#தாமரை_கோபுரம்_இலங்கை
தாமரைக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக இது அமையும் என்று கணிக்கப்படுகின்றது.
#கோபுரத்தின்அமைப்பு
*இந்த கோபுரம் மொத்தமாக 7 மாடிகளைக் கொண்டது*மேலும் 350m உயரத்தையும் 30,600 m2 பரப்பளவையும் கொண்டுள்ளது.
*50 தொலைக்காட்சி சேவைகள், 35 FM வானொலி நிலையங்கள் மற்றும் 20 தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் ஆகியவற்றிற்கான கட்டமைப்பு, பல்வேறு சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது.
*இதில் லக்ஸரி ஹோட்டல்ஸ்,1000 பேர் அமரக்கூடிய அரங்கு, கன்பிரன்ஸ் ஹோல், எக்ஸிபிசன் ஹோல், சூப்பர் மார்கட்ஸ், சுவிம்மிங் பூல், பூங்கா போன்ற பல வசதிகளும் அடங்கியுள்ளது.
இக்கேபுரம் முடிவுற்றால் இலங்கையின் தொடர்பாடல் தொழில் நுட்பம் பன் மடங்காக உயரும் என நம்பப்படுகிறது.
நாட்டில் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் மிக விரைவாகவும் தெளிவாகவும் உங்களுக்கு தருவதற்காக தயாரிக்கப்பட்டது.
Tuesday, August 1, 2017
தாமரைப்பூ, செம்பரத்தம்பூ, மருதம்பட்டை... இதயம் காக்கும் தமிழ் மருத்துவ வழிமுறைகள்! #SaveHeart
இதயம் காக்க என்ன செய்யலாம்? - இன்று முக்கியமாக எழுந்திருக்கும் கேள்வி. `உலகில் இறப்பவர்கள் இருவரில் ஒருவர், இதய நோயால் இறக்கிறார்‘ என்கிறது ஒரு புள்ளிவிவரம். சரியான நேரத்துக்கு உணவு உண்ணாதது, உடற்பயிற்சி இல்லாதது, ஜங்க், ஃபாஸ்ட் என மாறிவரும் உணவுப்பழக்கம், புகை, மதுப்பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுவது இதய நோய். அதோடு, பிறவிக் கோளாறு காரணமாகவும் இதய நோய் ஒருவரை பாதிக்கலாம். நாம் ஒவ்வொருவருமே இதய நோய் விஷயத்தில் முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம். இன்றைக்கு இதயநோய்க்கான சிகிச்சைகள் ஆங்கில மருத்துவத்தில் வெகுவாக முன்னேற்றம்பெற்றுவிட்டன. அதே நேரத்தில், இதய நோய்க்கு ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவத்திலும் தீர்வுகள் உள்ளன. அது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்...
அதிகப்படியாக இதயம் துடிப்பது, வலியோடு மயக்கம் உண்டாவது, நெஞ்சு படபடப்பு, வலி, இதயம் நின்றுவிடுவது... போன்ற அச்சமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது ஆபத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலில் மருத்துவமனைக்குச் சென்று சேர சிறிது காலதாமதம் ஏற்படத்தான் செய்யும். இந்த இடைவெளியில் நோயாளியின் உயிரைக் காக்க சிறந்த வழிகளில் ஒன்று உண்டு. ஹோமியோபதி கடைகளில் கிடைக்கும் `பயோசால்ட்ஸ்’ எனும் மருந்துகளான காலி பாஸ், கல்காரி பாஸ், நெட்ரும் மூர் (Kali Phos 6x, Calcar Phos 6x, Natrum Mur 6x) ஆகிய மூன்று உப்புகளையும் ஒவ்வொன்றிலும் பத்து அல்லது இருபது கிராம் வாங்கி, கலந்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மருந்தை நாக்கில்வைத்துச் சப்பிச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதனால் இதய வலி, படபடப்பு குறையும். இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும். அப்படி மருந்தைச் சாப்பிட முடியாமல் மயக்கநிலையில் ஒருவர் இருந்தால், அவரின் உதட்டை இழுத்து உள்புறமுள்ள ஈறுகளில் இந்த மருந்தைவைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். ஈறுகள் மருந்தை உள் இழுத்துக்கொள்ளும். இதையடுத்து குணம் தெரிய ஆரம்பிக்கும். மயக்கத்தில் உள்ளவர்களுக்கு மருந்தைக் கரைத்து உள்ளுக்குக் கொடுக்கக் கூடாது. இப்படியான சில இக்கட்டான தருணங்களில், சில வழிமுறைகளின் மூலம் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளலாம். இந்தப் பொடியை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. இதய நோய்களுக்கு என்று மட்டுமல்ல... சிலர் திடீரெனெ மயக்கம் வந்து கீழே விழுந்துவிடுவார்கள். அந்த நேரத்தில், உடல் ஜில்லிட்டு நாடித்துடிப்பு குறைய ஆரம்பிக்கும். அப்போது இந்தப் பொடியை முதலுதவியாக ஈறுகளில் வைத்துத் தேய்த்தால், சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்துவிடும்.
