Monday, September 11, 2017

46 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்த பெண்- 4 மணி நேர அறுவை சிகிச்சை.. நடந்தது என்ன?

 ஷாரா அப்போடோளிக் என்ற பெண் 46 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்துள்ளதாக தெரியவருகிறது.
இவர் மொரோக்கோ நாட்டைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1955ஆம் ஆண்டு 26 வயதில் ஷாரா கர்ப்பமாக இருந்துள்ளார்.
அந்த தருணத்தில் ஏற்பட்ட பிரசவ வலியால் 48மணி நேரம் வீட்டிலேயே துடித்துள்ளார்.
 பின் குழந்தை பிரசவிக்கமுடியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையினால் தனக்கும் தன் குழந்தைக்கும் ஆபத்து நேரந்துவிடுமென எண்ணிய குறித்த பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சிறிது காலம் வலியிருந்ததாகவும், காலப்போக்கில் அந்த வலி மறைந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்துள்ளது. 75 வயதான ஷாராவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது இறந்த குழந்தை தினமும் கல்சியம் எடுத்துக்கொண்டதால் கட்டியாக மாறி வயிற்றின் உள்ளே இருந்துள்ளது.
4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் கல் குழந்தை அகற்றப்பட்டது. தற்போது 75 வயதான ஷாரா பாட்டி நலமாக உள்ளாராம்.

வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றத்திருவிழா விபரம்

வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் 2017

20/09/2017 கொடியேற்றம்
21/09/2017 உள்வீதி உலா
22/09/2017 உள்வீதி உலா
23/09/2017 உள்வீதி உலா
24/09/2017 உள்வீதி உலா
25/09/2017 உள்வீதி உலா
26/09/2017 வெளிவீதி உலா
27/09/2017 குருக்கட்டு விநாயகர் தரிசனம்
28/09/2017 வெண்ணெய் திருவிழா
29/09/2017 துகில் திருவிழா
30/09/2017 பாம்பு திருவிழா
01/10/2017 கம்சன் திருவிழா
02/10/2017 வேட்டைத் திருவிழா
03/10/2017 சப்பறத் திருவிழா
04/10/2017 தேர்த் திருவிழா
05/10/2017 சமுத்திரத் திருவிழா
06/10/2017 கேணித் தீர்த்தம், கொடியிறக்கம்
07/10/2017 அனுமார் மடை

யாழில் வாள்களுடன் உலாவும் மர்மநபர்கள்: வெளியாகும் பகீர் தகவல்!!

யாழ்.நெல்லியடிப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் நடமாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லியடி கப்பூது வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் நீண்டநேரம் நடமாடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கொடிகாமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நால்வரை குறித்த குழுவினர் வழிமறித்துள்ளதோடு, அவர்களைத் தாக்கவும் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது
அத்துடன், வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை சேதப்படுத்தியதோடு மற்றைய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த மோட்டார் சைக்கிளிற்கு (லீசிங்) பணம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

10 நொடிகளில் புற்றுநோயைக் கண்டறியும் பேனா கண்டுபிடிப்பு!

பத்து நொடிகளில் புற்றுநோய் திசுக்களைக் கண்டறியும் பேனா ஒன்றினை டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவியானது வேகமாகவும், பாதுகாப்பாகவும் மட்டுமல்லாமல் கூடுதல் துல்லியத்துடனும் செயற்படுமெனவும் கூறப்படுகிறது.
அத்துடன் புற்றுநோய்க் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய உதவும் என விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர் எதாவது புற்றுநோய் அணுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்துவிடும் துயரத்தைத் தவிர்க்கவும் இது உதவி புரியும்.
இதேவேளை சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் எனும் மருத்துவ சஞ்சிகையில் இந்தப் பரிசோதனைகள் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பூநகரியில் கோர விபத்து (படங்கள் இணைப்பு)

 பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிப்புலத்தில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்ததால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.
 இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
 மற்றும் வேனில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது
வாழை இலை ஒரு கிருமி நாசினி என்றும், ஆகவே உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை பார்த்திருப்போம்.
வாழை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
வஇன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள்.
காரணம் நச்சுத் தன்மையை முறிந்துவிடும்.
வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

பாரதியாரின் 95 ஆம் ஆண்டு நினைவு நாள் யாழில் அனுஷ்டிப்பு!!

 பாரதியாரின் 95 ஆம் ஆண்டு நினைவு இன்று (திங்கட்கிழமை) காலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் நினைவும் தூபியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது இந்திய துணைத் தூதுவர் என்.நடராஐன் உட்பட பலரும் பாரதியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.
 இந் நிகழ்வில் மதகுருமார்கள், கல்வியியலாளர்கள, மாணவர்கள், தூதரக அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

காணாமல் போனோர் உறவுகளுக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தினர் இப்படி செய்யலாமா?


 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலின் ஒதுக்குபுறமாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், தமது உறவுகளுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் திருவிழா இடம்பெறும் 10 நாட்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடம் தங்களின் பந்தலை அகற்றி திருவிழாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், பின் மீண்டும் வழமை போல் பந்தல் அமைத்து போராட்டத்தை முன்னெடுக்கும்படியும் ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள சிறிய கடை ஒன்றில் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த ஆறாம் திகதி திருவிழா நிறைவுற்ற நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆலய நிர்வாகம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனா்.

அந்தக் கடிதத்தில்
2017-09-10 திகதி நிர்வாக கூட்டத்தின் தீர்மானத்தின் படி ஆலயத்தில் தொடர்ந்தும் விழாக்கள் இடம்பெற இருப்பதால் ஆலய வீதியை தங்களுக்கு வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த கடித்தின் பிரதிகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா், பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன், கரைச்சி பிரதேச செயலாளா், கிராம சேவையாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில் ஆலய நிர்வாகத்தின் இந்த செயற்பாடு சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போனவர்கள் பிரச்சினையா? கோவில் வெளி வீதியா தேவை?
தமிழர்களின் உணர்வுடன் தமிழரே விளையாடாதீர்கள். வன்மையாக கண்டிக்கிறோம் என பலர் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

அமெரிக்காவைப் புரட்டிப்போடும் இர்மா புயல் (வீடியோ)

அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை துவம்சம் செய்த பின் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்கியுள்ளது.
25 உயிர்களை பறித்த இர்மா புயல் தற்போது புளோரிடாவுக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இர்மா புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகி உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
‘இர்மாவின்’ புயல் படிப்படியாக நகர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் அடுத்த வாரம் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அங்கு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
https://youtu.be/fbi--phuesA