அந்த கடிதத்தில், ’ இந்தியப் பெருங்கடலில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்படப் போகிறது. வலிமையான அந்த நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் கடல் எல்லைகளே மாறும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் வரை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதனால் கடலில் மணிக்கு 120 கி.மீ. முதல் 180 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று விசுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும். மேலும், சுனாமி அலைகளும் ஏற்படக் கூடும்' என்று அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இ.எஸ்.பி சக்தி மூலம் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.