இதயக் கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து செய்யவேண்டிய சில வழிமுறைகள்...
தினமும் காலை, மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு அரை மணி அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சூடான அரை டம்ளர் நீரில், ஒரு சிட்டிகை பயோ உப்புக்கலவை மருந்தைப் போட்டு கலக்கி, சப்பிச் சாப்பிட வேண்டும். இதயத் தொந்தரவுகள் குறையும் வரை இதைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
.
இதயம் காக்க சில சித்த வைத்திய முறைகள்...
தினமும் காலை, மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு அரை மணி அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சூடான அரை டம்ளர் நீரில், ஒரு சிட்டிகை பயோ உப்புக்கலவை மருந்தைப் போட்டு கலக்கி, சப்பிச் சாப்பிட வேண்டும். இதயத் தொந்தரவுகள் குறையும் வரை இதைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
.
இதயம் காக்க சில சித்த வைத்திய முறைகள்...
* நான்கு அல்லது ஐந்து செம்பரத்தம் பூக்களைத் தினமும் காலை வெறும் வயிற்றில் மென்று தின்று அரை மணி நேரத்துக்குப் பின்னர் உணவு சாப்பிடலாம்.
* தாமரைப்பூக்களை புதிதாகப் பறித்து, இதழ்களைத் தனியாக எடுத்து, நிழலில் உலரவைத்து, பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். கிடைக்காதவர்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் பூவை வாங்கி, சுமார் இரண்டு கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, அரை டம்ளராக வற்றும் அளவுக்கு கொதிக்கவைத்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
* மருதம்பட்டையை (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) 200 அல்லது 300 கிராம் வாங்கி வந்து சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவை மண்சட்டி அல்லது சில்வர் பாத்திரத்தில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்க வேண்டும். அது கால் டம்ளரானதும் வடிகட்டிக் குடிக்க வேண்டும். பிறகு, மாலையில் அதே வடிகட்டிய சட்டியில் உள்ள பட்டைகளில் மீண்டும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது பாதியாகச் சுண்டியதும் வடிகட்டிக் குடிக்கலாம். இப்படி அந்த ஐந்து கிராம் பட்டைகளை மூன்று அல்லது நான்கு நாள்களுக்குப் பயன்படுத்தலாம். பிறகு அவற்றிலிருந்து அதிக சிவந்த சாரம் இறங்காது. பிறகு அவற்றை நீக்கிவிட்டு, புதிதாக ஐந்து கிராம் பட்டைகளைப் போட்டு மேலே சொன்னபடி பயன்படுத்தலாம்.
மற்றொருமுறையும் உள்ளது. இந்த பட்டைகளை மிக்ஸியில் போட்டுப் பவுடராக்கி கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கால் பாகமாகக் காய்ச்சி வடிகட்டியும் காலை, மாலை குடித்துவரலாம். (ஆரம்பத்தில் இந்தப் பட்டை கஷாயத்தை இருபது மி.லி-யிலிருந்து உயர்த்திப் படிப்படியாக ஐம்பது மி.லி ஆக உயர்த்தலாம். ஏனென்றால் சிலருக்கு வயிற்றைப் புரட்டுவது போலத் தோன்றும், அதன்பிறகு சரியாகிவிடும்).
இந்த முறைகள் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்துபடபடப்பு, வலி போன்றவற்றுக்கு நல்லது. பேஸ்மேக்கர் (Pacemaker) கருவி வைக்கவேண்டிய அவசியம் வராது. இது ஓர் அனுபவ வைத்திய முறை. எல்லோரும் செய்து பார்த்துப் பயனடையலாம்.
மேற்கூறிய மூன்று முறைகளையும் வாரத்துக்கு ஒன்றாக மாற்றி மாற்றிச் செய்துவந்தால், இதய நோயை வெல்லலாம். இத்துடன் மற்றொரு பழக்கத்தையும் பின்பற்றுவது நல்லது. அது, தினமும் சாப்பிட்டதும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்வது. இது, இதயத்தின்ரத்த அழுத்தம் மற்றும் ஓட்டத்தைச் சரிசெய்யும். ஆனாலும், அடிப்படையான உணவுக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். மீறினால் எந்த மருந்து உட்கொண்டாலும் பலனடைவது கடினம். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகள் வியாதிகளை விலைக்கு வாங்குவதற்குச் சமம் என்பதை நினைவில்கொள்வோம்.
யாழ்.ஊடகவியலாளர்கள் மூவர் துபாயில் பண மோசடி!
