Monday, August 21, 2017

நோயாளி போல வைத்­தி­ய­சா­லையில் தங்கி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!!

நோயாளி போல வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காகத் தங்கி ஏனைய நோயா­ளி­களின் பெறு­ம­தி­யான பொருட்­களைத் திருடிச் சென்ற நபரொருவரை சிலாபம் பொலிஸார் இன்று கைதுச்செய்துள்ளனர்.
குறித்த சந்­தேக நபர் சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒரு­வரின் பெறு­ம­தி­யான கைத்­தொ­லை­பே­சியைத் திரு­டி­யுள்ளார்.
பின்னர் அந்த கைத்­தொ­லை­பேசி புத்­தளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.
மாதம்பை பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே சுக­யீனம் கார­ண­மாக சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­துள்ளார். அவ­ரது கட்­டி­லுக்கு அரு­கி­லி­ருந்த மற்­றொரு நோயா­ளி­யுடன் இவர் நட்­பா­கி­யுள்ளார்.
மாதம்பை நோயாளி ஒரு நாள் மல­ச­ல­கூ­டத்­துக்குச் சென்­று­விட்டு வந்து பார்த்த போது கட்­டிலின் தலை­ய­ணைக்கு கீழ்   வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 30 ஆயிரம் ரூபா  பெறு­ம­தி­யான கைத்­தொ­லை­பேசி காணாமல் போயி­ருந்­த­தோடு பக்­கத்து கட்­டி­லி­லி­ருந்த நோயா­ளியும் காணாமல் போயி­ருந்­துள்­ள­தை­ய­டுத்து அவர் அது தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.
இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த சிலாபம் பொலி­ஸா­ருக்கு காணாமல் போன நோயாளி வைத்­தி­ய­சா­லையில் வழங்­கி­யி­ருந்த பெயர், முக­வரி போன்­ற­ன­வற்றை விசா­ரித்த போது அவை போலி­யா­னது என்றும், அவர் வைத்­தி­ய­சா­லை­களில் பொய்­யான நோய்­களைக் கூறி தங்­கி­யி­ருந்து நோயா­ளர்­களின் பெறு­ம­தி­யான பொருட்­களைத் திருடிச் செல்­பவர் என்றும் தெரி­ய­வந்­துள்­ளது.

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது.
வலைகளைத் திருடுதல் மற்றும் சேதப்படுத்துவதற்கு எதிராக காத்தான்குடி மீனவர்களால், காத்தான்குடி கடற்கரை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேற்றாத்தீவு மற்றும் களுதாவளை பிரதேசங்களைச் சேர்ந்த சில மீனவக் குழுவினரே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் திடீர் சுற்றிவளைப்பு: 27 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து வந்து யாழில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து தொழில்களில் ஈடுபட்டிருந்த 27 இந்தியர்களை குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்பய்பட்டவர்களில் ஒருவர் விஞ்ஞான பட்டம் பெற்றுக் கொண்ட பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் ஜோதிடம் பார்ப்பதனை தொழிலாக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

மண்ணில் புதைந்து கிடக்கும் 1000 வருடம் பழமையான கோவில்!!


 
மண்ணுக்குள் அரைவாசி புதைந்து கேட்பாரற்று இருக்கும் ஒரு அற்புத சிவன் கோவிலை பற்றி தெரிந்து கொள்வோம்.
வேலூர் மாவட்டம் கம்பராஜபுரம் என்னும் கிராமத்தில் இந்த சிவன் கோவில் உள்ளது.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியை ஆண்டு விக்ரம சோழன் என்னும் மன்னம் இந்த கோவிலிற்காக பலவற்றை தானமாக கொடுத்திருக்கிறார் என்று இந்தக் கோவிலுள்ள கல்வெட்டு குறிப்புக்கள் கூறுகின்றன.
பழங்காலத்தில் இது ‘கறுப்பு கோவில்’ என்றழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த கோவில் முழுவதும் கறுப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் பூஜை நடந்து கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படும் அதேவேளை இந்தக் கோயில் குறித்த கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை என்பதால் முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளாக போற்றப்பட்டு வந்த இந்த கோவிலில் திடீரென ஏன் பூஜைகள் நிறுத்தப்பட்டன? இந்த கோவில் எப்படி புதைந்தது?
இவ்வாறான பல கேள்விகளுக்கு விடைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
விடை கிடைக்கும் தருணத்தில் இது குறித்து பல மர்மங்கள் வெளியில் வரும். அதுவரை பொறுத்திருங்கள்.

ஆளில்லா ஜார்விஸ் தீவு கண்டுபிடிப்பு!

ஜார்விஸ் தீவு என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள தீவு என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த தீவு பவளப்பாறைகளால் ஆனது.
1821-ம் ஆண்டு ஓகஸ்ட் 21 ஆம் திகதி பிரிட்டிஷ் நாட்டின் எலிசா பிரான்சிஸ் கப்பலில் சென்ற ஐரோப்பியர்கள் இந்த தீவினைக் கண்டுபிடித்தனர்.
ஆளில்லா இந்த தீவு, குவானோ தீவுகள் சட்டப்படி தங்களுக்கே சொந்தம் என்று 1857 ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது.
பின் 1858ம் ஆண்டு பெப்ரவரி 27-ம் திகதி முறைப்படி அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

அரசை விமர்சிக்கும் அமைச்சர்கள் வெட்கம்கெட்டு பதவியில் நீடிக்கின்றனர்!

நல்லாட்சி அரசாங்கம் அண்ணாந்து பார்த்து, தன் முகத்தில்தானே துப்பிக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசின் அமைச்சர்களே அரசாங்கத்தையும் அதன் செயற்பாடுகளையும் பகிரங்கமாக விமர்ச்சிக்கின்றனர் எனவும், உலகில் எந்தவொரு அரசாங்கத்தையும் அதன் அமைச்சர்களே விமர்சித்த வரலாறு கிடையாது என்றும் கூறினார்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறு நடக்கின்றது. அந்தவகையில் இந்த அரசாங்கம் அண்ணாந்து பார்த்து தன் முகத்தில் தானே காறித்துப்பிக் கொள்கின்றது.
அரசாங்கத்தை மட்டுமன்றி சக அமைச்சர்களையும் விமர்சித்துக் கொண்டு வெட்கம் கெட்டுப்போய் தங்கள் பதவிகளில் தொடர்ந்திருக்கின்றார்கள் என்றும் மஹிந்த ராஜபக்‌ச விசனம் வெளியிட்டுள்ளார்.