரணி சுகாஸ்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டவர்கள் முன்னாள் போராளிகள் என பொலிசார் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என சட்டத்தரணியும், சமூக செயற்பாட்டாளருமான சுகாஸ் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது;
பொலிஸாரை வாளால் வெட்டியமை தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட இருவரில் யாரும் முன்னாள் போராளி இல்லை.
அவர்களில் ஒருவருக்கு ஆஜராகின்ற சட்டத்தரணி என்ற வகையில் பொறுப்போடு தெரிவிக்கின்றேன்…
உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்…அப்பாவிகளின் கைதுகள் தடுக்கப்பட வேண்டும்…நீதிக்கான போராட்டம் தொடரும்… எனப் பதிவிட்டுள்ளார்.
அண்மையில்,யாழ் கொக்குவிலில் மோட்டார் சைக்கிளில் வந்த 10இற்கும் மேற்பட்டவர்கள், தமிழ், சிங்கள பொலிசார் இருவரை வாளால் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதில் ஈடுபட்ட அனைவரும் முன்னாள் போராளிகள் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்: களமிறங்கும் தினேஷ் சந்திமால்!


இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இலங்கை அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலே நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் இன்று கொழும்பு நகரில் தொடங்குகிறது.
இன்றைய டெஸ்ட்டில் கேப்டன் தினேஷ் சந்திமால் களமிறங்க உள்ளார்.
நிமோனியா காய்ச்சலில் இருந்து அவர் குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது வீரர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.