யாழ்.ஊடகவியலாளர்கள் மூவர் துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும், அவர்கள் அந்த நிறுவனத்தின் 11, 98000 துபாய் டினாரை மோசடி செய்ததாக செய்தி வெளியிட்டு உள்ளது.
அந்த செய்தி தொடர்பில் குறித்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளது.
குறித்த இணையத்தளம் தொடர்பில் யாழ்ப்பாணம் வருகை தந்த பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு யாழ். ஊடகவியலாளர்கள் கொண்டு சென்றனர்.
தான் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்மா அதிபர் உறுதி அளித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணம் சென்றவருக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணம் – கண்டி ஏ 9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்கையிலேயே மேற்படி கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த வாகன சாரதி விபத்து இடம்பெற்று 30 நிமிடங்களுக்கு மேல் வாகனத்திற்குள்ளேயே இறுகியிருந்த நிலையில் அயலவர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே வெளியே எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் வாகன சாரதியின் தூக்கமின்மையே விபத்திற்கு காரணமென தெரியவந்துள்ளது.
புகையிரத என்ஜின் ஓட்டுநர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தம்
புகையிரத என்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 5 பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
சீன என்ஜின் பொருத்தப்பட்ட புகையிரதங்கள் மற்றும் எஸ்.10 என்ற இலக்கத்துக்குரிய என்ஜின் பொருத்தப்பட்ட புகை யிரதங்கள் உள்ளடங்கலாக சகல புகையிரதங்களையும் செலுத்தும் சேவைகளிலிருந்தும் விலகி நிற்பதாக மேற்படி சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
மேற்படி சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வழமையான ரயில் போக்குவரத்து சுற்றுக்கள் 120 க்கும் அதிகமாக இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத திணைக்களத்திற்கு புதியவர்களை இணைத்துக்கொள்வதில் உள்ள சிக்கல்களை களைதல், போலியான காரணங்களின் பேரில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள புகையிரத சேவையாளர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட 5 காரணங்களை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ரயில் என்ஜின் ஓட் டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது புதியவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளை நிறுத்துவதாக கூறியிருந்தாலும் இன்று வரையில் அந்தச் செயற்பாடு நிறுத்தப் படவில்லை என்றும் அச்சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
தமிழ்,சிங்கள பொலிசார் மீதான வாள்வெட்டு: சற்று முன் ஒருவர் கைது?
கோப்பாய் பொலிசார் மீதான வாள்வெட்டின் முக்கிய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த இரு பொலிஸார் மீது ஆவாகுழுவினைச் சேர்ந்த 10 ற்கும் மேற்பட்ட நபர்கள் வாள்வெட்டினை மேற்கொண்டிருந்தனர்.
வாள்வெட்டிற்கு இலக்காகிய இரு பொலிஸாரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் யாழில் தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர்.
இந்நிலையில், ஆவா குழுவின் முக்கிய நபர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆவா குழுவின் பிரதான நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் வெள்ளம்: இறந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு!
குஜராத் மாநிலத்தில், இதுவரை இல்லாத அளவுக்குப் பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில், இறந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்துவருகிறது. இதனால், அந்த மாநிலத்தின் பனாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அகமதாபாத், பதான், பனாஸ்கந்தா ஆகிய இடங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குஜராத் மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்துவருகிறது. இந்த நிலையில், குஜராத் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 218 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்த மாவட்டத்தில் மட்டும் 61 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், 4.5 லட்சம் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலமும், படகுகள் மூலமும் மீட்கப்பட்டுவருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களை, மீட்புப் படையினர் உயிரோடு மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கும் நிலவேம்புக் கஷாயம் ! 'டெங்கு' வை கட்டுப்படுத்த தீவிரம்
போலீஸாருக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது போல அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலவேம்புக் கஷாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு காய்ச்சலை, 'டெங்கு' காய்ச்சல்தான் என்று ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்கு தமிழக சுகாதாரத்துறை வந்துள்ளது. 'சுகாதாரத்துறை தமிழகத்தில் சீரழிந்துகிடக்கிறது' என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் சுட்டிக்காட்டும் போதெல்லாம், "வீண் வதந்தி பரப்ப வேண்டாம், அவதூறு வழக்குப் பாயும்" என்று எச்சரிப்பதை மட்டுமே ஆட்சியாளர்கள் கடைபிடித்தனர். அண்டை மாநிலமான கேரளாவில்'டெங்கு' பாதிப்பால் மக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அங்கே இயல்பு நிலை திரும்பவில்லை. மக்களுக்கு வந்திருப்பது 'டெங்கு' காய்ச்சல்தான் என்பதை ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்ட கேரள அரசு, அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைகளை வேகமாகவே தொடங்கிவிட்டது.தமிழகத்தில் 'டெங்கு' காய்ச்சல் இல்லை என்று திரும்பத் திரும்ப அரசு சொல்லி வந்த வேளையில், சென்னையில் 4 போலீஸாரும், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் 'டெங்கு' காய்ச்சலுக்கான சிகிச்சைபெற்றுவருகிறார்கள். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பிரிவில் மட்டுமே ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஏற்படத் தொடங்கியுள்ளது.
