நாட்டில் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் மிக விரைவாகவும் தெளிவாகவும் உங்களுக்கு தருவதற்காக தயாரிக்கப்பட்டது.
Sunday, March 22, 2020
மனிதனுக்கு கிடைத்த ஏமாற்றம்
அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள் ...
சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது ...
மழை அதன் போக்கில் பெய்கின்றது ... வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை ...
மான்கள் துள்ளுகின்றன ...
அருவிகள் வீழ்கின்றன ...
யானைகள் உலாவுகின்றன ...
முயல்கள் விளையாடுகின்றது ...
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன ...
தவளை கூட துள்ளி ஆடுகின்றது ... பல்லிக்கும் பயமில்லை ...
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன ...
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை ...
மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ...
சக மனிதனையும் அதனால் நேசிக்கத் தயங்குகின்றது ...
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது ...
முடங்கியது உலகமல்ல ...
மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம் ...
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் ... அவன் மட்டும் ஆடினான் ... அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான் ...
மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை ...
உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ
உலக நியதி என்றான் ...
உலகம் பிறந்ததும்,
உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான் ...
ஆடினான் ...
ஆடினான் ...
அவனால் முடிந்த மட்டும் ஆடினான் ...
ஓடினான் ...
பறந்தான் ...
உயர்ந்தான் ...
முடிந்த மட்டும் சுற்றினான் ...
கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது
அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான் ...
ஒரு கிருமி ...
கண்ணுக்கு தெரியாத
ஒரே ஒரு கிருமி ...
சொல்லி கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ... கண்ணில் தெரிகின்றது பயம் ... நெஞ்சில் தெரிகின்றது கலக்கம் ...
அவன் வீட்டில் முடங்கி கிடக்க ... வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம் ...
கொஞ்சி கேட்கின்றது சிட்டு ...
கரைக்கு வந்து சிரிக்கின்றது மீன் ...
தெருவோர நாய் பயமின்றி நடக்க ... வீட்டில் ஏழு பூட்டோடு முடங்கி கிடக்கின்றான் மனிதன் ...
தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல ...
மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில் ...
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு ...
அவமானத்திலும்
வேதனையிலும்
கர்வம் உடைந்து ...
கவிழ்ந்து கிடந்து ...
கண்ணீர் விட்டு ...
ஞானம் பெறுகின்றது
மானிட இனம் ... !
Thursday, January 16, 2020
யாழில் பெண் பொலிஸ் வீட்டில் மறைந்திருந்த திருடர்கள் கைது!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சந்தேக நபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தெல்லிப்பளையில் உள்ள தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அந்த வீடு இன்று (16) நண்பகல் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
வீட்டில் சந்தேக நபர்களை மறைத்து வைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கடமைக்குச் சமுகமளிக்கவில்லை. இதனால் அவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Monday, January 13, 2020
யாழில், பொலிசாருக்கு பயந்து தனக்குத்தானே தீ மூட்டியபடி ரெயின் முன் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட 32 வயது குடும்பஸ்த்தர் – யாழில் பகீர் இடம்பெற்ற பகீர்
பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் இன்று (13) காலை கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்திரம் இராஜசீலன் (32) என்ற குடும்பஸ்தர் இன்று காலை 7.00 மணியளவில் கொடிகாமம் பகுதியில் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
பருத்தித்துறையில் நேற்று முன்தினம் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் தேடியிருக்கின்றனர். அங்குள்ள அழகு நிலையமொன்றிற்கு தீ வைப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை புகையிரதத்தின் முன்பாக பாய்ந்த அவர் தற்கொலை செய்திருக்கின்றார். அவர் புகையிரதத்துடன் மோதுவதற்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Wednesday, January 8, 2020
விடைத்தாள் மதிப்பீடு: 27 பாடசாலைகள் முழுமையாகவும் பகுதியளவிலும் மூடப்படவுள்ளன
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மதிப்பீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக 27 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பாடசாலைகள் இந்த காலப்பகுதியில் முழுமையாக மூடப்படவுள்ளன.
மாத்தறை – மஹாமாயா மகளிர் பாடசாலை, கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி மற்றும் குருணாகல் – மல்லவபிட்டிய C.W.W. கன்னங்கர பாடசாலை ஆகியன முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளன.
