Sunday, August 6, 2017

கனடாவில் ஆக.25-27-ல் தமிழ் இணைய மாநாடு... அசத்தலான 34 ஆய்வுக்கட்டுரைகள்!

உத்தமம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 16ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, ஆகஸ்ட் 25 முதல் 27 வரை, கனடா நாட்டின் டொரண்டோ நகரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருத்தரங்கில் படிப்பதற்காக அனுப்பப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 34 கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 
” கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்துகொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் ஆகியவை தொடர்பாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன” என்று உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநர் த.தவரூபன் தெரிவித்தார். 

சிங்கப்பூர் சிவக்குமாரனின் ‘கற்பித்தலில் தரவக மொழியியலின் பங்கு’, இலங்கை மு.மயூரனின் ‘இலங்கையில் அலுவலகமொழிகள் நடைமுறையாக்கத்தின் ஒரு பகுதியான தமிழ்மொழி நடைமுறையாக்கத்தில் தகவல்நுட்பத்தின் பங்கு’, மா.ஜெயகானந்தந்கு.வினுஜனன், செ.ஜெயபாலன் ஆகியோரின் ‘அடுத்த தலைமுறைக்கான தமிழ் மொழி நூல்களின் ஒருங்கிணைக்கப்பட்ட தேடு’, இந்தியாவைச் சேர்ந்த முனைவர் விஜயராணியின் ‘ பார்வை மாற்றுத்திறனாளிகளின் தமிழ் மென்பொருள் பயன்பாட்டில் தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள்’, சாய்ராம் ஜெயராமந் முருகானந்தம் சுந்தர்ராஜன் ஆகியோரின் “2016 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும் தமிழக இளைஞர்களின் அரசியல்சார்ந்த சமூக இணையதளப் பயன்பாடும்’, மலேசிய எஸ்.புஷ்பராணியின் ’இலக்கணப் பிழைகளின்றி தமிழ் எழுத எட்மோடோ வழி மெய்நிகர் கற்றல் கற்பித்தல் அணுகுமுறை’, கஸ்தூரி இராமலிங்கத்தின் ‘ஊடாடல், நகர்ப்படங்கள் கலந்த மின்னூல்கள் வழி குழந்தைகளுக்கான தமிழ்க் கல்வி’ ஆகியவை உட்பட்ட கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 
கட்டுரை தேர்வுக்குழுவின் தலைவரான கனடா பேரா. செ.இரா.செல்வகுமாரிடம் கட்டுரைத் தேர்வு குறித்துக் கேட்டதற்கு, 

”முன்பு நடந்த உத்தமம் நடத்திய மாநாடுகளின் ஆய்வரங்கக்குழுவில் தலைவராக இருந்த நான்கு பேர், இந்தக் கட்டுரைத் தேர்வுக்குழுவில் இருந்தார்கள். எங்களுக்கு ஏறத்தாழ 90 கட்டுரைச் சுருக்கங்கள் வந்தன. அவற்றுள் 34  கட்டுரைச் சுருக்கங்களே ஏற்கும்படியாக இருந்தன.  எட்டு கட்டுரைகள் மேம்படுத்தக்கூடியனவான இருந்தன. அவற்றின் ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களில் சிலர், தங்களின் கட்டுரைகளை  இருமுறையுங்கூட செம்மைப்படுத்தி அனுப்பிய பிறகு அவற்றில் 3 கட்டுரைகளை ஏற்றோம். முதலில் 31, பின்னர் 3, ஆக 34 கட்டுரைகள் தேர்வாகின. பெரும்பாலான கட்டுரைகளில் ஆய்வுத்தன்மை போதுமான அளவுக்கு இல்லாமல் இருந்ததைப் பார்க்கமுடிந்தது.  அடிப்படை ஆய்வுத் தரமே இல்லாமல் பல கட்டுரைச்சுருக்கங்கள் வந்திருந்தன. வரும் ஆண்டுகளில் ஆய்வுக்கட்டுரை எழுதுவது பற்றியும் ஆய்வு செய்வது பற்றியும் பட்டறைகள் நடத்துவது பற்றிப் பேசியிருக்கிறோம்” என்று அவர் கூறினார். 
டொரண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் நடக்கும் இம்மாநாட்டுக்கு, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான மையம், கனடா நாட்டு மின் மற்றும் மின்னணுப் பொறியியல் கழகம்- (IEEE Canada), அண்ணாமலைப் பல்கலைக்கழக கனடா கிளை ஆகியவை துணைசெய்கின்றன. 
தொடக்கவிழா, சிறப்புச் சொற்பொழிவுகள் உட்பட மற்ற நிகழ்ச்சிகளில் அனைவரும் இலவசமாகப் பங்கேற்கலாம். மூன்று சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளரும் ‘உத்தமம்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான மலேசியாவின் முத்து நெடுமாறன், மதுரைத்திட்ட முன்னோடியும் உத்தமம் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவருமான சுவிட்சர்லாந்து பேராசிரியர் முனைவர் கு. கல்யாணசுந்தரம், வாட்டர்லூ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்றூவாங்கு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். 
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்வான், இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். கருத்தரங்கில் பங்கேற்க மட்டும் கட்டணம் உண்டு. இது தொடர்பான விவரங்கள், இம்மாநாட்டின் இணையதளத்தில் (https://tamilinternetconference.infitt.org/home/) விரிவாகக் காணலாம். 
முன்னதாக, இந்த தமிழ் இணைய மாநாட்டுக்கான அடையாளம் வடிவமைப்புப் போட்டி நடத்தப்பட்டதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்லின் ஃப்ளோரன்சின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர், திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் பணிபுரிகிறார் என்பது தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகும். 
அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட உத்தமம் அமைப்பானது, 2000ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டதாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்த மு. ஆனந்தகிருஷ்ணன், இதன் நிறுவன காலகட்டத் தலைவர் ஆவார். தற்போதைய தலைவராக தமிழ்நாட்டின் செல்வமுரளியும், செயல் இயக்குநராக இலங்கையைச் சேர்ந்த த.தவரூபனும் செயல்பட்டுவருகின்றனர். 
(தேர்வுசெய்யப்பட்டுள்ள கட்டுரைகளைப் பார்க்க:https://tamilinternetconference.infitt.org/selected-papers/)

ஹட்டனில் மண்சரிவு!

