Monday, September 4, 2017

சரண குணவர்தன கைது

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவால் அவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட 80 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கெப் ரக வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்தார்.
இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் விபத்து: முச்சக்கரவண்டியில் கீழ் புகுந்த மோட்டார் சைக்கிள்!

 யாழ். ஆணைப்பந்தியில் காரும் மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்குள்ளானதில் கரையோரம் நின்ற முச்சக்கரவண்டியில் கீழ் மோட்டார் சைக்கிள் புகுந்துள்ளது.
இந்த விபத்தானது இன்று (திங்கட்கிழமை) காலை 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
 இதேவேளை காருடன் மோட்டார் சைக்கிள் மோதி கரையோரம் நின்ற முச்சக்கரவண்டியின் கீழ் புகுந்துள்ளது.
குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவ்வித உயிர்ச் சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் ஜப்பானில் இருந்து கலிபோர்னியாவுக்கு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பானது!

ஜப்பானில் இருந்து முதன்முறையாக கலிபோர்னியாவுக்கு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.
1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாடு, டெலிவிசன் கான்பிரன்ஸ் மூலம் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒளிபரப்பப்பட்டது.