இது தொடர்பிலான ஆலோசனைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 9000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள பிரதான மதிப்பீட்டாளர்களுக்கு பயிற்சி வழங்கும் அமர்வு எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெறவுள்ள இந்த பயிற்சி அமர்வில் பிரதான மதிப்பீட்டாளர்கள் 600 பேர் பங்கேற்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு
யாழ் கொக்குவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகேஸ்வரன்_கஜேந்தினி(20) கொக்குவில் கிழக்கு கொக்குவில். எனும் முகவரியில் வசித்துவரும் மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்குவில்இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவியே தூக்கில் தொங்கி மரணமாகியுள்ளார்.தந்தை இல்லாத நிலையில் தாயாரும் சகோதரி ஒருவரும் சகோதரன் ஒருவருடன் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் வவுனியாவில் உறவினர் ஒருவருடைய மரண நிகழ்விற்காக தாயாரும் சகோதரர்களும் சென்றுள்ளார்கள்.
இந்நிலையில் அம்மம்மாவின் பாதுகாப்பில் இருந்துள்ளார். இன்றைய தினம் மதியம் ஒரு மணியளவிவில் தொலைபேசியில் அழுதபடி உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டில் குறித்த யுவதி இல்லாத நிலையில் அயல் வீடுகளில் விசாரித்துவிட்டு வந்து மலசலகூடத்தை பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
காதல் விவகாரமே இந்த தற்கொலைக்கு காரணம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
தந்தை செல்வாவின் வழியில் இலட்சியப் பயணம்…! சீ.வி.கே.சிவஞானம்
13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறிய கருத்து தொடா்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும். என நாங்கள் திடமாக நம்புகிறோம் என சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா்.
சமகால அரசியல் நிலமைகள் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமரை டில்லியில் சந்தித்தபோது 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்துமாறு கோரியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது.
அதேவேளை இந்தியாவின் பிரபல்ய நாளிதழில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை வழங்க முடியாது என தெரிவித்ததாக செய்திகளும் வெளியாகியிருந்தது.
13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசியல் அமைப்பிலுள்ள ஒரு அம்சம் என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுதான் அவர் இந்தக் கருத்தைக் கூறியிருக்கின்றார். நான் இதைப்பற்றி பெரிய அளவில் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
இத்தகைய கூற்றுக்கள் கடந்த காலங்களிலும் பேசப்பட்டுதான் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பேசும்போது நாங்கள் பின்நோக்கிக் செல்கின்றோமா என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.
இந்தக் கருத்தைப் பற்றி அதிகம் அலட்டத் தேவையில்லை குறிப்பாக 55 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் தான் என்ற சட்டம் பல்வேறு போராட்டங்களில் கோரிக்கைகளுக்குப் பின்னர் சிங்களமும் தமிழும் இந்த நாட்டின் மொழிகள் என அங்கீகரிக்கப்பட்டது.
இதில் மாற்றம் ஏற்பட்டது ஜனாதிபதி கூறுவதை தற்போதுள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றலாம் ஆனால் கோத்தாபயவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் நாங்கள் அச்சமடையவே ஏமாற்றம் அடையவே தேவையில்லை.
நாங்கள் தந்தை செல்வாவின் வழியில் இன்றுவரை எமது இலட்சியத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.
ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் குப்பையில் தூக்கிப் போடவேண்டும் என இப்போதுள்ளவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் அவ்வாறுதான் கூறுவார்கள்
ஆனால் உலகத்தில் தரம் வாய்ந்த நிறுவனத்தைப் பற்றிக் கதைப்பதில் கவனம் வேண்டும் அதனைக் குப்பைத்தொட்டியில் போடுவதற்கு இவர்கள் உருவாக்கினார்களா நாங்கள் இத்தகைய கதைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
13 ஆவது திருத்தச்சட்டம் தான் எங்களுடைய அரசியல் தீர்வாக எந்தக் காலத்திலும் நாங்கள் கூறியதில்லை.
இது எல்லாக்கட்சிகளுக்கும் பொருந்தும் 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லை என்றால் கூட பரவாயில்லை ஒரு சில விடயங்களை வெளிப்படையாகப் பேசமுடியாத சூழலும் உள்ளது.
இந்தியா எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கின்றது பிரதிபலிப்பைக் காட்டும் என்பதை நாங்கள் ஊகிக்கமுடியாது. ஆனாலும் இந்தியா குறித்த கருத்து தொடர்பில் பிரதிபலிக்கவேண்டிய தேவையுள்ளது. அது நிச்சயமாக நடக்கும் என்பதை எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் அது தொடர்பில் பேசி முரண்பாட்டு நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தியா தன்னுடைய இராஜதந்திர வழியில் தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது.
மேலும் ஊடகவியலாளர்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள கைதுகள் இனவாதக் கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோது ? ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வழமையாக நடக்கின்ற செயற்பாடு இதுதான் ஒரு சில கட்டமைப்புக்களைப் புரிந்துகொள்ளாதவர்கள் பலவித கருத்துக்களைக் கூறுவார்கள்
பிரதமராக இருக்கின்ற மஹிந்தராஜபச்ஷ மௌனமாகவே இருக்கின்றார் ஒரு சில கருத்துக்களைக் கூறுகிறார்.அதேபோல் தான் ஜனாதிபதி கோத்தாவும் ஒரு சில கருத்துக்களைக் கூறுகின்றார். இடையில் இருக்கின்ற சில்லறைகள் தான் பலவித கருத்துக்களைக் கூறுகின்றார்கள்.
