Tuesday, August 8, 2017

யாழ் தேடுதல் வேட்டையில் 250 பேர் கைது..??

யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினால் இதுவரை 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடாநாட்டின் ஐந்து பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய 250 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி காலை 6 மணியில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) வரை தேடுதல்வேட்டையில் அதிரடிப்படையினர் இறங்கியிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கு தொடர்புடைய சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அடையாளம் உறுதி செய்யப்படாத 67 மோட்டார் சைக்கிள்கள், வான்கள் மற்றும் லொரிகள் என்பன பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மானிப்பாய் உட்பட 5 பொலிஸ் பிரிவில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை  இன்று (செவ்வாய்க்கிழமை) சற்று முன்னர் வரை துன்னாலையில் அமைதி நிலவுகிறதாக தற்போது வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் கதிர்காமத்தில் உயிரிழப்பு!

கதிர்காமம் யாத்திரிகைத்தலத்துக்கு வருகை தந்த பேருந்தில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகபிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கதிர்காமம் பெஹராவுக்கு வருகை தந்தவர்களை ஏற்றி வந்த பேருந்து மைதானத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்து.
பின்னர் ஏதேச்சையாக பேருந்து அங்கிருந்து பின்நோக்கி பயணிக்கும் போதே மைதானத்தில் படுத்திருந்தவர்களின் மீது மோதியுள்ளது.
இதில் காயமடைந்தவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைனொருவனும், 41 வயது குடும்பஸ்தர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஓகஸ்ட் 08: வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றம்!!

மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து இந்த இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.
ஓகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தின் முதற்கட்ட பணி, ஜூலை 1942ல் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழுவில் தொடங்கியது.
அதன்பின்னர் ஓகஸ்ட் 8 ஆம் திகதி மும்பையில் இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை வலியுறுத்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதனை ஒடுக்க நினைத்த பிரிட்டிஷ் படை, மறுநாள் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை சிறைப்பிடித்தது.
ஓராண்டுக்குள் இந்த இயக்கத்தையும் ஒடுக்கி விட்டது. ஆனால், இந்த இயக்கம் ஆரம்பித்த பிறகுதான், விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது சுதந்திரத்திற்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது

08-08-2017 இன்றைய ராசிபலன்கள்

08.8.2017 செவ்வாய்க்கிழமை ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 23-ம் நாள். தேய்பிறை பிரதமை திதி நள்ளிரவு மணி 12.58 வரை.
பிறகு துவிதியை. அவிட்ட நட்சத்திரம் காலை மணி 6.03 வரை, பிறகு சதயம். யோகம்: காலை மணி 6.03 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.
குளிகை: 12:00 – 3:30
நல்ல நேரம் 8-9, 12-1, 7-8
எமகண்டம் காலை மணி 9.00-10.30
இராகு காலம் மாலை மணி 3.00-4.30
மேஷம்:
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்:
நீண்ட நாளாக தள்ளிப் போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பணம் வரும்.
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.
மிதுனம்:
மாலை 5.26 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
கடகம்:
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழியில் ஒத்தாசையாக இருப்பார்கள்.
வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5.26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.
சிம்மம்:
கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
கன்னி:
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
துலாம்:
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
விருச்சிகம்:
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
பூர்வீக சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
தனுசு:
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அரசால் அனுகூலம் உண்டு.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
மகரம்:
மாலை 5.26 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்ந்தாலும் தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.
வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மாலையில் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் நாள்.
கும்பம்:
எதிர்பாராத பயணங்களும், செலவுகளும் ஏற்படும். உறவினர்களால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும்.
உத்யோகத்தில் அனுசரித்துப் போங்கள். மாலை 5.26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
மீனம்:
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.