Monday, July 31, 2017

மில்லியன் மதிப்பிலான தங்கப் புதையல் கண்டுபிடிப்பு: சிக்கலில் புதையல் வேட்டைக்காரர்

ஜேர்மனியின் அடர்ந்த வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாஜிகள் காலத்து மில்லியன் விலை மதிப்புள்ள தங்கக் குவியலை மீட்க முடியாமல் புதையல் வேட்டைக்காரர் தவித்து வருகிறார்.
ஜேர்மனியில் உள்ள பவேரியா பகுதியில் குறித்த தங்கப்புதையலை புதையல் வேட்டைக்காரர் ஒருவர் அரும்பாடுபட்டு கண்டுபிடித்துள்ளார். ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர் குறித்த புதையலை அங்கிருந்து மீட்க தடையாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
76 வயதான Hans Glueck என்பவர் குறித்த அரிய புதையலை கண்டுபிடித்துள்ளார். அதில் குவியலாக தங்கம், வைரம் உள்ளிட்டவையும் அரிய ஓவியங்கள் மற்றும் தபால் தலைகள் என சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலான பொக்கிஷங்களும் அதில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த நிலத்தின் உரிமையாளர் அந்த புதையலை விட்டுத்தர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த புதையலை கைப்பற்ற வேண்டும் எனில் உரிய திட்டமிடலும் அதற்குரிய வரைபடங்களும் தேவை எனவும், ஆனால் இவை எவையும் அந்த நில உரிமையாளரிடம் இல்லை எனவும், அவரால் குறித்த புதையலை கைப்பற்றுவது கடினமே எனவும் தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவை வழி நடத்துவது புலிகள்..?:பொலிஸ் மா அதிபர்

யாழ். குடாநாட்டினை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் இராணுவம் மற்றும் ஏனைய தரப்பின் உதவியுடன் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆவாகுழுவினால் வெட்டப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சென்று பார்வையிட்டார்.
அதன்பின்னர், யாழ்.பொலிஸ் தலைமையத்தில் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்..மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
அதன்போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுப்பிரயோகம் மற்றும், பொலிஸார் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.
அந்த சந்திப்பின் போது, யாழ்.குடா நாட்டில் தற்போது குற்றச்செயல்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.
ஆவாகுழுவினால் வெட்டப்பட்ட இரு பொலிஸாரின் நிலைமை சற்று மோசமாக இருக்கின்றது. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆவாக்குழுவிற்கு தலைமை தாங்கியுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் தலைமை தாங்கியுள்ளார். அவர் உட்பட 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
அத்துடன், இதுவரை காலமும் மக்களிற்காக பாதுகாப்பினை அதிகரிக்காமல் இருந்தோம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் இருக்கின்றது. இங்கு காணப்படும் நிலமைகள் மக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.
எனவே, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியையும் பெறவுள்ளோம். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்க முடியாது. எனவே, தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பினைப் பலப்படுத்தவுள்ளேன்.
அதேவேளை, யாழ்.மாவட்டம் மட்டுமன்றி வடமாகாணத்தில் இவ்வாறான சம்பவங்களைப் புரிபவர்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரான எனக்கு 0717582222 அல்லது எனது செயலாளருக்கோ 0718592020 தகவல்களை நேரடியாக வழங்க முடியும்.
அதுமட்டுமன்றி வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பகிரங்கபடுத்தமாட்டோம் அதற்கான உறுதிமொழியினை வழங்குவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
மணல் மற்றும் கடத்தல், கப்பங்களுக்கு எதிரான தகவல்களையும் உடனடியாக தெரிவிக்குமாறும், இவ்வாறான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமென்றும் பொது மக்களை ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தீவிரமடைகின்றது டெங்கு நோய் பரவல்