யாழ். குடாநாட்டில் மணல் விநியோகத்தில் சிக்கல் நிலை!
வடக்கில் மணல் விநியோகத்துடன் தொடர்புடைய திணைக்களங்களின் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் வட மாகாணத்தில் இல்லாதமையே பாரிய பிரச்சனையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மணல் விநியோகத்தில் உள்ள தடங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கின் 5 மாவட்டத்திலும் இடம்பெறும் கட்டுமானப் பணிகளில் அதற்கான மணலைப் பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை எதிர் கொள்வதால் அதனைப் போக்குவது தொடர்பில் முதலில் யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் ஓர் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தற்போது யாழ். குடாநாட்டில் நிலவும் மணல் விநியோகத்தில் உள்ள தட்டுப்பாட்டினைப் போக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு குறித்த மணல் விநியோகத்தை சீராக மேற்கொள்வது தொடர்பாகவும் சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் கொள்ளையை கட்டுப்படுத்துவது தொடர்பிலுமே கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சருடன் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஆகியோரும் இணைந்து குறித்த விடயம் தொடர்பில் விசேடமாக ஆராயந்தனர்.
மேலதி அரசாங்க அதிபர் காணி, பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிசாருடன், கனியவளத் திணைக்கள அதிகாரிகள், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் என்று பலர் கலந்து கொண்டனர்.
வடக்கில் உள்ள வளங்களை வடக்கில் பயன்படுத்துவதற்கு தெற்கில் உள்ள திணைக்களங்களில் அனுமதி பெறுவதில் பல நெருக்கடிகள் எதிர்கொள்ளப்படுகின்றது.
இதனால் இத் திணைக்களங்கள் தமது அலுவலகங்களை வடக்கில் நிறுவ வேண்டும். அல்லது அதற்கு முழுப் பொறுப்பு வாய்ந்த அதிகாரி வடக்கில் இருக்க வேண்டும்.
குறிப்பாக கனியவளத் திணைக்களம், புவிச்சரிதவியல் திணைக்களங்களின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அநுராதபுரத்தில் உள்ளனர்.
இதனால் இவர்கள் அந்த மாகாண அதிகாரிகளின் சொல்லின் கீழ் இயங்குகும் நிலமையே கானப்படுவதோடு இவர்களிற்கு இப்பிரதேச நிலமையும் முழுமையாக தெரிவதில்லை.
வடக்கில் மணல் தட்டுப்பாட்டினை வைத்து பலரும் பல விலைகளில் விற்பனை செய்து அநாவசிய பிரச்சணைகள் எழுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வித்தியா வழக்கு: ஸ்ரீகஜன் விரைவில் கைது?
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
யாழ்.பொலிஸ் தலைமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்டுள்ளதுடன், அவருடன் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனும் தொடா்புபட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருவதுடன், பொலிஸ் சேவையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது” என என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த தண்டனை நம்நாட்டுக்கு வரவேண்டுமா?
3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற அரக்கனின் உயிரை எடுத்த அரசு!
ஏமன் நாட்டில் 3 வயது சிறுமியை 41 வயதான நபர் ஒருவர் மிகவும் கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்த பலாத்கார வழக்கில் அந்த நபர் குற்றவாளிதான் என நிரூபிக்கப்பட்டு அவருக்கு அதிரடி தண்டனை வழங்கியுள்ளது அரசு.
3 வயது குழந்தையை பலாத்காரம் கொன்ற 41 வயதான முகமது அல் மகரப் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் முக்கிய சாலை ஒன்றில் வைத்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் படுக்க வைத்து பொலிசாரால் ஏகே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சுற்றி நின்ற அனைவரும் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
மேலும் அந்நாட்டு ஊடகங்களிலும் இது ஒளிபரப்பப்பட்டது
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் ஓவியா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஓவியா.
ஆனால் ஜூலி மற்றும் சிலரின் நடவடிக்கைகள் ஏற்கனவே ஓவியாவிற்கு பல நெருக்கடிகள் வந்தது அறிந்ததே.
இந்நிலையில் உடல் நிலை சரியில்லை எனக் கூறி, தன்னை வெளியேற்றும் படி ஓவியா தொடர்ந்து கூறிவருவதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் வெளியேறினால் அந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம் என ஏராளமான ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
எனவே, அவருக்கு பதிலாகவே பிந்து மாதவியை கொண்டு வந்துள்ளார்கள் எனவும் சிலர் கூறுகின்றனர்.
ஓவியா வெளியேறுவாரா? மாட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்
Subscribe to:
Posts (Atom)