Saturday, September 23, 2017

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பது எப்படி?

வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செயற்பட்டுவந்த ஆவா குழுவின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் மது போதையில் வீதிகளில் மக்களுக்கு இடையூறு விளைவிப்போர் மற்றும் போதைவஸ்து பாவனையாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
தமிழ் பேசும் பொலிஸார் குறைவாக காணப்படுவதனால் பணிகளை தமிழ் மொழில் மேற்கொள்வதில் சிரமங்கள் நிலவுவதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தனர்.
மேலும் அனுமதியற்ற வகையில் வீதீ ஓரங்களில் இந்து, பௌத்த, கிறிஸ்த சமயங்களின் தெய்வங்களை அமைப்பதன் காரணமாக வீண் பிரச்சினைகள் சமூகங்களுக்கு இடையில் எழுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் றெஜினோல்ட் கூரே
தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வடக்கு வாழ் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள அனைத்து தரப்பினரும் இளைஞர் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முக்கிய நகரங்கள் மற்றும் பொதுமக்கள் செறிந்து காணப்படும் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்காண்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசித்துள்ளதாகவும். அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.
அனுமதியற்று வீதி ஓரங்கள் மற்றும் மரங்களின் கீழ் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வரும் சிலைகள் தொடர்பில் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சர் காமினி ஜெயவிக்கரம பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தடம் புரண்டது ரயில்






மாணவர்களைக் கொன்றழித்த விமானப்படை: உணர்வுப்பூர்வ அஞ்சலி

 நாகர்கோவில் பகுதியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு விமானப் படையினால் நடாத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்களுடைய அஞ்சலி நிகழ்வானது உணர்வுப் பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 22ஆம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலத்தில் மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது இலங்கையின் விமானப் படையினர் குண்டு வீச்சுத் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.
 இதன்போது அப் பாடசாலையில் கல்வி கற்ற 21 மாணவர்கள் இவ் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மாணவர்களினது 22ஆவது நினைவு தினமானது நேற்றைய தினம் நாகர் கோவில் மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
 இந் நிகழ்வில் பாடசாலையின் மத்தியில் இம் மாணவர்களின் நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மலர் அஞ்சலி செலுத்தியும் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து கொல்லப்பட்ட ஒவ்வொரு மாணவர்களினதும் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் இம் மாணவர்களின் நினைவாக கனன் கோம்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் வடமராச்சி கிழக்கு பிரதேச செயலகமும் இனைந்து கல்வி கற்க போதிய வசதியற்ற மாணவர்கள் 50 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் ஒவ்வொருக்கும் ஒரு வருடத்திற்கு 12ஆயிரம் ரூபாய் வீதம் 50 மாணவர்களுக்கும் ரூபாய் 6 இலட்சத்தை வழங்கியிருந்தார்கள்.
அத்துடன் கற்றல் உபகரணங்களும்வழங்கி வைக்கப்பட்டிருந்தன.