Sunday, September 17, 2017

கற்பிட்டிக் கடலில் மீனவருக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத பொக்கிஷம்!

இலங்கையின் கடற்பரப்பில் விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

கற்பிட்டி மீனவர்கள் சிலருக்கு எதிர்பாராத விதமாக கடலில் இருந்து அதிஷ்டம் ஒன்று கிடைத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஒழுங்கான முறையில் மீன் கிடைக்காமையினால் வருத்தத்துடன் கரைக்குத் திரும்பியுள்ளனர்.அவ்வாறு கரைக்கு திரும்பும் போது கடுமையான துர்நாற்றத்துடன் கடலில் மிதந்து வந்த பொருள் ஒன்றை இந்த மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
அதற்கு அருகில் சென்று பார்க்கும் போது அது ‘எம்பர்’ (Ember) எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியாகும்.
அது பல கோடி பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது. எம்பர் ஒரு கிலோகிராம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியானதெனக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த திமிங்கிலத்தின் வாந்தியை வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கு உட்பட பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.விலை மதிப்பில்லாத பொக்கிஷம் கிடைத்தமையால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க முடிவு!!

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட ஒன்றியத்தினால் 22 மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் அருகாமையிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட உதவித்திட்ட இணைப்பாளரின் இல்லத்தில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி அளவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட ஒன்றியத்தினால் 22 மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது.