Sunday, July 30, 2017

சிங்கப்பூர் அரசு கொடுத்த செருப்படி


சிங்கப்பூர்  அரசு அதிரடி அறிவிப்பு!

எங்களைப் பொறுத்தவரை இந்தியர்கள் என்றால் அது தமிழர்கள்தான், இந்திய மொழி என்றால் அது தமிழ் மொழிதான்- சிங்கப்பூர் அரசு அதிரடி..!!

சிங்கப்பூரில் தமிழும் ஒரு ஆட்சி மொழியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இது அங்கு வாழும் வட இந்தியர்களுக்கு வயித்தெரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்க,

சிங்கப்பூர் வாழ் வட இந்தியர்கள் அமைப்பு மூலம் சிங்கப்பூர் அரசிற்கு, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திமொழி.

இந்திய அலுவல் மொழியும் இந்திதான், இங்கு இந்தி பேசும் மக்களும் நிறையபேர் வாழ்கிறார்கள்.

எனவே இங்கு ஆட்சி மொழியாக உள்ள தமிழை நீக்கிவிட்டு இந்தியா சார்பில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும்னு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு சிங்கப்பூர் அமைச்சகம் கொடுத்த மூக்குடைப்பு பதில்.,

நாங்கள் சுதந்திரத்திற்காக போராடியபோது எங்களுடன் இணைந்து, எங்களுக்கு தோள் கொடுத்து, எங்களைப்போலவே ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, உயிர்த்தியாகங்கள் செய்தவர்கள் இங்கு வாழ்ந்த தமிழர்கள்.

அந்த சகோதர உணர்விற்காகத்தான் இங்கு தமிழையும் ஆட்சிமொழியாக வைத்துள்ளோம் என்று சொல்லி உள்ளது.

அரசியலுக்கு வருவேன்: கமல்ஹாசனின் அதிரடிப் பேச்சு

எனது அரசியல் பிரவேசமானது எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை பொறுத்து அமையும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்திய ஊடகம் ஒன்றுக்கு கமல் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வியின் போது கமல் கூறியதாவது;
தமிழக அரசு ஊழலில் நிரம்பி வழிக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
இனிமேல் நாம் தேட வேண்டியது தலைவர்களை அல்ல நிர்வாகிகளை. அரசியலுக்கும் வந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்துக்கு இன்னும் நான் வரவில்லை.
அது நடைமுறைகளையும், சூழலையும், எனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தையும் பொறுத்தது என்றார்.

15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு  : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது

அம்பாந்தோட்டை மாகம்புர  துறைமுகத்தின்  15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு  குத்தகைக்கு வழங்கும்  இருநாட்டு  துறைமுக ஒப்பந்தம் நேற்று(29.07.2017)
காலை கைச்சாத்திடப்பட்டது. 

அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. 
நேற்று காலை  10. 43 மணிக்கு  இலங்கையின் துறைமுக அதிகார சபையின்  தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர்  துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 
தென் இலங்கையின் பிரதானமான துறைமுகமான ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2011  ஆண்டில் இருந்து அதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்க சீன அரசாங்கத்திடம் 193 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  இலங்கை அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ளது. 
இந்நிலையில் கடன் நெருக்கடிகள் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம்  99 ஆண்டுகால குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானிக்கப்பட்டது.  ஆரம்பத்தில் இதில்  85 வீத பங்கு உரிமை சீனாவுக்கும் 15 வீதம் இலங்கைக்கும் என்ற உடன்படிக்கை முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதுள்ள புதிய  உடன்படிக்கையின் பிரகாரம் 70 வீத இலாபம் சீனாவிற்கும் 30 வீத இலாபம் இலங்கைக்கும் என  உடன்படிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

அம்பாந்தோட்டை  துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு சீன நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலயத்திற்கு அருகே ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு அருகே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாழடைந்த கிணற்றில் இருந்து வெடி பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் மீட்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், காரைநகர், ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அருகிலிருந்து கிணற்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) கிணற்றை சுத்தப்படுத்தும் முயற்சியில் பொது மக்கள் ஈடுபட்டிருந்த போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பொதுமக்கள் கடற்படையினரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனடிப்படையில் கடற்படை மற்றும் பொலிஸார் தலையிட்டு அங்கிருந்து 14 கிளேமோர் குண்டுகள், 02 வெடி குண்டுகள் மற்றும் ஒரு அழுத்த குண்டும் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் பழையது என இராணுவம் கூறியுள்ளது.

கொரியா தீபகற்பம் மீது பறந்த போர் விமானங்கள்: எச்சரிக்கை விடுக்கிறதா அமெரிக்கா..?

சர்வதேச நாடுகளின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வந்த வடகொரியாவுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மேல் பறந்தன.
அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக,வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனைசெய்தது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை அமெரிக்காவை நோக்கி சோதித்துள்ளது வடகொரியா. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தன. B-1B ரக போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்தது ஒரு எச்சரிக்கையாகவே உள்ளது.

கேப்பாபிலவு மக்களின் காணிகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் (வீடியோ)

கேப்பாபிலவு மக்களின் காணிகளுக்கு உரிய தீர்வு மிக விரைவில் கிடைக்குமென இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வடமாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமக்குள் நட்பு ரீதியான சந்திப்பு இடம்பெற்றது. அவர் இங்கு(யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியாக) இருக்கும் போது, மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிப்பேன் என கூறியிருந்தார். அவற்றினை நிறைவேற்றி விட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், போர் இல்லாத இந்த காலப்பகுதியில் எவ்வாறு இராணுவம் நடந்துகொள்ள வேண்டுமென்பது பற்றி இராணுவத்தினருக்கு அறிவுறுத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.
மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பது பற்றி அறிவுறுத்தியவருகின்றதாகவும் எடுத்துக் கூறினார்.
அத்துடன், கேப்பாபிலவு மக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேறு இடத்தில் முகாம் அமைப்பதற்குரிய நிதியினை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தருவதாக தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் கோப்பாபிலவு மக்களின் காணிகளுக்கு உரிய தீர்வு கிடைக்குமென உறுதியளித்துள்ளார் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வடகொரியாவில் அமெரிக்க போர் விமானங்கள்: போர் அச்சம்…??