நாட்டில் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றது. இது­வ­ரை­யி­லான ஏழு மாத காலத்தில் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை  ஒரு இலட்­சத்து 13 ஆயி­ரத்து 543 ஆக பதி­வா­கி­யுள்­ள­துடன்  இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 310 பேர் டெங்கு நோயினால் மர­ணித்­த­தாக தேசிய  டெங்கு ஒழிப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்து.
நாட்டில் மிகவும் மோச­மாக மக்­களை பாதித்­து­வரும் டெங்கு நோயின் பரவல் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த பத்து ஆண்­டு­களில் டெங்கு நோயின் ஆதிக்கம் இருந்­ததை விடவும் இரண்டு மடங்கு அதி­க­ரிப்பு வேகம் இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான ஏழு மாத­கா­லத்தில் காணப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான  காலப்­ப­கு­தியில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 13 ஆயி­ரத்து 543  பேர் டெங்கு நோயினால்  பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதேபோல் இந்த ஆண்டில் 310 பேர் டெங்கு நோயினால் உயி­ரி­ழந்­துள்­ளனர். 
 கடந்த ஒரு வார காலத்­திற்குள் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை  24ஆயி­ரத்து 600 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது. மேல் மாகா­ணத்தில் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.  கொழும்பில்  நக­ர­ச­பைக்கு உட்­பட்ட பகு­தியில் மாத்­திரம் இது­வ­ரையில், 3 ஆயி­ரத்து 688 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 
மேலும் நாட்டின் சகல பாட­சா­லை­க­ளையும்  துப்­பு­ரவு செய்யும் பணிகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதேபோல் நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் வீடுகள், காணிகள், அலு­வ­ல­கங்கள் அனைத்­தையும் சோதனை செய்யும் நட­வ­டிக்­கை­களை சுகா­தார துறை­யினர் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.   கடந்த ஒரு மாதத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சோத­னை­களின் போது சுற்­றுச்­சூ­ழலை அசுத்­த­மாக வைத்­தி­ருந்த 4500 க்கும் அதி­க­மான நபர்கள் மீது நட­வ­டிக்­கை­களை எடுக்­கப்­பட்­டுள்­ளன. 3 ஆயிரம் வழக்­குகள் பதி­யப்­பட்­டுள்­ளன. மேல் மாகா­ணத்தில் டெங்கு நுளம்பு பர­வு­வ­தற்கு ஏது­வாக சூழலை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் 459 பேருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. 
கடந்த 27 ஆம் திகதி முதல் மேல் மாகா­ணத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இரு நாட்­க­ளுக்­கான டெங்கு ஒழிப்பு வேலைத் திட்­டத்­திற்கு அமைய  இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. நேற்­றுடன் நிறை­வ­டைந்த இந்த வேலைத் திட்­டத்தில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்­தி­ருந்த 730 இடங்கள் இனங்­கா­ணப்­பட்­டன. 
குறிப்­பாக மேல் மாகா­ணத்தில் இருந்த 58 அரச நிறு­வ­னங்கள் இதன்­போது சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், அவற்றில் 7  இடங்கள் டெங்கு பரவும் வகையில் இருந்­தமை தெரி­ய­வந்­துள்­ளது.   டெங்கு நோய்த் தாக்கம் அதி­க­மாக இருந்த மேல், மத்­திய, வடமேல், சப்­ர­க­முவ மற்றும் தென் மாகா­ணங்­களின் சில பகு­தி­களில் நோயா­ளர்­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்சி  ஏற்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது எனவும் சுகா­தார அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

இந்­நி­லையில் புத்­தளம்,மாத்­தளை, உக்­கு­வெல, பதுளை மற்றும் ஹாலி எல ஆகிய பகு­தி­களின் சில இடங்­களில் டெங்கு நோயா­ளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.   சுகாதார அமைச்சும் பாதுகாப்பு தரப்பும் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன் சர்வதேச நாடுகளின் மருந்து மற்றும் நிவாரண உதவிகளும் அரசாங்கத்திற்கு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

202 பயணிகளுடன் கட்டுநாயக்க வந்த விமானத்தில் வெடிப்பு

இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கையடக்கத் தெலைபேசியின் மின்கலம் வெடித்ததையடுத்து விமானத்தினுள் புகை நிரம்பியதால், விமானத்தில் பயணிகளுக்கிடையில் பதற்ற நிலை உருவாகியதாகவும் அதையடுத்து விமானத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை 31: தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள்!!

இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756 ம் அண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி தீர்ன் சின்னமலை பிறந்தார்.
அவரின் தந்தை பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.
ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு விநியோகித்தார்.
அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வந்தது.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டன் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார்.
இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.
டிசம்பர் 7, 1782-ல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.
எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது.
சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.
தம்பியரும், கருப்ப சேர்வையும் அவருடன் வீரமரணம் எய்தினர்.

