Saturday, November 25, 2017

கொழும்பில் தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்ட ஆடையுடன் இளைஞர்கள் படையெடுப்பு 

 புதிய அரசயிலமைக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து உந்துருளிப் பேரணியொன்றினை ஆரம்பித்துள்ளது.
தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும் சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும் கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
 கொழும்பு மத்திய தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலையில் இளைஞர் படையணி மத வழிபாட்டை அடுத்து, இந்த பேரணையை ஆரம்பித்ததாக தெரியவருகிறது.
புதிய அரசயிலமைக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் பிவித்துரு ஹெல உறுமய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 17, 2017

திருடப்பட்ட 15 கைத்தொலைபேசிகளுடன் இருவர் கைதான சம்பவம் யாழ்.பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் பருத்தித்துறையில் தொலைபேசி கடை ஒன்றை உடைத்து பல பெறுமதியான கைத்தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பருத்தித்துறை பொலிசார் மற்றும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (16) களவாடப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றுடன் பருத்தித்துறையை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்னும் ஒருவர் பருத்துறையில் கைது செய்ய்பட்டார்.
இருவரிடமிருந்தும் களவாடப்பட்ட 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 கைத்தொலைபேசிகளை பொலிசார் மீட்டுள்ளனர்.
அத்துடன் இருவருமே பருத்தித்துறையை வதிவிடமாக கொண்ட 21, மற்றும் 23 வயதை உடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Wednesday, November 15, 2017

இராணுவத் தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!-

இராணுவ தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து, அப்போதைய நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டி வெலான கைது செய்து சென்ற நபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை மீட்டுத் தருமாறு கோரியும் அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாவற்குழி இராணுவ முகாம் தளபதி துமிந்த கெப்டி வெலாவன முதலாம் எதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இரண்டாம் எதிரியாக இராணுவ தளபதியும், மூன்றாம் எதிரியாக சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டு இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு தொடர்பான விசாரனையானது இன்று (15) யாழ் மேல் நீதிமன்றில் இடம்பெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகள் கொள்ளை !

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகள் கொள்ளை !கோப்புப்படம்
குறித்த நபர் 15 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (10.11.2017) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, சந்ததேகநபரை நேற்று, மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

தடம் புரண்டது ரயில்

ரயில் ஒன்று தடம்புரண்டதால், புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான புகையிரத பாதையில் குறித்த ரயில தடம் புரண்டுள்ளது.
நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இன்று (புதன்கிழமை) காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த புகையிரத சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு – கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதங்களும் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Tuesday, November 14, 2017

மட்டக்களப்பில் வீதிக்கு வந்த தமிழ்க் குடும்பம்: நியாயம் கிடைக்குமா?

 மட்டக்களப்பில் தமிழ் குடும்பம் ஒன்று வீதிக்கு வந்த அவலச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
தாழங்குடா நான்காம் கட்டை சந்தியில் 35ஆண்டுகளுக்கு மேலிருந்த இரண்டிற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை தமது காணி என்று இஸ்லாமியர்கள் கூறி பொலிசாரின் உதவியுடன் வெளியேற்றியுள்ளதாக தெரியவருகிறது.
 செய்வதறியாது நின்ற தமிழ் குடும்பம் நடு வீதியில் அமர்ந்து நீதி கேட்கிறார்கள்

Friday, November 10, 2017

யாழ். ஹாட்லி மாணவனின் புதிய சாதனை!

 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.
ஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் 2 ஆம் நாளானா நேற்று இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.
இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும்.
புதனன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் (13.41 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இதேவேளை கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை 14 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Thursday, November 9, 2017

சைக்கிளில் நாடாளுமன்றம் வந்த மகிந்தவின் பரிவாரம்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றுக்கு துவிச்சக்கரவண்டியில் (சைக்கிளில்) வந்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட சமர்ப்பிப்புக்காக பாராளுமன்றம் கூடியது.
இதன்போதே எதிர்க்கட்சியினர் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் நிலவும் பெற்றோலியத் தட்டுப்பாட்டை வெளிப்படுத்துமுகமாக நேற்று முந்தினமும் இவர்கள் மாட்டு வண்டியில் நாடாளுமன்றம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 8, 2017

போராட்டம் நடத்த தயாராகும் பட்டதாரிகள்!

தேர்தலுக்கு முன்னராக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமெனக் கோரி பட்டதாரிகள் 15 ஆம் திகதி போராட்டம் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் நிர்வாக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ளது.
இதுவரை நியமனம் தொடர்பான சரியானதொரு தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
தேர்தலிற்கு முன் எமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் என எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்வதாக தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது.
எனவே வட மாகாணத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் வருகைதந்து தேர்தலிற்கு முன் எமக்கான அரச நியமனங்களை பெற வழிவகுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Thursday, November 2, 2017

இந்தியப் பெருங்கடலில் வலிமையான நிலநடுக்கம் ஏற்படப்போகிறது'- பிரதமருக்கு கேரள நிறுவனம் கடிதம்

ஆசிய நாடுகளின் கடல் எல்லைகளையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ’ இந்தியப் பெருங்கடலில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்படப் போகிறது. வலிமையான அந்த நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் கடல் எல்லைகளே மாறும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் வரை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

இதனால் கடலில் மணிக்கு 120 கி.மீ. முதல் 180 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று விசுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும். மேலும், சுனாமி அலைகளும் ஏற்படக் கூடும்' என்று அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இ.எஸ்.பி சக்தி மூலம் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  

Wednesday, November 1, 2017

என் சுதந்திரக்காற்றே...

கார்த்திகை என்றாலே விளக்கீடுதான் நினைவுக்கு வரும்(எந்த விளக்கீடு?)
கண்ணீரும் கதறலும் நிறைந்து வழியும்
கல்லறையெங்கும் நறுமணச்சோலையாகும்
ஒவ்வொரு கல்லறைக்கும் ஒவ்வொரு வரலாறு
ஒவ்வொரு கல்லறையும் ஒவ்வொரு காவியம்
பிள்ளைகள்,உறவுகள்,நண்பர்கள் இறந்தது வருத்தம் தந்தாலும் அந்த மரணங்கள் தரும் கர்வம்,பெருமை வார்த்தையிலடங்காது.
அன்னையின் கண்ணீரை துடைத்திடும் அண்ணனின் உரை இத்தனையும் இன்று எங்கே?
கல்லறைக்கும் பயந்துதான் இடித்து நொருக்கி மைதானமாக்கினார்கள்.
புலி என்பது ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதில் உள்ள வீரமே...
என்றுதான் சுதந்திரக்காற்றை சுவாசிப்போமோ என்ற ஏக்கத்துடன்
உங்களில் ஒருவன்...