பிரபாகரன் பிடிபடவில்லை இராணுவத் தளபதி புதுத் தகவல். சிங்கள இராணுவத் தளபதியின் புதுத் தகவல்..! இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது.
150 உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன். ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என பலரும் கூறினார்கள். மிக அருகில் சென்று ஆராய்ந்ததில் முகத்தோற்றம், உடல்வாகு என்பன பிரபாகரன் போன்றிருந்தாலும் அது அவரது உடல் இல்லை என உணர்ந்து கொண்டேன். எங்களுடன் இருந்த சில புலிகள் இயக்க உறுப்பினர்களை அழைத்துவந்து அந்த உடல் யாருடையது என கண்டறியுமாறு அறிவுறுத்தினேன். அவர்கள் உடனடியாகவே அது ”பிரபாகரன் இல்லை என கூறினார்கள்” அதன்பின் வரிசையில் அடுக்கப்பட்டுள்ள ஏனைய உடல்களையும் அடையாளம் காணுமாறு அவர்களை கூறினேன்.அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன். வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள். புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர். அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு கொண்டேன்.
அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன். வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள். புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர். அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு கொண்டேன்.
”சார், எமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது எமது கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது” என உடனடியாகவே அவருக்கு. சில நொடிகள் அமைதியாக இருந்த அவர் “ #பிரபாகரன்_எங்கே?” எனக்கேட்டார்.” சேர், பிரபாகர்ன், பொட்டு அம்மான்,சூசை ஆகியோரை தவிர ஏனைய மூத்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களின் உடல்கள் இங்கே என்னிடம் இருக்கின்றது” என பதிலளித்தேன். ”பிரபாகரன்_இறக்கவில்லை என்றால் #போரும்_முடிந்து_விடவில்லை” என இராணுவத்தளபதி எனக்கு திருப்பிக்கூறினார். அவர் சரியாகத்தான் கூறுகின்றார் என நானும் ஏற்றுக்கொண்டேன்.
புலனாய்வு அமைப்புக்கள் உட்பட யாருக்குமே பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என தெரிந்திருக்கவில்லை. அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கலாம். அல்லது எங்கோ இன்னும் பதுங்கி இருக்கின்றார். எப்படியென்றாலும் பிரபாகரன் மரணமடையாமல் எமக்கு அமைதி ஏற்படபோவதில்லை. “ சார் இந்த பகுதி முழுவதுமே எனது படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது இன்று இரவும் தொடர்ந்து தாக்குதலை நடாத்திவிட்டு நாளை காலையில் மற்றுமொரு தேடுதலை தொடர்கின்றோம். போர் இறுதியாக முடிவுக்கு வந்து விட்டதது என்கின்ற நினைப்பில் ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கிவிட்டனர்.
தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக்கொண்டிருந்தனர். மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள். ஒவ்வொரு அழைப்பும் ” பிரபாகரன் எங்கே?” என்கின்ற கேள்வியுடனேயே முடிந்தது. ” எங்களுக்கு தெரியவில்லை” என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது. பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரை செய்யக்கூடியதாக இருந்தது.
பிரபாகரன்_எங்கே?
எனினும் எனது உறக்கம் “#பிரபாகரன்_எங்கே?” என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது. பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும்.ஆனால் “பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும். இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக்கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப்போட்டுக்கொணடும் இருந்தன. இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப்போனேன்..!
தலைவர் நேற்றுத் தான் தென்னாபிரிக்காவில் இருந்து போன் பண்ணினார்
“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்ற மந்திர வார்த்தையை வைத்துத்தான் தொழிலை நடத்துகிறார்கள். தமிழ் மக்கள் அழிந்த அதே நாளில் கோடிஸ்வரர்களாகிய இவர்களை பற்றி தெரியுமா?
பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ, சரணடைந்தோ, அல்லது தப்பியோடியோ விட்ட துரதிஷ்டமான நிலையில்…
முள்ளி வாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சில தென்கிழக்காசிய நாடுகளிலும் சிலருக்கு அதிஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது.
2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி, இரவோடு இரவாக மில்லியனர்கள் ஆனவர்களும் உள்ளார்கள்.இப்படியொரு சந்தர்ப்பம் (விடுதலைப் புலிகளின் அழிவு) ஏற்படும் என 2009-ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஊகித்து, புலிகளின் சொத்துக்களையும் பணத்தையும் தமது கன்ட்ரேலுக்குள் கொண்டுவந்தவர்களும் உள்ளார்கள்.முள்ளி வாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சில தென்கிழக்காசிய நாடுகளிலும் சிலருக்கு அதிஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது.
அதற்காக ஏப்ரல் மாதத்தில் இருந்து தினமும் காலையில் எழும்போது, “முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?” என ஆவலுடன் செய்தி பார்த்தவர்களும் உள்ளார்கள்.மே மாத தொடக்கத்தில் பிரபாகரனும், வேறு சிலரும் தப்பித்துப் போக ஒரு திட்டம் போடப்பட்டு, அதற்கு சுமார் 1 மில்லியன் டாலர் தேவை என்ற நிலையில், புலிகளின் வெளிநாட்டுப் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து, 18-ம் தேதி அந்தப் பணத்துக்கு தாமே உரிமையாளர் ஆனவர்களும் உள்ளார்கள்.
அந்த நேரத்தில் அவர்களிடம், 1 மில்லியன் என்ன, அதைவிட பலமடங்கு தொகை இருந்தது! அது அவர்களது சொந்தப் பணமல்ல, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பணம்.எப்படியோ, அவர்களில் பலர் எதிர்பார்த்தது போல, வன்னியில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதியுடன் முடிந்தது. அதன் பின் வெளிநாடுகளில் தொடங்கியது, சிறப்பு யுத்தம் – பணத்துக்காக வெளிநாட்டுப் புலிகள் புரிந்த குருஷேத்திர யுத்தம்!
இதில் ஜெயித்தவர்கள் இருக்கிறார்கள். இருந்த பணத்தை இழந்தவர்கள் இருக்கிறார்கள். தப்பியோடியவர்கள், பிரிந்து போனவர்கள், புதிய கோஷ்டி தொடங்கியவர்கள் என்று தொடங்கி, மார்க்கெட் போன தென்னிந்திய நடிகைக்கு பிறந்தநாள் பரிசாக ப்ம்வ் கார் வாங்கிக் கொடுத்தவர்கூட இருக்கிறார்.மிகவும் சுவாரசியமான யுத்தம் அது. ஆளையாள் ஏமாற்றிய சாதுர்யம்…அதுவரை ஒன்றாக இருந்தவரையே வெளிநாட்டு உளவுத்துறையிடம் போட்டுக் கொடுத்து விட்டு, தாம் தப்பித்துக் கொண்ட கெட்டித்தனம்..
பணத்தை பறிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், டஜன் கணக்கில் கொடுக்கப்பட்ட துரோகிப் பட்டங்கள்…இறந்து போனவர்களில் இமெயில்களை ‘உடைத்த’ திறமை…நேற்று ஏமாற்றி அடித்த சொத்தை இன்று வந்தவர் அடித்துக்கொண்டு போன கில்லாடித்தனம்…
இன்று வெளிநாட்டில் உள்ள சிலருக்கு, விடுதலைப் புலிகளின் யுத்தம் தோல்வியில் முடியவில்லை… அமோக வெற்றி!
பணம் பிரிக்கும் பிரச்னையில் இவர்கள் பல பிரிவுகளாக இருந்தாலும், இன்றைய தேதிவரை இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, ‘பிரபாகரன்’ என்ற பெயரை நம்புவதுதான்!காரணம், அந்த ‘பெயர்’தான், இவர்களின் மில்லியன்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது!
“தலைவர் வரட்டும், ஒரு டாலர் குறையாமல் கணக்கு முடித்து விடுகிறேன்”
“அடுத்த யுத்தத்துக்கு தேவை என்பதால் பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தலைவர் நேற்றுதான் தென்னாபிரிக்காவில் இருந்து போன் பண்ணினார்”
மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் எல்லாம், சர்வ சாதாரணமாக சிலரது வாய்களில் இருந்து வெளியாகும்!
கேட்பவருக்கும் இது கப்சா என்று தெரியும். சொல்பவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் சீரியசாக சொல்வார்.ஆனால் என்ன செய்வது? இருவருமே, “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்ற மந்திர வார்த்தையை வைத்துத்தான் தொழிலை நடத்துகிறார்கள்.