ஹட்டன் சமனலகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு ஒன்று சேதமாகியுள்ளது.
மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக குறித்த வீட்டின் பின்புறத்தில் மண்மேடு சரிந்து விழுந்து இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பில் இருந்த நால்வரையும் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகிறது.

களிமண்ணால் அணை கட்டிய தமிழன்! உலகமே வியக்கும் அதிசயம்

பொதுவாக நீரைத் தேக்கவும், நீரோட்டத்தைத் தடுக்கவும், திசை மாற்றவும் அணை கட்டப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக காவிரியில் அடிக்கடி பெரு வெள்ளம் வந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
அவர்களின் துயரை துடைக்க கரிகால சோழன் காவிரி ஆற்றின் மீது அணைகட்ட முடிவெடுத்தார்.
உலகப் பழமை வாய்ந்த கல்லணை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.
காவிரியின் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்து சேர்கிறது.
இந்த கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என்று 4 வகை ஆறுகளாக பிரிக்கிறது.
சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்திய கரிகால மன்னன் இந்த கல்லணையை கட்டியவர் என்பதால், இவரை காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டு வந்தவன் எனும் பெருமைக்குரியவர்.
கல்லணை உருவானது எப்படி?
சோழர்கள் அடிக்கடி வெள்ளத்தால் அவதிப்படுவதில் இருந்து பாதுகாப்பாக இருக்க, காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர்.
ஆனால் அந்தப் பாறைகள் அனைத்தும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றது.
பின் பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக் கொள்ளும் விதமாகச் செய்து, இந்த களிமண் கல்லணையை கட்டி முடித்தனர்.
ஆனால் 2000 ஆண்டுகள் நெருங்கியும் இன்னும் வலிமையாக காணப்படும் இந்த கல்லணையின் தொழில்நுட்பம் மட்டும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
சிமெண்ட்டால் கட்டப்படும் பாலங்களின் ஆயுள் கூட 500 ஆண்டுகள் என்ற நிலையில், 2000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பலமுடன் இருப்பதே தமிழனின் அறிவுக்கு சான்றாகும்.

ஓகஸ்ட் 06: ஹரோஷிமா மீது அமெரிக்கா சின்னப்பையன் என்ற அணுகுண்டை வீசியது

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது.
வெற்றி பெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் ‘பேர்ல்’ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது.
ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன.
நேச நாடுகள் முதலில் ஜப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன.
பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி ஜெர்மனி 1945, மே 8-ம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது.
அதே நாளில் சரண் ஆவணம் கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது.
பின்னர், 1945, ஜுலை 26-ம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய பிரிட்டனோடு இணைந்து, பாட்சுடம் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் ஜப்பானின் அரசு தோல்வியை ஏற்று, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடனடி, முழு அழிவுக்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது.
அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் உடனடி, முழு அழிவு என்னும் சொற்கள் ஜப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று.
இந்த எச்சரிக்கையை ஜப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை.
மான்ஹாட்டன் செயல்திட்டம் என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் ஜப்பானின் மீது வீசப்பட்டன.
சிறு பையன் (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகஸ்டு 6-ம் நாளும், குண்டு மனிதன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 9-ம் நாளும் வீசப்பட்டன.
நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன.
இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும்.
இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2- 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மக்களும், நாகசாக்கியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள்.
இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உஷைன் போல்டையே பின்னுக்கு தள்ளிய வீரன்

உலகில் வேகமானது எது என்று கேட்டால் பச்சிளம் பிஞ்சு கூட சொல்லிவிடும் அது உஷைன் போல்ட் தான் என்று அத்தகைய வேகமான குறுந்தூர ஓட்டக்காரனையே நேற்றைய தினம் ஒரு அமெரிக்க வீரர் முந்தியுள்ளார்
அவரின் வேகத்தை போல்ட் மைதானத்தில் வைத்து பாராட்டியதும்
போல்டுக்கு மரியாதை செலுத்துவதும் இந்த வீடியோவில் காணலாம்
(படத்தை கிளிக் பண்ணவும்)

தண்ணீரை மின்னல் தாக்கினால்…….? வீடியோ பாருங்க

தண்ணீரை மின்னல் தாக்கினால், என்னவாகும் என தெரியுமா. இதோ இந்த வீடியோவை பாருங்கள்…

ஐபோன் 8: கசிந்த புது தகவல்!!

அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான ஐபோன் 8 இனை அறிமுகம் செய்யவுள்ளது.
மூன்று பதிப்புக்களாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கைப்பேசி தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதாவது செல்ஃபி அல்லது வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் 4K தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும், செக்கனுக்கு 60 பிரேம்கள் உடையதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது செக்கனுக்கு 30 பிரேம்கள் எனும் வேகத்திலேயே ஐபோன் கமெராக்கள் வீடியோக்களை பதிவு செய்கின்றன.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் Apple A11 Processor ஆனது இதற்கான வினைத்திறனை வழங்கும் என தெரியவருகிறது.