எனவே நாங்கள் பல விடையங்களையும் அவதானிக்கின்ற நிலையில், தான் இருக்கவேண்டும் அவசரப்பட்டு எதிர்க்கருத்துக்களைக்கூறி அதுவே தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு மதவாதிகளுக்கு தீனிபோட்டு இரையாகக்கூடாது ஜனாதிபதித்தேர்தலில் ஏற்பட்ட நிலைமைகள் அனைவருக்கும் புரியும்
எனவே அரச தரப்பிலுள்ளவர்களுடன் அரசியல் புரிந்துணர்வு வருகின்றவரை அமைதியாக இருப்பதே சிறந்தது என்றார்.
ஈரான் , ஈராக் வான் பரப்பை தவிர்க்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்தல்!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றத்தை அடுத்து சர்வதேச நாடுகளின் விமானங்கள் அனைத்தையும் ஈரான் , ஈராக் வான்பறப்பினுடாக பறப்பதை தவிர்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பல்வேறு ஆசிய விமானசேவை நிறுவனங்கள் தமது விமானப்போக்குவரத்தின் போது ஈரான் வான்பரப்பைத் தவிர்த்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு ஈராக்கின் அமெரிக்கத் தளங்கள் மீதான நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்தே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதேவேளை தாய்வானின் சீனா எயார்லைன்ஸ் நிறுவனமும் தமது விமானங்கள் ஈராக், ஈரான் வான்பரப்பின் ஊடாகப் பயணிக்காது என சர்வதேச செய்திச்சேவைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சியில் அமெரிக்க ராணுவம், பதிலடியைத் தொடங்கியது ஈரான்!
ஈரான் மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம்வந்த காசிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த விவகாரம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுலைமானி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.
ஈரான் மக்களின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஈராக்கில் வைத்து கொலை செய்தது. காசிம் சுலைமானியின் இறப்புச் செய்தியை ஏற்க முடியாத ஈரான் மக்கள் அவரது உடலைப் பார்க்கக் குவிந்தனர்.
காசிம் சுலைமானி உடலின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ஈரான் மக்கள் பங்கேற்றிருந்தனர். பலர் கதறி அழுதனர். காசிம் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க நிச்சயம் உரியப் பதிலடியைப் பெறும் என அந்த கூட்டமே சூளுரைத்தது.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது என அஞ்சப்படுகிறது.
காசிம் படுகொலை சம்பவத்திற்குப் பிறகு, ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை வெளியேறச் சொல்லி ஈராக் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. எனினும் அமெரிக்கா ஆக்கிரமித்திருந்த ராணுவ தளவாடங்களை விட்டு இப்போதுவரை வெளியேறவில்லை எனக் கூறப்படுகிறது.
போர் பதற்றம்; ஈரான், ஈராக் நாடுகளுக்கு ’நோ’ - மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை!
அமெரிக்கப் படைகள் விரைவில் அங்கிருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த சூழலில், ஈரான் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ஈரான் நேரப்படி நள்ளிரவு 1: 30க்கு நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈராக் டிவி சேணல்கள் கூறுகையில், “நாட்டை விட்டு விரைவில் கிளம்பவில்லை என்றால், அமெரிக்கர்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்” எனக் கூறி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து இப்போதுவரை அமெரிக்க ராணுவ தலைமையான பெண்டகன் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்த தாக்குதலுக்கு முன் அமெரிக்கத் தரப்பு பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கும்போது, “ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கையும் செய்யப்பட்டுவிட்டது” எனக் கூறியிருந்தது.
போர் பதற்றம்; ஈரான், ஈராக் நாடுகளுக்கு ’நோ’ - மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை!
அமெரிக்கப் படைகள் விரைவில் அங்கிருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த சூழலில், ஈரான் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ஈரான் நேரப்படி நள்ளிரவு 1: 30க்கு நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈராக் டிவி சேணல்கள் கூறுகையில், “நாட்டை விட்டு விரைவில் கிளம்பவில்லை என்றால், அமெரிக்கர்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்” எனக் கூறி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து இப்போதுவரை அமெரிக்க ராணுவ தலைமையான பெண்டகன் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்த தாக்குதலுக்கு முன் அமெரிக்கத் தரப்பு பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கும்போது, “ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கையும் செய்யப்பட்டுவிட்டது” எனக் கூறியிருந்தது.
Subscribe to:
Posts (Atom)