Tuesday, January 16, 2018

இங்கையுடனான ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்த வேண்டும்: புலம்பெயர் தமிழர்கள்!!

இங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்களான சிவரஞ்சன் கணபதிப்பிள்ளை தலைமையில், சிவதீபன் நகுலேஸ்வரன், புவிதா பாலச்சந்திரன், அஷந்தன் தியாகராஜா ஆகியோர் ஒன்றிணைந்து ஹறோ கிழக்கு ஆளும் கட்சி நா.உ பொப் பிளக்மனைச் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது பிரித்தானியா தெடரந்து இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ஸ்கொட்லாந்து காவல்துறை இலங்கையின் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டமை தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.
மேலும் சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற ஆட்கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதை முகாம்கள் போன்றவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
ஆயுத விற்பனை குறித்து நா.உ கருத்துத் தெரிவிக்கையில்,
வர்த்தக செயலரின் கவனத்திற்கு குறித்த விடயத்தை எடுத்து செல்வதாகவும், பிரி.பாராளுமன்றில் Early Day Motion ஒன்று நடைபெறும் போது தான் அதில் பங்கு கொள்வதாகவும் கூறினார்.
அதிரடிப்படைப் படை பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில்;
இப்பயிற்சியானது முறைப்படி கண்காணிக்கப்படுகிறதா என தாம் ஆராய்வதாகவும் கூறினார்.
இதேவேளை 2012 ஆம் ஆண்டு அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் தான் இலங்கை சென்றிருந்த வேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் நிலைப்பாடு குறித்து தனிப்பட்ட சந்திப்பொன்றை தாமும் பிரதமரும் விரும்பியதாகவும் அரச அதிகாரிகள் உடன் இருந்தமையால் த.தே.கூ.வுடனான சந்திப்பு சாத்தியமாகவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து எமது செய்தி பிரிவிற்கு கருத்து தெரிவித்த தமிழர் தகவல் நடுவத்தின் பிரதான ஏற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா;
இதுவரை இலங்கைக்கான ஆயுத விற்பனையை தடை செய்வது தொடர்பில் பத்திற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தம் குழு சந்திப்புகளை மேற்கொண்டோம்.
மேற்படி சந்திப்புகள் யாவும் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.