சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதன் பேரில் விகாராதிபதி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சாந்தினி மீகொட முன்னிலையில் நேற்று (21) ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விகாராதிபதி சமய வகுப்பிற்குச் சென்ற சிறுமியை அங்கிருந்த அரச மரமொன்றின் பின்னால் மறைவான இடத்துக்கு ஏமாற்றி கூட்டிச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திக ஸ்ரீகாந்தவின் கவனத்திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.