வட கொரியாவுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் வட கொரியாவின் மீது பறந்துள்ளதாக தெரியவருகிறது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா ஏவுகணை சோதனையினை நடாத்தி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் நேற்று வட கொரியா கடல் எல்லைக்கு மேலே வட்டமிட்டு பறந்ததாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கலாம் நினைவிடத்தில் பைபிள், குரான்: கலாமின் பேரன் மீது இந்து மக்கள் கட்சி புகார்!

சர்ச்சைகுள்ளாகி வரும் பகவத் கீதை விவகாரத்தால் அப்துல் கலாம் நினைவிடம் பரபரப்புக்குள்ளாகி உள்ளது. கலாமின் பேரன் சலீம் மீது இந்து மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தேசிய  நினைவு மண்டபம் கடந்த 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது . இந்த மண்டபத்தினுள்  அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள், அவர் கண்டுபிடித்த ஏவுகணை  மாதிரிகள், கலாம் பயன்படுத்திய பொருள்கள், படித்த புத்தகங்களுடன்  கலாம் வீணை வாசிக்கும் நிலையில் உள்ள வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த சிலையின் அருகில் வெண்கலத்தில் வார்க்கப்பட்ட பகவத் கீதை புத்தக மாதிரியும் வைக்கப்பட்டுள்ளது. இந்துத்துவாவை  வலியுறுத்தும் பகவத் கீதை புத்தக மாதிரி வைக்கப்பட்டதற்கு வைகோ, ஸ்டாலின், முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்டத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கலாம் நினைவிடத்திற்குச் சென்ற அவரது பேரன் சலீம், கலாமின் சிலை அருகே பகவத் கீதையுடன் பைபிள் மற்றும் திருக்குரான் ஆகியவற்றை வைத்தார். சிறிது நேரம் மட்டும் அங்கே வைக்கப்பட்டிருந்த குரானும், பைபிளும் பின்னர் கலாமின் சிலைக்கு  அருகில் இருந்த கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவை கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டதாக சலீம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கலாம் நினைவிடத்தில் பைபிளும், குரானும் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சியினர் கலாம் நினைவிடத்தின் முன் போராட்டம் நடத்தச் சென்றனர். இதனிடையே, கலாமின் சிலை அருகே இருந்த குரான் மற்றும் பைபிள் எடுக்கப்பட்டதை அறிந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பின்னர் குரான் மற்றும் பைபிளை கலாம் நினைவிடத்தில் வைத்த சலீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரை பெற்று கொண்ட தங்கச்சிமடம் போலீஸார். ''கலாம் நினைவிடம் முழுமையும் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களது கருத்தினை அறிந்த பின் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக'' தெரிவித்ததை தொடர்ந்து இந்து மக்கள் கட்சியினர் கலைந்து சென்றனர். அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவங்களால் கலாம் நினைவிடம் பரபரப்பாகவே உள்ளது.

எங்களின் வரலாறு பருத்தித்துறை தெருமூடி மடம்

¶^^^^ எங்களின் வரலாறு ^^^^¶
:பருத்தித்துறை தெருமூடி மடம்:


தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை உணர்த்தும் தெருமூடி மடங்கள்...............…!!

வடமராட்சியின் பிரதான நகரங்களில் ஒன்றான பருத்தித்துறையின் பிரதான வீதியில்இருந்து கிழக்குப் புறமாக தும்பளை வீதியில்  சிவன் கோயிலுக்கு முன்புறமாக இன்று எஞ்சி இருக்கும் பழைய தெருமூடி மடம் எமது பாரம்பரியமான மரபைக் காட்டிக்
கொண்டிருக்கின்றது.இதை போன்ற அமைப்பு கண்டி அரசர் காலத்தில் அம்பலம என்ற இடத்திலும் காணப்பட்டன.இதில், இடப்புறமாகவும், வலது புறமாகவும் உள்ள இருபக்கங்களிலும் தரையில் இருந்து 2 அடி உயர்த்த ப்பட்டு,
40 அடி நீளத்திற்குத் திண்ணையாக்கப்பட்டு
20 அடி உயரமான கூரை அமைக்கப்பட்டுள்ளது.பிரதான வீதிக்கு குறுக்காக இருபக்கங்களையும் மூடி கூரை அமைக்கப்பட்டுள்ளது.நீண்ட தூரம் பயணம் செய்து வருபவர்கள் அதில் அமர்ந்து இளைப்பாறிச் செல்வதற்கு ஏற்ற வகையில்,160 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டிருந்தது
பருத்தித்துறையில் அமைக்கபட்ட தெருமூடி மடங்கள் போன்று, மந்திகை, மாலிசந்தி ஆகிய பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டிருந்த போதும்,இவை அழிவடைந்த நிலையில் பருத்தித்துறையில்உள்ள தெருமூடி மடம் மட்டுமே இன்றும் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.முற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால்,பொது மக்கள் கால்நடையாகவே நெடுந்தூரம் நடந்து சென்று தமத தேவைகளை நிறைவு செய்து கொள்வார்கள் . பருத்தித்துறைக்கென உள்ள தனித்துவமான பண்பாட்டுச்  சின்னமாகக் காணப்படும் தெருமூடிமடம் போன்று தற்பொழுது வேறு எங்கும் இல்லை. ஆயினும் யாழ்ப்பாணத்தில் பண்டாரமடம்
உப்பு மடம், முத்தட்டு மடம், மருதனார் மடம், ஆறுகால் மடம், கந்தர் மடம், வல்வெட்டித்துறை வழுக்கல் மடம், நாவலர் மடம், செட்டியார் மடம் பருத்தித்துறை சுப்பர் மடம், பண்டத்தரிப்பு மடம், சாரையடி மடம்,சங்கத்தானை மடம், பனைமுனை மடம்,நெல்லியடி மடம், ஆகிய இடங்களில் இத்தகைய தங்கு மடங்கள் இருந்தபோதும் அவற்றுள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டு விட்டன..ஆனால் பருத்தித்துறை தெருமூடி மடம் போன்ற  வீதியை மூடி இரு மருங்கிலுமாக உள்ள மடங்களும் இருந்துள்ளதற்குச் சான்றாக இன்று இது ஒன்றுதான் விளங்குகின்றது. இத் தெருமூடி மடம் 160 வருடங்கள் பழமை வாய்ந்ததாக இருந்தாலும், இதன் கட்டடக் கலையானது,திராவிடக் கட்டடப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடமானது, வெண்வைரச் சுண்ணக் கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்களைக் கொண்டதுடன் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகியன சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.இங்கு காணப்படும் 16 தூண்களில்,ஆறு தூண்களில் தமிழ் வரிவடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இத்தெரு மூடி மடத்தின் கூரையானது எவ்வகையிலும் பிரதான போக்குவரத்துக்குத் தடையாக அமையாமல் உருவாக்கப்பட்டுள்ளமை இதன் இன்னொரு சிறப்பாகும்.

 ஏற்கனவே வடமராட்சியில் மேலும் மந்திகை வல்லை றோட் போன்ற இடங்களில் தெரு மூடி மடங்கள் இருந்தபோதும் அவை அழிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவற்றையாவது நாம் ஒரு அமைப்பு ரீதியாகச் செயற்பட்டுப் பேணிப் பாதுகாக்க முன்வர வேண்டும்.அதேவேளை வடமாகாணச் சுற்றுலாத் துறை அமைச்சு இதனை மரபுரிமை பேணும் இடமாகப் பிரகடனப்படுத்திப் பேணிவரவேண்டும்.

ஆயினும் பருத்தித்துறை வாழ் மக்கள்  நமது பாரம்பரியப் பெருமைகளைப் பேணிவரும் மரபுரிமைச் சொத்துக்களை அழியவிடாது இன்றும் பாதுகாத்து வருவதையிட்டு தமிழுலகம் நன்றியுடன் நினைவு கூருகின்றது.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை ஒகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு  முதல் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துவோர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

பொலிசாரைத் துரத்தி துரத்தி வெட்டிய இளைஞர்கள்: யாழில் சம்பவம்

யாழ். கோப்பாய் பகுதியில் பொலிசார் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாகவும், அதேவேளை  இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் ஆவா குழுவினரே பொலிசாரை வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த இரு பொலிஸாரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவில் பொற்பதி வீதிப் பகுதியில் 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்கள்.
யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிசார் இருவர் மீதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இரு பொலிஸாரும் துப்பாக்கி கொண்டு செல்லாமல் பொது மக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக சென்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சிற் அங்காடி திறப்பு (படங்கள்)



உலக வங்கியின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட சிற்அங்காடி முதல்வரினால் திறந்து வைக்கப்பட்டது.
நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் 13 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் யாழ் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட 76 கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய சிறிய சந்தை தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனால்  திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் , யாழ் வணிகர் சங்கத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 34) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.
எதிர்பார்த்ததுதான் என்றாலும்...அதையும் தாண்டிய ஏகோபித்த வரவேற்பு இந்த தொடருக்கு. வாசகர்களுக்கும், முக்கியமாக ஓவியா-ஜுலிக்கும் நன்றிகள். நேற்று விகடன் தளத்தில் அதிகளவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் வாசிக்கப்பட்ட ஒன்றாக முதல் அத்தியாயம் இருந்தது. அந்த வரவேற்பை தக்க வைக்க கை கொடுக்குமாறு பிக்பாஸை கேட்டுக் கொள்கிறேன்.

நேற்றைய, ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! அத்தியாயத்தின் இறுதியில் ஓவியா மீதான உங்கள் அபிமானம் பற்றிய கேள்விக்கு வாசகர்களின் பெரும்பான்மை பதிலை கணிக்க முடியும். 
ஆம்... ஓவியா ஆர்மி ஓவியாவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. பிக் பாஸ் டார்லிங் பட்டத்தை ஓவியாவே இப்போதும் தக்க வைக்கிறார். 
சரி... நேற்றைய (29/07/17) பிக் பாஸ் நிகழ்வுகளை அலசுவோம்..!
பரணி வெளியேற்ற வைபவம் நடந்த போது 'வீட்டுக்குள்ள இத்தனை கஷ்டப்பட்டீங்க, எப்ப சந்தோஷமா இருந்தீங்க?' என்று கமல் பரணியிடம் கேட்டார். 'சனி,ஞாயிறு.. நீங்க வரும் போதுதான் சார்" என்றார் பரணி. ஒருவகையில் அது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும் கூட பொருந்தும் என நினைக்கிறேன்.
அந்த வாரம் முழுக்க நடந்த பரபரப்புகளுக்கான வேறொரு பரிமாணத்தை, அதற்கான விடைகளை, தீீர்ப்புகளை அவர் தருவார் என்று நீதிபதியை ஆவலாக எதிர்நோக்கி அமர்ந்திருப்பது போன்று நாம் காத்திருக்கிறோம். அம்மாவினால் தண்டிக்கப்பட்ட சிறுவன், அழுது கொண்டே  'இரு.. அப்பா வந்ததும் அவர் கிட்ட சொல்றேன்' என்று தன் மனக்குறையைக் கொட்ட அவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல கமல் வருகையை வார இறுதியில் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. வெளி மனிதர்களையே அதிகம் பாா்த்திராத போட்டியாளர்களுக்கும் கமலின் வருகை பயங்கர உற்சாகத்தையும், பயம் கலந்த ஆவலையும் ஏற்படுத்தும் என யூகிக்கிறேன்.

சிறந்த ஒப்பனையுடன் வரவேற்பறையில் அவர்கள் பவ்யமாக அமர்ந்திருக்கும் தோரணையிலேயே இது தெரிகிறது. வாத்யாரைக் கண்ட பள்ளி மாணவர்கள் போல வரவழைக்கப்பட்ட மரியாதையுடன் அமர்ந்திருக்கிறார்கள். 'என்னப்பா... ஏதோ சண்டையாமே?' என்று விசாரிக்கப்படும் போது .. 'சண்டையா.. இல்லையே.. அப்படின்னா... என்ன..அது எங்கோ திருநெல்வேலியிலோ . தூத்துக்குடியிலோ இருக்கும் சார்.. எங்களுக்குத் தெரியாது ' என்று பூசி மெழுகப் பார்க்கிறார்கள்..  30 காமிராக்கள் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து 'என்ன நடந்துச்சுன்னா.. ' என்று அபத்தமாக விளக்கம் தர முனைகிறார்கள். அவர்களின் அகவுணர்வுகளை மட்டுமே காமிராவால் பதிவு செய்ய முடியாது. 

கமலின் முன்னால் போட்டியாளர்கள் இப்படியிருக்கும் போது, சற்று கவனித்துப் பார்த்தால் ஓவியா மட்டுமே இங்கு வித்தியாசப்படுகிறார். மற்றவர்கள் அதுவரை பல பிறாண்டல்களில், உரசல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கமல் முன்னால் அத்தனையையும் மழுப்புகிறார்கள்; நடிக்கிறார்கள். இதற்கு நேரெதிராக ஓவியா இருக்கிறார்.  வீட்டினுள் ஏற்படும் பல சர்ச்சைகளை பொறுமையாக கடக்கிறார். சமயங்களில் வெடிக்கிறார்.

ஆனால் கமல் முன்னால் போலியாக எதையும் நடிப்பதில்லை. அது கோபமோ, மன்னிப்போ, சந்தோஷமோ சட்டென்று அப்படியே வெளிப்படுத்தி விடுகிறார்.. இதுவே அவருடைய நேர்மையையும் தனித்தன்மையையும் காட்டுகிறது. இது போன்றவர்கள் வெளியுலகத்தை விட தங்களுக்குத் தானே உண்மையாக இருப்பதற்கே முக்கியத்துவம் தருவார்கள். மற்ற குறைகள் இருந்தாலும் இந்தக் குணத்திற்காகத்தான் ஓவியா மிக அதிகமாக கொண்டாடப்படுகிறார். பெரும்பான்மையோரிடம் இல்லாத அரிய விஷயம் இது.
ஜூலி தனக்கு செய்த அபாண்டமான துரோகத்தையும், நெஞ்சழுத்தத்துடன் இன்னமும் அதை சாதிப்பதையும் ஓவியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்தக் கீழ்மை அவருக்கு வெறுப்பையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. அதைச் சகிக்க முடியாமல் கோபப் பட்டுக் கொண்டே இருக்கிறார்.  மற்றவர்களின் கடுமையான வசைகளையும் வெறுப்பையும் உடனே மறந்து ' ok fine, no problem' என்று உதறி விட்டுச் செல்லும் ஓவியாவால், ஜூலியின் இந்த நேர்மையின்மையை சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பது ஒருவகையில் நியாயமே..
இன்னொரு புறம், இந்த விஷயத்தில் ஜூலி இன்னமும் கூட மனதார மன்னிப்பு கேட்கவில்லை என்றே தெரிகிறது. வாத்தியார் அதட்டி, 'என்னடா மன்னிப்பு கேட்கறியா?' என்றவுடன் 'சரிங்க .. சார்..' என்று பவ்யமாக கூறி விட்டு வாய் வார்த்தையாக மன்னிப்பு கேட்கும் பள்ளி்ச் சிறுவனைப் போல்தான் ஜூலி நடந்து கொண்டிருக்கிறாரே ஒழிய, எவருடைய கட்டாயமும் உந்துதலும் இல்லாமல் தன்னிச்சையாக மனதின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்கவில்லை. கடந்த வாரமும் சரி, இந்த வாரமும் சரி அதுவே நிகழ்ந்தது. இதுதான் ஓவியாவை அதிக மன உளைச்சலுக்கு தள்ளுகிறது. தாமே முன் வந்து பேசி. ஜூலிக்கு சில வாய்ப்புகள் தந்தும் கூட அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் கடந்து செல்வது அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கமல் முன்னாலேயே 'அவ இன்னமும் திருந்த மாட்டா சார்..எனக்கு நம்பிக்கையில்லை' என்று சொல்ல வைக்கிறது.
ஆனால் ஒன்று தோன்றுகிறது. ஓவியா இல்லாவிட்டாலும் கூட நிகழ்ச்சியைப் பார்க்க முடியும். ஜூலி இல்லையென்றால் இந்த நிகழ்ச்சி கணிமான வெறுமையை அடையும் என்று நினைக்கிறேன். பிரபல அந்தஸ்து ஏதுமில்லாமல் ஒரு சாதாரண பின்னணி கொண்ட பெண்ணால் ஒரு நிகழ்ச்சியில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியும், தனக்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒருவகையில் அவரின் பலம்.  'எங்களை விடவும் அவங்க நல்லா நடிக்கறாங்க சார்' என்று ஓவியா, கச்சிதமான நேரத்தில் போட்டுக் கொடுத்தது ஒருவகையில் சரியான அனுமானம். 
சரி, நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போம்.

வழக்கம் போல் ஓவியாவின் ரகளையான நடனம். இதைப் பாராட்டி பாராட்டி நமக்கே சலித்து விட்டது. 

ஸ்மோக்கிங் அறைக்குள் இருந்த ஒரு தவளையிடம் ஓவியா பேசுவதும் அது நகர்ந்த போது பதறி ஓடி வந்ததும் பார்க்க ஜாலியாக இருந்தது. போலவே ரைசாவும் தவளையைக் கண்டு அதீதமாக பயந்தது நகைச்சுவை. பெருநகரத்தைச் சார்ந்த உயர்வர்க்க பெண்களின் தோரணையே அவர்களிடம் தெரிந்தது. மாறாக, விவசாயப் பின்னணியிலிருந்து வந்ததாலேயோ என்னமோ, ஜூலி தவளையைக் கையால் பிடித்து அப்புறப்படுத்தினார். ஒருபுறம் இது வேண்டாத வேலைதான். அப்படியே விட்டிருந்தால் அது போயிருக்கும்.  கையில் பிடித்து முறுக்கு பிழிந்திருக்க வேண்டாம். 
காயத்ரி இப்போது அடக்கி வாசிப்பது, தன்னுடைய பிம்ப சேதத்தை சரிசெய்யும் முயற்சி முயன்றாலும், அவருடைய கடுமையான முகம் மீண்டும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. 'கார்ப்பெட் இழுக்கப்பட்ட விவகாரத்தில்' "ஓவியாவின் மீது அதிக கோபம் வந்தது' என்கிறார். இது ஜூலி மீதுள்ள பாசமா அல்லது தன்னிடமிருக்கும் அடிமையை தக்கவைத்துக் கொள்வதற்கான உந்துதலா என்பது ஆராயத்தக்கது.

ஜூலி தலைவர் ஆனதும் அதிக பந்தா செய்தது பிரச்னைக்கு முக்கியமான காரணம். ஓவியாவை பழிவாங்க வேண்டுமென்றே அவர் காய்களை நகர்த்திய தந்திரமும். (இந்தச் சூழலை உருவாக்கித் தந்த பிக் பாஸ் மூல காரணம் என்றாலும்).

'சின்ன பிக் பாஸ்' என்கிற தற்காலிக கிரீடம் கிடைத்தாலும் ஆரவ் அதை வைத்துக் கொண்டு அதிக பந்தாவேதும் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அந்த நிலையை சரியாக கையாண்டார். தண்டனைக்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களிடம் அதற்கான காரணத்தை, இயல்பான பணிவுடன் சொல்லி நம்மைக் கவர்ந்தார். ஜூலி இதைச் செய்யவில்லை. 'பதவி வரும் போது பணிவு வரவேண்டும்' என்கிற தங்க வாக்கியம் இங்கு நினைவுகூரத்தக்கது.
தலைவர் ஆனாலும் ஒருவகையில் அது ஜூலிக்கு அளிக்கப்பட்ட தண்டனையே. சிறிது நகர வேண்டுமானாலும் 'ரெட் கார்ப்பெட்' சேவை தேவை. அதற்கு ஓவியாவை அழைக்க வேண்டும். பிறகென்ன, சண்டைதான், சச்சரவுதான். 'பிக் பாஸின்' இந்த ஏற்பாடு பிரமாதம். நூறு நாரதர்கள் சேர்ந்தாலும் இது போன்ற டெடரான ஐடியாக்களை யோசிக்க முடியாது.
'சூசு' போவதற்காக ஜூலி  ஆரவ் பெயரைச் சொல்லி அழைக்க, "ஏன், என் பெயரைச் சொல்லி கூப்பிடட்டும்' என்று ஓவியா சொன்னது ஜாலியான பந்தா. ஒருவகையில் அது சரிதானே? 'டயர்ட் ஆன மாதிரி இருக்கே. காலைப் பிடிச்சு விடட்டுமா?' என்று ஜூலியை அவர்  விளையாட்டாக சீண்டிக் கொண்டேயிருந்தார். தலைவர் பதவி எப்போதும் பிரச்னைதான் போல. முள் கிரீடம் அணிந்தது போல. பாவம் ஜூலி. 

***
'ஒரு பொய் நூறு பொய்களுக்கான விதை' என்கிற மகா தத்துவத்துடன் நிகழ்ச்சிக்குள் நுழைந்தர் கமல். தமிழக அமைச்சர்களுடன் இடும் சண்டை ஒருபுறம், கடுந்தமிழில் 'ட்வீட்கள்' எழுத வேண்டிய கடமை ஒருபுறம், ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டிய கண்ணியம், சபாஷ் நாயுடு.... என்று இருக்கிற ஆயிரம் பணிகளுக்கிடையில் அது சார்ந்த சலிப்பு முகத்தில் ஏதுமில்லாமல் புத்துணர்ச்சியோடு வந்தார். வழக்கமான கருப்பு உடை கனஜோராக இருந்தது. ஆனால் காமிராவை முறைத்து பார்த்துக் கொண்டே 'ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு' என்று பயமுறுத்துவதை தவிர்க்கலாம்.
கடந்த வாரங்களைப் போல், 'வழவழா கொழகொழா' நாட்டாமையாக இல்லாமல் தேங்காய் உடைத்ததைப் போன்று தெளிவாக பிரச்னைகளை  நோக்கி கமல் நகர்ந்தது பாராட்டு. மாற்றம், முன்னேற்றம், கமல்.
ஆனால் என்னவொரு   நெருடல் என்றால்.....
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். மேலாளராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பெண்களைப் பார்த்ததும் இளிப்புடன் வழிவார். ஆனால் ஆண்களைப் பார்த்ததும் முகம் கடுகடுவென்று மாறும். இதற்கேற்ப பின்னணியில் 'சுந்தரி நீயும் சுந்தரம் ஞானும்' பாடல் ஓடும். (அட, இதுவும் கமல் பாட்டுதான்).

இதைப் போலவே சுற்றிச் சுற்றி வந்து ஜூலியின் பொய்யை இரண்டு வாரமாக மிக நீண்ட குறுக்கு விசாரணை செய்யும் கமல், காயத்ரி செய்த ராவடிகளை போகிற போக்கில் கடந்து செல்வது ஏன்.. ஏன்.. என்கிற கேள்வி நெருடிக் கொண்டேயிருக்கிறது. ஓவியாவை தூங்க விடாமல் காயத்ரி டீம் செய்த அக்கிரமங்களை 'குறும்படமாக' உருவாக்கும் இயக்குநராக கமல் ஏன் மாறவில்லை? ஏதேனும் பட்ஜெட் பிரச்னையா, அல்லது வேறு ஏதேனும் சார்பு அரசியலா?
'தாங்கள் சார்பற்றவர்கள்' என்று என்னதான் பல்வேறு விதமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தாலும் இத்தனை பெரிய நெருடலை அவர்களால் கடக்க முடியவில்லை. 

இந்த நிகழ்ச்சிக்கு வரும் எதிர்வினைகளை கமலும், பிக் பாஸ் டீமும்  நிச்சயம் கவனித்துக் கொண்டிருப்பார்கள். மேற்குறிப்பிட்ட நெருடல் பல பார்வையாளர்களிடம் இருப்பதை சமூக வலைத்தளங்களில் எழும் கொதிப்புகளின் மூலம் உணர முடிகிறது. இந்தக் கேள்விக்கான சரியான பதிலை விளக்குவது நலன் பயக்கும், அவர்களுக்கு.
'அவ்வை சண்முகி' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை, போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நடித்துக் காண்பிக்க வேண்டும் என்றொரு task தரப்பட்டது. 'எது பொய், எது உண்மை, பெண்ணாக வேடமிட்ட ஆண்..' என்கிற கருத்தாக்கம், இந்த திரைப்படத்தில் இருந்ததால் இதைத் தேர்ந்தெடுத்தேன் என்றார் கமல்.

இரு அணிகளின் பங்களிப்பில், சக்தி குழுவின் நடிப்பு சிறந்ததாக இருந்தது. நாகேஷின் தோரணையை இயன்ற வரையில் பிரதிபலித்தார் சக்தி. காயத்ரியின் நடிப்பும் ஓகே. ஜூலியின் பிராமண உச்சரிப்பு பரவாயில்லை. 'டெல்லி் கணேஷாக' ஆரவ் கலக்கியது ஆச்சரியம். இறுதிப்பகுதியில் மாராப்பை மூடிய படி ஜூலி தந்த எக்ஸ்பிரஷன் ரகளை.

வையாபுரி டீமில் அவருடைய நடிப்பு அட்டகாசம். கூடுதலாக பல வசனங்களைச் சேர்த்து பிரமாதப்படுத்தினார். சந்தடி சாக்கில், தன் வழக்கமான புராணமான, புஷ்டியான கணேஷை 'சாப்பாட்டு ராமன்' என்று கிண்டலடிக்கவும் தவறவில்லை. பிராம்ப்டிங் தர வேண்டியிருந்த ஓவியா பயங்கரமாக சொதப்பினார். பெண்  வேடத்தில் சிநேகனைப் பார்க்க செம காமெடியாக இருந்தது. மன்மோகன் சிங்கை நினைவுப்படுத்துவது போல இருந்தார். 
நாடகம் முடிந்ததும் நிஜ நாடகம் நடந்தது. 'அந்த ஐந்து விநாடி வீடியோவை ஏன் துருவிக் கொண்டேயிருக்கிறீர்கள்' என்று கமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். 'என் மேல் நம்பிக்கையில்லையா?"
'திரும்பவும் போட்டுப் பார்க்கலாமா?' என்கிற கேள்விக்கு 'வேண்டாம் சார்' என்று ஜூலி சொன்னது ஒருவகையில் புத்திசாலித்தனம். ஆனால் இந்த விஷயத்தைதானே இரண்டு வாரங்களாக 'திரும்பத் திரும்ப பேசற நீ' யாக அவர் கேட்டுக் கொண்டேயிருந்தார் என்று எரிச்சலாகவும் வந்தது. 
'அவ்வை சண்முகி' காட்சிகள் நடிக்கப்பட வைக்கப்பட்டது ஏன் என்கிற கேள்விக்கு 'அதுல நெறய பொய் வருது' என்று முதலில் சரியாக சுட்டிக் காட்டியது ஒருவகையில் அவரை வெளிப்படுத்தியது. நுணலும் தன் வாயால் கெடும். (காலையில் வந்த தவளை). 

ஜூலி கேட்ட மன்னிப்பில் வழக்கம் போல் உண்மைத்தனம் இல்லை. ஒரு கட்டாயத்திற்காக சொன்னது போல்தான் இருந்தது. ஓர் அற்பமான பிரச்னையை பிடித்துக் கொண்டு வருடக்கணக்கான பகைமையுடன் உளைச்சல் கொள்ளும் நமக்கும் இதில் பாடம் இருக்கிறது. உறவுகளுடன் கழிக்க வேண்டிய எத்தனை மகிழ்ச்சியான தருணங்களை இது போன்ற அசட்டுத்தனமான பிடிவாதத்தின் மூலம் இழக்கிறோம்?
சக்தியின் 'ஆணாதிக்க' உரையாடலை, கமல் நேரடியாக கண்டித்தது பாராட்டு. ஆனால் சக்தி இன்னமும் கூட அதை நேரயாக ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. கமல் பேசுவதைப் போலவே 'வழவழா' என்று சுற்றி வந்தார். அப்போது கூட தான் கையை ஓங்கியதற்காக மனம் வருந்தி ஓவியாவிடம் மன்னிப்பு கேட்கத் தயாரில்லை. ஒருவகையில் இதுவும் 'ஜூலித்தனமே'.
காயத்ரியின் நிழலாக இருக்கும் சமயங்களில்தான் சக்தி பாழாகிறார் என்றாலும், அவர் மற்றவர்களை அவதானிக்கும், கிண்டலடிக்கும் விஷயங்களில் கூர்மையானவராக இருப்பதைக் கவனிக்கலாம். 'ஜூலி இல்லைன்னா.. எந்த ஸ்டோரியும் இல்ல' 'அடிபட்ட பாம்பு மாதிரியே படுத்திருக்கா' என்பது போன்ற உரையாடல்களில் ஜாலித்தனத்தோடு புத்திசாலித்தனமும் இருக்கிறது.

கமலின் விசாரணையின் போது ஜூலியின் வரவழைக்கப்பட்ட சிரிப்பிற்கும் ஓவியாவின் தன்னிச்சையான சிரிப்பிற்கும் இடையே ஆயிரம் வித்தியாசம் இருந்தது. 'கார்ப்பெட்' இழுத்தது தவறு என்று சுட்டிக்காட்டப் போது அதை உடனே ஒப்புக் கொண்டதில் ஓவியா கவர்ந்தார். 'பொய் சொல்றவங்களை என்னால் ஏத்துக்க முடியாது.. சார்..' என்று அவர் சுட்டுவது நியாயமான காரணமே. அவரது ஆளுமைக் குணம் அப்படி. 

***
பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்கிற கருத்து பல பார்வையாளர்களின் மனதில் இருப்பதை பார்க்கிறேன். இதைப் பற்றி வரும் கட்டுரைகளில் விரிவாகப் பேசுவோம். 'தன்னைத் தானே வரைந்து கொள்ளும் சித்திரம்' என்று கச்சிதமான வார்த்தையில் கமல் குறிப்பிட்டது இதைத்தான்.

திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழலில், பின்னணயில் மனிதர்கள் தன்னிச்சையாக வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. அதில் போலி இல்லை. அது திட்டமிட்ட நடிப்பு என்றால் பிக் பாஸ் போட்டியாளர்கள்தான் உலகின் மிகச்சிறந்த நடிகர்களாக இருக்க முடியும். ஆனால் திரைத்துறையில் அவர்கள் அத்தனை சிறந்தவர்கள் இல்லை என்கிற யதார்த்தத்தை கவனியுங்கள்.
உண்மையான பாவங்களுடன் வெளிப்படுத்தப்பட்ட காட்சிகளை திறமையாக ஒழுங்குபடுத்துவதின் மூலம் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் திரித்துக் காட்ட முடியும். தொடர்ச்சி அறுபடாமல் செய்வதுதான் இதிலுள்ள சவால். எடிட்டிங் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. (கவண் திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வருகிறதா?) ஆனால் சினிமா ஞானம் அதிகமுள்ள கமல் இதை மறுக்க அல்லது மழுப்ப முயன்றது, சின்ன உறுத்தல். சில விஷயங்களை காட்டாமலிருப்பதின் மூலமும், சில காட்சிகளை கோடிட்டு அழுத்தம் திருத்தமாக காட்டுவதின் மூலம் பல 'உண்மைகளை' கட்டமைக்க முடியும். 

'காமிரா பொய் சொல்லாது. அது சிந்தனைக் கருவியல்ல' என்று அவர் சொன்னது மட்டுமே அடிப்படையான உண்மையாக இருக்க முடியும். 
கேமராவின் பிரக்ஞை இல்லாமலிருப்பதே ஒரு நடிகனுக்கான அடிப்படை தகுதி என கமல் சொல்லியது முக்கியமான விஷயம். எந்தவொரு சினிமாவிலும் ஒரு துளி நேரமாவது நடிகர்கள் காமிராவைப் பார்த்து, அது எடிட்டிங்கிலும் தப்பி வெளியே வந்து விட்டால், சாதத்தில் கல்லைக் கடித்தது போல பார்வையாளர்களிடம் சட்டென்று ஒரு விலகலை ஏற்படுத்தும்.

***

'வெளியே வந்தா கையைக் காலை உடைச்சுடுவேன்'னுலாம் சொல்லாதீங்க.. நான் இங்க இருக்கேன்' என்று காயத்ரியை மறைமுகமாக அவர் குறிப்பிட்டது 'நச்'. ஆனால் அந்த வசனம் காயத்ரியை இடித்துரைக்கவா, அல்லது சமகால அரசியல் பூசல் தொடர்பான வசனமா என்பது குழப்பம். 'பிக் பாஸ்' சூழலையும் 'தமிழக அமைச்சர்கள் - கமல் மோதல்' என்கிற அரங்கிற்கு வெளியேயுள்ள சூழலையும் இணைத்து நையாண்டி செய்ததில் கமலின் சமயோசிதம் பாராட்ட வைக்கிறது.
ஆனால் - 'அவங்க எல்லாம் தேவையில்லை (ரசிகர்கள்). நான் ஒருத்தனே போதும்' என்று வெளியே அறிக்கை விட்ட அதே சவடாலை அரங்கின் உள்ளேயும் வைத்தார். ஒரு விளி கேட்கிறது! 

'100 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும்': பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பொங்கும் கிருஷ்ணசாமி!

தமிழகத்தில், பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும், பிக் பாஸ் நிகழ்ச்சி பரவலாக பேசப்படும் ஒன்றாக மாறி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளையும் பிக் பாஸ் கிளப்பியுள்ளது. குறிப்பாக, அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள காயத்ரி ரகுராம், 'சேரி பிஹேவியர்' என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் கண்டனங்க
ளும் எழுந்தன.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோவை சென்றுள்ளார். அங்கு குனியமுத்தூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு, பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வெங்கைய நாயுடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கோபால கிருஷ்ணகாந்தியை விட, வெங்கைய நாயுடு அந்தப் பதவிக்கு தகுதியானர். வெங்கைய நாயுடு வாக்கு பலம் உள்ளவர். 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் 'சேரி பிஹேவியர்' என ஒரு சமூகத்தை இழிவுபடுத்தியதற்கு பொறுப்பேற்று, நடிகர் கமல்ஹாசன் மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இரண்டு நாள்கள் அவகாசம் அளித்தது இருந்தேன். ஆனால், கால அவகாசம் முடிந்தும் மன்னிப்பு கேட்கவில்லை. இதையடுத்து, கமல் மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் உள்ளிட்டோர் மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன்" என்றார்.

உடல் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்குவது எப்படி..?

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்குவது எப்படி..?
தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது.
நமது உடலில் வெப்பம் குடிகொள்ளும் போது, நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதன் தாக்கத்தால் முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது,

இதனை சரி செய்ய  ஒரு எளிய மற்றும் ரகசியமான வழி இதோ உங்களுக்காக…

தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
* நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
* எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டைப் போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
* சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இருகால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.
* 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.
* இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.
* 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.
* மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
* தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.
* மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை செய்தால் போதுமானது.

பகவத் கீதை சர்ச்சை: அப்துல் கலாம் சிலை அருகே குரான், பைபிள் வைப்பு!

அப்துல் கலாம் சிலை அருகே குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2015-ம்  ஆண்டு ஜூலை 27-ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக்கொண்டிருந்தபோது உயிர் பிரிந்தது. அவரது உடல்,  மூன்று நாள்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு என்னுமிடத்தில் அடக்கம்செய்யப்பட்டது. கலாம்உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. 


இதை கடந்த 27-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனிடையே, அப்துல் கலாமின் நினைவிடத்தில், அவரது சிலை அருகே பகவத் கீதை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக, எதற்காக பகவத் கீதையை மட்டும் வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 
இந்நிலையில், அப்துல் கலாம் சிலை அருகே இன்று காலை பைபிள் மற்றும் குரான் வைக்கப்பட்டுள்ளது. பகவத் கீதை வைக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டுள்ளது.

தமிழரின் சுயவிபரக்கோவை

சுயவிபரக்கோவை
பெயர் :- ஈழத்(!!!)தமிழன்

வேறுபெயர்கள்:- பயங்கரவாதி, இனவாதி

வயது:- கல்தோன்றி மண்தோன்றாக் காலம்

இனம்:- தமிழ்

தொழில்:- அடிவாங்குவது

அடிவாங்கிய இடம்:- காவல் நிலையம், இராணுவ நிலையம், சிறைச்சாலை, ஒழுங்கை, வீதி, இப்பொழுது பல்கலைக்கழகம். ஏரியா பூரா வாங்கி இருக்கிறோம் எதைச் சொல்ல.

