கிளிநொச்சி முழங்காவில் இரணைமாதா நகர் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (சனிக்கிழமை) மாலை பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி கணவன் மனைவி இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 45 வயதான ஜெனிற்றா என்பவர் உயிரிழந்துள்ளார்.
48 அகவையுடைய கணவர் ரூபன் காயம் அடைந்து கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.