வெள்ளைக்காரன் இதை செய்தால் பெருமிதம் கொள்ளும் தமிழன்

வெள்ளைக்காரி காவடி எடுக்கிறா
வெள்ளைக்காரி சேலை கட்டுறா
வெள்ளைக்காரன் தமிழ் பேசுறார்
வெள்ளைக்காரன் வண்டில்ல போறார்

இப்படியான செய்திகளை பார்க்கும் பொழுதோ அல்லது FB post ஐ பார்க்கும் பொழுதோ தோன்றுவதெல்லாம் , இவை ஒரு கீழ்மை மனப்பாங்கின் அறிகுறிகள் என்பது தான்.

ஏனெனில் ஒரு ருசியனோ, பிரென்ச் காரனோ ஒரு ஆங்கிலேயன் தங்கள் மொழி பேசுவதாக புளுகிக் கொள்வதில்லை.
நாமும் ஒரு கறுப்பினத்தவர் தமிழ் பேசுவதாகவோ , தமிழ் ஆடை அணிந்த தாகவோ புளுகிக் கொள்வதில்லை.


எம்மை அறியாமலே இன்னும் ஆங்கிலேயரின் அடிமை ஆட்சியின் எச்சங்கள் இன்னும் ஆழ பதிந்துள்ளன. அவற்றின் விளைவில் ஒன்றே இதுவும்.

வெள்ளைக்காரன் செய்தால் தான் எங்கள் மொழி , கலாச்சாரத்துக்கு பெருமை என எண்ணும் நிலைமை நமக்கு தேவையா ?

எகிப்து , கிரேக்கம் போன்ற பண்டைய நாகரீகங்களுக்கு ஈடான மிகவும் பழைமை வாய்ந்த, இப்பொழுதும்  நிலைத்திருக்கும் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம். இதை இந்த கீழ்மை மனப்பாங்கு அழித்துவிடும்.

நாசாவில் , சிலிக்கன் வலியிலும்  தமிழர்கள் வேலை செய்வது பெருமை அல்ல , அப்படி ஒன்றை எம்மால் உருவாக்க முடியவில்லையே என்பது இழிமை.  எமக்கொன்றொரு நாட்டை கூட உருவாக்க முடியவில்லை. தேவையற்ற விடயங்களுக்கு பெருமை கொள்கிறோம்.

நன்றி புருசோத்தமன் தமிழ்ஸன்

அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளு­டனும் இணைந்து நாடு ­த­ழு­விய ரீதியில் பாரிய வேலை­நி­றுத்தம்

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை முறை­கே­டான விதத்தில் சீனா­வுக்கு வழங்­கி­ய­தன்­ மூலம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் இய­லாமை வெளிப்­பட்­டுள்­ளது. இந்­நாட்டில்  உள்ள உழைக்கும் வர்க்கம் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது என்று  அகில இலங்கை துறை­முக சேவைகள் ஊழியர் பொது ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.
மேலும் இந்­நாட்டை பாது­காக்­கவும் துறை­மு­க­சே­வையில் பணி­பு­ரியும் பொது­மக்­களின் நல­னுக்­கா­கவும் தொடர்ந்து போரா­ட­வுள்­ள­தா­கவும் நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு வேலை­நி­றுத்தப் போராட்­டத்­துக்கு செல்­ல­வுள்­ள­தா­கவும் அச்­சங்­கத்தின் தலைவர் சந்­தி­ர­சிறி மஹா­க­மகே தெரி­வித்தார்.
மரு­தான சன­ச­மூக நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே    அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 வரு­டங்­க­ளுக்கு குத்­த­கை­க­ஙகு வழங்­கி­யதன் மூலம் இந்­நாட்டில் உழைக்கும் வர்க்கம் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு  நல்­லாட்சி அர­சாங்கம் உத­வி­யுள்­ளது. இல­ங­கைக்கும் சீனா­வுக்­கு­மி­டையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஒப்­பந்தம் முற்­றிலும் பொய்­யா­னது. நல்­லாட்சி அர­சாங்கம் அதன் வெளிப்­ப­டைத்­தன்­மையை  ஒரு­போதும் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த விரும்­ப­வில்லை.
சீனா­வுக்கு இலா­பத்தில் 70 சத­வீ­தமும் இலங்­கைக்கு 30 சத­வீ­தமும் என்ற வகையில் ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறு­கின்­றனர். ஆனால் நாம் முன்­னெ­டுத்த ஆர்ப்­பட்­டங்­களின் பின்­னரும் தொடர்ச்­சி­யான அழுத்­தங்­களின் பின்­ன­ருமே இந்த முடி­வுக்கு வந்­த­தாக அர­சாங்கம் கூறு­கின்­றது.   முதலில் 80 க்கு 20 என பேசினோம். இப்­போது நமக்கு வெற்றி கிடைத்­துள்­ள­ள­தாக கூறு­கின்­றனர்.
இதில் என்ன வெற்றி இருக்­கின்­றது என தெரி­ய­வில்லை. உழைக்கும் வர்க்­கத்தை படு­கு­ழியில் தள்­ளி­விட்டு, எங்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­க­ளை­யெல்லாம் பொய்­யாக்­கி­விட்டு வெற்றி என கூறு­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லாட்சி அர­சாங்­கத்தில் உழைக்கும் வர்க்­கத்தை பாது­காப்­ப­தாக கூறு­கின்றார். ஆனால் எவ்­வித ஆளு­மை­யு­மின்றி சர்­வ­தே­சத்­துக்கு எமது நாட்டை காட்­டிக்­கொ­டுத்­துள்­ளனர்.
இன்று அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு தாரை வார்த்­த­வர்கள் இதன்­பின்னர் திரு­கோ­ண­மலை எண்ணைக் குதத்தை விற்­பனை செய்ய முடி­வெ­டுப்­பார்கள். இதற்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் துணை­நிற்­பார்கள். இதுவே இனிமேல் நடக்க போகின்­றது. இந்­நாட்டில் உள்ள வளத்தை சூறை­யா­டு­வ­தற்கு சர்­வ­தேச நாடு­க­ளுக்கு இட­ம­ளிப்­பது பெரும் துரோ­கச்­செ­ய­லாகும்.
இந்­நாட்டு மக்­களை ஏமாற்­றி­ய­மைக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அமைச்­சர்­க­ளுமே பொறுப்பு கூற வேண்டும். இனி­வரும் அழி­வு­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் இவர்­களே பொறுப்பு கூற வேண்டும். இந்­நாட்டை பாது­காக்­கவும் துறை­மு­க­சே­வையில் பணி­பு­ரியும் பொது­மக்­களின் நல­னுக்­கா­கவும் நாம் தொடர்ந்து போரா­ட­வுள்ளோம். இனி­வரும் வாரங்­களில் நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளையும் இணைத்து கொண்டு வேலை­நி­றுத்த போராட்­டத்­துக்கும் செல்­ல­வுள்ளோம். 
கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருடன் சேர்ந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபடுவது தொடர்பில் நாம் தீர்மானிக்கவில்லை. அவர்கள் அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தை சீனாவுக்கு விற்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும் பாராளுமன்றத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எமக்கு தெரியும்.  எனவே எமது ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் உண்மையானதாகவும் இந்நாட்டு மக்களுக்காகவானதாகவும் இருக்கும் என்றார்.

யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு: தேடுதலில் அதிரடிப்படை

யாழில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல பகுதிகளில் விசேட அதிரடி படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கோப்பாய் பகுதியில் நேற்று (30) பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மர்மநபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் ஆவா குழுவினர் தான் நடாத்தினார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கோப்பாய் மைதானத்திற்கு அருகிலுள்ள காட்டில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது.

தமிழர்களின் வயித்திலடித்து சுரண்டும் இலங்கை அரசு

தமிழரின் வயித்திலடிக்கு அரசு
யாழ்ப்பாண பொருளாதாரத்தின் முக்கிய பணப்பயிரான #புகையிலையை தடைசெய்து நல்லாட்சி அரசானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்திருக்கின்றது.
அரசுக்கு அதிக வருமானமும் மக்களுக்கு அதிக கேடும் தரும் #சிகரெட்டுக்கும், #மதுவுக்கும் தடை இல்லை..
உள்ளூர் பொருளாதாரத்துக்கு தடைவிதித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கின்றனர்.
நல்லாட்சி


யாழ்ப்பணத்து பணப்பயிரை தடைசெய்து பொருளாதாரத்திற்கு பாடை கட்டியுள்ளது சிங்கள நல்லாட்சி அரசு..!
சரி இந்த புகையிலை தடை  தொடர்பான விவாதங்கள் , அனுமதிகள் நடக்கும்போது அரசியல்வாதிகள் தூக்கத்தில் இருந்தார்களா..?

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்கிறது, நடவடிக்கையில் இறங்காது எனக்கென்ன என்று திரிகின்றனர் அரசியல்வாதிகளும், சட்டவாளர்களும்.....!