Friday, August 11, 2017

வடமராட்சியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!

யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இனந்தெரியாத மர்ம நபர்களின் இந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த வாள்வெட்டு சம்பவத்திற்கு இலக்காகி படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த சின்னத்தம்பி கமல்ராஜ் (வயது-53) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.

கேரள கஞ்சாவுடன் சிக்கிய மூவர்!

கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் திருகோணமலை – பாலையூற்று பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான 22 வயதான குறித்த இளைஞனிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்கேக நபர் வழங்கிய தகவலை வைத்து அநுராதபுர சந்தியில் மூதூர் பாலைநகரைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் 1100 கிராம் கேரளா கஞ்சாவுடன் சிக்கியுள்ளார்.
அவர் வழங்கிய தகவலுக்கு அமைய மரத்தடிச் சந்தி, கொத்தி ஒழுங்கையில் வைத்து மேலும் 250 கிராம் கேரள கஞ்சாவுடன் 30 வயதான நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரையும், 1450 கிராம் கேரள கஞ்சாவையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருகோணமலை தலைமை பொலிஸாரிடம், விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஒப்படைத்தனர்.

தலைக்கவசம் அணிந்து வங்கியில் கொள்ளை!

இரத்மலானை அத்தியட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் 34 இலட்சத்துக்கு அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பில் கல்கில்சை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
முற்று முழுதாக மறைக்கப்பட்ட தலைகவசமொன்றை அணிந்திருந்த கொள்ளையர்கள் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கிவிட்டு வங்கியிலிருந்த வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.