உபதொழில்:- காட்டிக்கொடுப்பது.

பெருமைப்பட்டுக்கொள்வது:- ஆண்ட பரம்பரை, மற்றும் உலகின் மூத்த குடி

விட்டது:- தன்மானத்தை

விடாதது:- சாதியை

செய்யத்துடிப்பது:- அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் திருவிழா

செய்யாதது:- ஒற்றுமையாக இருப்பது

மறந்தது:- கல்வியை

மாற்ற நினைப்பது:- எதுவும் இல்லை

மாறதது:- வீட்டுக்கு(TNA) ஓட்டுப்போடுவது

பூர்விகக் குணம்:- சோரம் போதல்

உப குணம் :- மறதி

வீரம் என்பது:- வெளிநாட்டுக்கு போன பின்னர் வருவது.

நம்புவது:- ஆட்சி மாற்றத்துடன் விடிவு வரும் என்று

நம்பாதது:- உண்மை பேசுபவனை

சாதனை:- குடியில் முதலிடம்

எதிர்காலத்திட்டம்:- தொடர்ந்தும் குடியில் முன்னிலை வகிப்பது.
**சிந்திப்போம் செயற்படுவோம்**

ஐரோப்பாவில் உடைபட்டது தடை… என்ன செய்யும் இந்தியா?

ஈழத் தமிழர்களின் மனதில் பால் வார்க்கும் ஒரு செய்தி… ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது’ என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விடுதலைப்புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியாதான்.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருந்தன. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் அடங்கியுள்ள 26 நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படும். தொடர்ந்து கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தடை நீங்க வாய்ப்புகள் உள்ளன. இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
இந்தத் தடை உடைபட்ட தருணம் குறித்து ஜூ.வி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார், நார்வே ஈழத் தமிழர் அவையின் முன்னாள் உறுப்பினர் முனைவர் விஜய் அசோகன்…
கடந்த 2006-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடையை, தொடர்ந்து நீட்டிக்கச் செய்ய 2011-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சபை சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து 2011-ம் ஆண்டே புலிகளின் தரப்பில், ஐரோப்பா வாழ் தமிழர்களால் லக்ஸம்பர்க் நகரில் இருக்கும் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதில் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கி, 2014-ம் ஆண்டிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து மேல் முறையீடுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சென்றது. மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு, புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கும் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது ஐரோப்பிய நீதிமன்றம்.
2001-க்குப் பிறகு எல்லா நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஒன்று சேர்ந்து ஈடுபடுவது என முடிவு செய்தன. அப்போது, ஐரோப்பிய ஒன்றியமும், தங்களது எல்லைக்குள் தடை செய்யப்படும் அமைப்பின் சொத்துகளை முடக்கும் சட்டத்தை இயற்றியது. இதனை அடிப்படையாக வைத்து, 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகளையும் தடை செய்யப்பட்ட இயக்கப் பட்டியலில் ஐரோப்பிய நாடாளுமன்றம் சேர்த்தது.
ஆனால் இதனை, ‘வரலாற்றுத் தவறு’ என 2014-ல் தமிழ்நெட் இணையச்செய்திக்கு அளித்த பேட்டியில் இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவராக இருந்த உல்ஃப் என்றிக்சன் (ஸ்வீடன்) தெரிவித்து இருந்தார்.
“இந்தத் தடை விடுதலைப்புலிகளை பலம் இழக்கச்செய்து, இலங்கை அரசைப் பலப்படுத்தி, கொடூரமான போருக்கு வழிவகுத்தது. புலிகளின் மீதான தடை, மிக அவசர அவசரமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது’’ என்று கூறியிருந்தார்.
புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரும் அரசியல் ஆலோசகருமான ஆண்டன் பாலசிங்கம், “இத்தடையால் தமிழர்கள் தரப்பு படை பலம் இழந்து, மிகப் பெரிய அவலத்தைச் சந்திக்க வழிவகுக்கும்” எனத் தனது கண்டனத்தை 2006-லேயே பதிவு செய்தார்.
அதன்பிறகு நடந்தேறிய கொடூரமான போரினால் பல்லாயிரம் தமிழர்கள் இறந்ததும், பல்லாயிரம் பேர் உடல் உறுப்புகளை இழந்ததும் அனைவருக்கும் தெரிந்த வரலாறு. 2011-ல் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் இந்தத் தடையை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த விக்டர் கோப் என்ற வழக்கறிஞரின் மூலம் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டு இடதுசாரி அரசியல்வாதி லதன் சுந்தரலிங்கம், அமெரிக்காவில் இருக்கும் சட்ட வல்லுநரான தமிழ் இளைஞர் ராஜீவ், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஈழத்தமிழர் மக்களவைப் பிரதிநிதிகள் என எண்ணற்றோரின் முயற்சியில் இது நடந்தது.
புலிகளின் இவ்வழக்குக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியச் சபையும், நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளும் வாதாடின. மூன்று ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், ‘விடுதலைப்புலிகளைத் தடைசெய்யும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் பொருளாதாரச் செலவைப் புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கவேண்டும். மூன்று மாத கால அவகாசத்தில் மறுப்பு தெரிவிக்காவிடின், இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரும்’ என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பில், ‘புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தரப்பில் கூறப்பட்ட எவ்வித ஆதாரமும் போதுமானதாக இல்லை. கனடா, இந்தியா போன்ற நாடுகள் புலிகளைத் தடைசெய்த ஆவணங்களை வைத்து ஐரோப்பிய நாடாளுமன்றமும் தடைசெய்தது தவறு.
2011-2015 காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட புலிகளின் சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும். புலிகள் 2009 போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழர்களின் அடுத்த இலக்கு, ‘2006-ல் வழங்கப்பட்ட ஐரோப்பியத் தடை தவறான அரசியல் முடிவு; அதனாலேயே தமிழின அழிப்பு நடந்தது’ என்பதே. சட்டத்தின் கதவுகளைத் தொடர்ந்து தட்டுவோம்!