Tuesday, August 15, 2017

38 ஏக்கர் காணியினை விடுவித்தது இராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால் கையளிக்கப்பட்டன.
கரைச்சி, கண்டாவளைப் பகுதிகளில் உள்ள தனியாரின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் உரிமையாளர்களை இனங்கண்டு காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைகள் பிரதேச செயலர்கள் ஊடாக நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


இந்திய சுதந்திரதிற்காய் போராடியவர்களுள் இவரும் ஒருவரே

 பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர். 30 வயதில் பாளை யக்காரராகப் பொறுப்பேற் றார். வீரபாண்டியன், கட்ட பொம்மன், கட்டபொம்ம நாயக்கர் என்று பல பெயர் களால் அழைக்கப்பட்டார்.

இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.

"சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்"



தமிழ் மொழிக்கு கூகுள் கொடுத்த முக்கியத்துவம்!!

தமிழ் மொழிக்கு கூகிள் புதிய அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் கூகிள் நிறுவனம் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
தட்டச்சு செய்வதை விட குரல் பதிவின் மூலம் எழுத்துக்களை பதிவுசெய்வது 3 மடங்கு வேகமாக நிகழக்கூடியது.
இதனைக் கருத்தில் கொண்டே இந்த வசதியினை கூகுள் நிறுவன் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகிளின் பேச்சு அங்கீகாரம் என்ரொய்ட் குரல் தேடலின் 119 மொழிகளுடன் இணைந்து செல்கிறது.
இந்தநிலையில் அமெரிக்க ஆங்கிலத்தில் எமோஜியுடன் குரல்களை வெளிப்படுத்த முடியும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.