Tuesday, September 19, 2017

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபைக்குப் பின்பாக உள்ள பண்டிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து குடும்பஸ்தர் அரை உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்.நாவலர் வீதி அரியாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் பத்மபாலசிங்கம் (வயது 38) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.நாவலர் வீதி அரியாலைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (18) இரவு 4 பேர் சென்று குடும்பஸ்தரை கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட குடும்பஸ்தர் பண்டிக் கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அடித்துப் போட்ட நிலையில் அரை உயிருடன் கிடந்துள்ளார்.
கோவில் பகுதியால் சென்றவர்கள் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் குடும்பஸ்தரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தினமொரு பேரிச்சம்பழம் சாப்பிடுங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடற்சக்தியை வலுப்படுத்த பேரிச்சம்பழம் உதவுகிறது.
தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடையும்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம்.
இதில் இருக்கும் விட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க பயன் தருகின்றன.
பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.
மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.
கர்ப்பமாக இருக்கும் போது, பெண்கள் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.
தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

அக்கரைப்பற்றில் விபத்து, ஸ்தலத்திலேயே ஒருவர் பலி...

 அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று 2ஆம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 8ஆம் கட்டையை சேர்ந்த அலியார் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
 மற்றும் அக்கரைப்பற்று 06ஆம் குறிச்சியை சேர்ந்த அரூஸ் என்பவர் காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்றுமுன்…மன்னாரில் விபத்து: ஒருவர் பலி (படங்கள்)

 மன்னாரில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் கட்டை அடம்பன் பாடசாலை முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.
 இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்


திலீபனின் நினைவு தூபியை புனரமைக்க தீர்மானம்

தியாகி திலீபன் நினைவு தூபியை புனரமைப்புக்கான தீர்மானம் நேற்று (திங்கட்கிழமை) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை யாழ் மாநகர சபை புனரமைப்பு செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இணைத் தலைவர்கள் மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் புனரமைப்பு செய்வதற்குரிய தடைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
அதன் போது, கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் மாநகர சபைக்கு வழங்கியும் ஏன் இதுவரையில் புனரமைப்பு  செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
1989 ஆம் ஆண்டு தற்போது வடமாகாண சபை அவைத் தலைவராக இருக்கும் சீ.வி.கே.சிவஞானம் மாநகர ஆணையாளராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட தூபியை புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்கள்.
இருப்பினும், நல்லூர் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் நினைவுத் தூபி அமைந்துள்ளது.
இதனால் நல்லூர் ஆலய நிர்வாகத்துடன் கலந்தாலோசிப்பது மற்றும் நினைவு தூபி அமைந்துள்ள காணியை குத்தக க்கு எடுப்பது சம்பந்தமான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட பின்னர் புனரமைப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.