Tuesday, September 5, 2017

3 கிலோ கேரளா கஞ்சாவைக் கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர்!

யாழ். சங்கானை பகுதியில் 3 கிலோ கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சங்கானைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கஞ்சா 2 கிலோவும் 650 கிராமும் நிறையுடைய கஞ்சா பொதிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஏழாலை மற்றும் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இருவரையும் விசேட அதிரடிப் படையினர் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் மூழ்கி இருந்த ரோம் ராஜ்ஜியம் கண்டுபிடிப்பு!!

கடலில் மூழ்கி இருந்த ரோம் ராஜ்ஜியத்தின் பண்டைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துனிசியா நாட்டின் வடக்கிழக்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நகரம் ரோம் ராஜ்ஜியத்தின் இரசாயன தயாரிப்பு மற்றும் மீன்கள் உற்பத்தி செய்யும் இடமாக இருந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் ஏற்பட்ட சுனாமி போன்ற பேரலையால் இந்த நகரம் கடலில் மூழ்கிப்போய் இருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 20 ஹெக்டர் பரப்பளவில் இந்த நகரம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், பல சிலைகள், அந்த சிலைகளை உருவாக்க பயன்படுத்தப்பட்ட 100 டாங்குகள் ஆகியவையும் அங்கு இருந்துள்ளது.
இந்த சிலைகள் கரன் என்னும் இரசயானத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.