Saturday, October 7, 2017

2 பேரை மட்டுமே கொண்ட வவுனியா பாடசாலை: அதிலொரு மாணவனின் சாதனை..பாராட்டலாமே!!

 வவுனியா நெடுங்கேணி பட்டடை பிரிந்த குளம் அ.த.க ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் அடையாளப்படுத்தியுள்ளார்.
ஏனெனில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுங்கேணி பட்டடை பிரிந்த குளம் அ.த.க ஆரம்ப பாடசாலையில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 2 என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் கெங்காதரன்.கென்றிக்சன் என்ற மாணவன் இந்த ஆண்டு நடைபெற்ற புலமை பரீட்சையில் 160 புள்ளிகளைப்பெற்றுள்ளார்

 குறித்த மாணவன் சித்தியடைந்ததன் மூலம் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்த பாடசாலையை அனைவரும் திரும்பிப் பார்க்கும் நிலையை தோற்றுவித்துள்ளார்.
பின்தங்கிய கிராமத்தில் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த குறித்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.


மாணவனுக்கு கல்வி கற்பித்துக் கொடுத்த திரு.செந்தில்நாதன் ஆசிரியருக்கு நன்றிகளை பகிர்க கடமைப்பட்டுள்ளோம். மற்றும் அவரின் பணி மென்மேலும் வளர மனமார வாழ்த்துகின்றோம் என அப்பகுதி மக்கள் வாழ்த்துகின்றனர்.
உண்மையில் இந்த மாணவனின் சாதனையை உலகறியச் செய்வதில் "தமிழர் சங்கமம்" மகிழ்ச்சி கொள்கிறது.

முல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு!

மீன்பிடித் தொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மீனவர் நேற்றுமுன்தினம் இரவு மீன்பிடித்தொழிலுக்கு சென்றிருந்தபோது இன்று வரை அவர் கரைதிரும்பவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து குறித்த மீனவரை தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் குறித்த மீனவர் சென்ற படகானது கொக்குளாய் கிழக்கு பகுதி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில், குறித்த மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட நீதிபதி உடலத்தை பார்வையிட்டதோடு தற்போது உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.