Friday, July 28, 2017

பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய நிறுவனர் யார் தெரியுமா?

உலகின் பணக்காரர் பட்டியலில் கடந்த 23 வருடங்களாக முதலிடத்தில் இருப்பவர் பில்கேட்ஸ்.
தற்போது அந்த இடத்தை அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ் கைப்பற்றியுள்ளார். அமேசான்.காம் நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் ஜெப் பேசாஸின் சொத்து மதிப்பு 90.6 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 90 பில்லியனாக இருப்பதால் அவர் இரண்டாம் இடத்தில் இருப்பதாக பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் மொத்தம் உள்ள 81 மில்லியன் பங்குகளிகள் கிட்டத்தட்ட 17 சதவீத பங்குகளை ஜெப் பேசாஸ் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீ பொலிஸா என்று கேட்டு தாக்குதல் : வடமராட்சியில் சம்பவம்..!

நீ பொலிஸா என்று கேட்டு தாக்குதல் : வடமராட்சியில் சம்பவம்..!

“நீ பொலிஸா” என்று கேட்டு, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, வரணியில் வைத்துத் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோத்தரான எஸ்.சிந்துராஜ் தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரான இவர் மீது, இனந்தெரியாத மர்மக்கும்பல் ஒன்று, நேற்று இரவு வரணி வீதி யாக்கரு பகுதியில் வைத்துத் தாக்குதலை மேற்கொண்டது. இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான அவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “நான், வீட்டிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இதன்போது முகத்தை மூடிக்கட்டியவாறு சிலர் என்னை மறித்து, நீ பொலிஸா? என கேட்டனர். நான் ஆம் என்று கூற, தடிகளால் என்னைத் தாக்கினர். அவர்களிடமிருந்து ஒருவாறு தப்பித்து ஓடிய நான், சக பொலிஸாரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.

தனிப்பட்ட விரோதிகள் எவரும் எனக்கு இல்லை. என் மீது ஏன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று கூட எனக்குத் தெரியாது எனத் தெரிவித்தார்

ஜேர்மனில் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
வடக்கு ஜேர்மன், Hamburg பகுதியில் உள்ள சந்தையில் இந்த கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றதாகவும்  ஜேர்மன் நேரடிப்படி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
நபர் ஒருவர் Barmbek அருகில் உள்ள சந்தைக்குள் வேகமாக ஒடி வந்து கத்தியால் வாடிக்கையாளர்களை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஒருவர் உயிரிந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் Heike Uhde தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், இருப்பினும் அரை மணி நேரத்தில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து பொது மக்களை வெளியேறுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடமராட்சியில் தொடரும் கலவரம்

தமிழ் பொலிசார் மீது தாக்குதல் எதிரொலி!!
வடமராட்சி துன்னாலையில் சுற்றி வளைக்கப்பட்டு இருவர் சந்தேகத்தின் பேரில் கைது !!

 தமிழ் பொலிஸ் அதி­காரி மீது தாக்­கு­தல் மேற்­கொண்­டமை, சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யமை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளு­டன் தொடர்­பு­டைய
சந்­தே­க­ந­பர்­க­ளைத் தேடி வட­ம­ராட்­சி­யில் பொலி­ஸார் சிறப்­புத் தேடு­தலை நேற்று மேற்­கொண்­ட­னர். இதன்­போது இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­றும் தமிழ் பொலிஸ் அதி­காரி மீது நேற்று முன்­தி­னம் இரவு தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த மாதம் 9ஆம் திகதி பொலி­ஸார் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தில் இளை­ஞன் உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து ஏற்­பட்ட பதற்ற நிலை­யின் போது பொலிஸ் காவ­ல­ரண்­கள், பொலிஸ் வாக­னங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இவற்­று­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­கள் சில­ரைப் பொலி­ஸார் இனம் கண்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளைத் தேடி, இரண்டு பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன. வட­ம­ராட்­சி­யில் குறிப்­பாக துன்­னா­லைப் பகு­தி­யில் தேடு­தல் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதன்­போது இரு­வர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.