Monday, September 18, 2017

வேதன மோசடிகள்: தொடரும் மின்சாரசபை போராட்டம்!!

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த மின்சார சபை போராட்டம் தொடர்கிறது.
இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
இதேவேளை மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லையென மின்வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார பணியாளர்களின் 2 நாள் போராட்டம் வேதனத்துடனான விடுமுறையான கருதப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை உணவுக்காக பாண் வாங்கியவருக்கு கிடைத்த அதிர்ச்சி!!

பாண் வாங்கிய நபருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
வவுனியாவில் காலை உணவுக்காக நபர் ஒருவர் பாண் வாங்கி அதனை வெட்டிய போது பாணிற்குள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது.
வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று சாப்பாட்டுக்காக வாங்கிய பாண் ஒன்றிலேயே உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் நடத்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது