Sunday, December 31, 2017

31-12-2017 இன்றைய ராசிபலன்கள்

31-12-2017 ஞாயிற்றுக்கிழமை ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 16-ம் நாள் வளர்பிறை. திரயோதசி திதி மதியம் மணி 1.09 வரை, பிறகு சதுர்த்தசி.
ரோகிணி நட்சத்திரம் மாலை மணி 4.13 வரை, பிறகு மிருகசீரிஷம். யோகம்: சித்தயோகம்
நல்ல நேரம் 7-10 11-12, 2-4, 6-7, 9-11
எமகண்டம் மதியம் மணி 12.00-1.30
இராகு காலம் மாலை மணி 4.30-6.00
குளிகை: 3:00 – 4:30
மேஷம்:
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.
நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
மிதுனம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கடகம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.
மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படு வார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
சிம்மம்
உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற் சாகம் பொங்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள்அறிமுகமாவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
கன்னி
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.
ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
துலாம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.
அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.
வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.
தனுசு
எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர் களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மகரம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.
கும்பம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உற வினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஓரளவு பண வரவு உண்டு.
ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
மீனம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள்.
தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்

Friday, December 29, 2017

வவுனியாவில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவனின் விருப்பம்!

சத்திர சிகிச்சை நிபுணராக வந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அம் மாணவன் மேலும் தெரிவிக்கையில்,
நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை. 97 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தேன்.
அது போன்று கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையிலும் 9 ஏ எடுக்கவில்லை.
7ஏ, பி தான் எடுத்தேன். ஆனாலும் அதை வைத்து தான் நான் இந்தளவுக்கு படித்தேன்.
நான் படிப்பதற்கு எனது ஆசிரியர்கள் எனக்கு நன்றாக உதவி செய்தார்கள். வீட்டிலும் நல்ல உதவி கிடைத்தது.
முயற்சி இருந்தால் எதையும் அடையலாம். முயற்சியால் தான் இந்த நிலையை அடைந்தேன் என தெரிவித்தார்.

Thursday, December 28, 2017

யாழ்/பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியைச் சேர்ந்த மாணவனின் சாதனை



யா/ஹாட்லிக்கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்

இன்று அதிகாலை 12.30 மணிக்கு வெளியாகிய க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளில் யாழ்/பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியைச்சேர்ந்த செல்வன் சிறிதர்சன் துவாரகன் என்பவர் கணிதப்பிரிவில் 3A பெறுபேற்றினைப்பெற்று மாகாண ரீதியில் முதல் இடத்தையும் இலங்கை ரீதியிலும் முதலாம் இடத்தையும் கைப்பற்றி கல்லூரிக்கும் பெற்றோருக்கும் நன்மதிப்பை பெற்றுத்தந்துள்ளார்
வெட்டுப்புள்ளி 2.7343

மேலும் அவர் ஆங்கிலத்துக்கு C மற்றும் பொது அறிவிற்கு 77 புள்ளிகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மென்மைலும் கல்வியிலும் மற்றய திறன்களிலும் பல சாதனைகளை பெற்று எமக்கும் எமது மக்களுக்கும் பெருமையை பெற்றுத்தர எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Monday, December 25, 2017

25-12-2017 இன்றைய ராசிபலன்கள்

25-12-2017 திங்கட்கிழமை ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 10-ம் நாள். வளர்பிறை சப்தமி திதி இரவு மணி 10.03 வரை,
பிறகு பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 9.13 வரை, பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம். யோகம்: மரண-சித்த யோகம்.
நல்ல நேரம் 6.30 – 7.30, 4.30 – 5.30
எமகண்டம் காலை மணி 10.30 – 12.00
இராகு காலம் காலை மணி 7.30 – 9.00
குளிகை: 1.30 – 4.00
மேஷம்:
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய கடன் பிரச்னை தீரும்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.
ரிஷபம்
செயலில் வேகத்தை காட்டுவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
கடகம்
மதியம் 2.35 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள்.
யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
சிம்மம்
மூத்த சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மதியம் 2.35 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமை மிகுந்த நாள்.
கன்னி
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
துலாம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். புது வேலை அமையும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத் தது நிறைவேறும் நாள்.
விருச்சிகம்
அரசு அதிகாரி களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
தனுசு
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கும்பம்
மதியம் 2.35 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மீனம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். மதியம் மணி 2.35 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Wednesday, December 20, 2017

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு (வீடியோ இணைப்பு)

 அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன
டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதாவின் சிகிச்சை காட்சிகளை வெளியிட்டார்
வெளியான வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துகிறார் மற்றும் தொலைக்காட்சி பார்க்கிறார்.
20 நொடிகள் வரை ஓடக்கூடிய வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்
நாளை ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது

Tuesday, December 19, 2017

சற்றுமுன்.. துப்பாக்கிகள் மற்றும் வாளுடன் கைது!!

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை துப்பாக்கிகள் மற்றும் வாளுடன் கைது செய்துள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து இரண்டு துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் ரவையறைகள் (மகஸின்) மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த ஆயுதங்கள் இன்று (19) மீட்கப்பட்டன.
இதேவேளை குறித்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அங்கு வசித்து வந்துள்ளார். எனினும் அவர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று காலை சென்றிருந்தனர்.
அப்போது அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டோம். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் காணப்பட்டன.
ஏகே47 துப்பாக்கி ஒன்று கைத்துப்பாக்கி ஒன்று, அவற்றிக்குப் பயன்படுத்தும் நான்கு மகஸின்கள் மற்றும் இரண்டு வாள்கள் என்பன மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.
அதனையடுத்து மேற்படி புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

Saturday, December 9, 2017

இந்தியாவில் நிலநடுக்கம்!!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் லே பகுதியின் அருகில் இன்று (சனிக்கிழமை) மாலை 4.13 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகாக பதிவானதாக புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Saturday, November 25, 2017

கொழும்பில் தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்ட ஆடையுடன் இளைஞர்கள் படையெடுப்பு 

 புதிய அரசயிலமைக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து உந்துருளிப் பேரணியொன்றினை ஆரம்பித்துள்ளது.
தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும் சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும் கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
 கொழும்பு மத்திய தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலையில் இளைஞர் படையணி மத வழிபாட்டை அடுத்து, இந்த பேரணையை ஆரம்பித்ததாக தெரியவருகிறது.
புதிய அரசயிலமைக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் பிவித்துரு ஹெல உறுமய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 17, 2017

திருடப்பட்ட 15 கைத்தொலைபேசிகளுடன் இருவர் கைதான சம்பவம் யாழ்.பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் பருத்தித்துறையில் தொலைபேசி கடை ஒன்றை உடைத்து பல பெறுமதியான கைத்தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பருத்தித்துறை பொலிசார் மற்றும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (16) களவாடப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றுடன் பருத்தித்துறையை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்னும் ஒருவர் பருத்துறையில் கைது செய்ய்பட்டார்.
இருவரிடமிருந்தும் களவாடப்பட்ட 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 கைத்தொலைபேசிகளை பொலிசார் மீட்டுள்ளனர்.
அத்துடன் இருவருமே பருத்தித்துறையை வதிவிடமாக கொண்ட 21, மற்றும் 23 வயதை உடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Wednesday, November 15, 2017

இராணுவத் தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!-

இராணுவ தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து, அப்போதைய நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டி வெலான கைது செய்து சென்ற நபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை மீட்டுத் தருமாறு கோரியும் அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாவற்குழி இராணுவ முகாம் தளபதி துமிந்த கெப்டி வெலாவன முதலாம் எதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இரண்டாம் எதிரியாக இராணுவ தளபதியும், மூன்றாம் எதிரியாக சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டு இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு தொடர்பான விசாரனையானது இன்று (15) யாழ் மேல் நீதிமன்றில் இடம்பெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகள் கொள்ளை !

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகள் கொள்ளை !கோப்புப்படம்
குறித்த நபர் 15 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (10.11.2017) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, சந்ததேகநபரை நேற்று, மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

தடம் புரண்டது ரயில்

ரயில் ஒன்று தடம்புரண்டதால், புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான புகையிரத பாதையில் குறித்த ரயில தடம் புரண்டுள்ளது.
நேற்று இரவு 08.45 அளவில் ரஜரட்ட ரெஜின என்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக, ரயில்வே தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இன்று (புதன்கிழமை) காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருந்த புகையிரத சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு – கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதங்களும் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Tuesday, November 14, 2017

மட்டக்களப்பில் வீதிக்கு வந்த தமிழ்க் குடும்பம்: நியாயம் கிடைக்குமா?

 மட்டக்களப்பில் தமிழ் குடும்பம் ஒன்று வீதிக்கு வந்த அவலச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
தாழங்குடா நான்காம் கட்டை சந்தியில் 35ஆண்டுகளுக்கு மேலிருந்த இரண்டிற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை தமது காணி என்று இஸ்லாமியர்கள் கூறி பொலிசாரின் உதவியுடன் வெளியேற்றியுள்ளதாக தெரியவருகிறது.
 செய்வதறியாது நின்ற தமிழ் குடும்பம் நடு வீதியில் அமர்ந்து நீதி கேட்கிறார்கள்

Friday, November 10, 2017

யாழ். ஹாட்லி மாணவனின் புதிய சாதனை!

 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.
ஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் 2 ஆம் நாளானா நேற்று இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.
இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும்.
புதனன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் (13.41 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இதேவேளை கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை 14 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Thursday, November 9, 2017

சைக்கிளில் நாடாளுமன்றம் வந்த மகிந்தவின் பரிவாரம்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றுக்கு துவிச்சக்கரவண்டியில் (சைக்கிளில்) வந்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட சமர்ப்பிப்புக்காக பாராளுமன்றம் கூடியது.
இதன்போதே எதிர்க்கட்சியினர் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் நிலவும் பெற்றோலியத் தட்டுப்பாட்டை வெளிப்படுத்துமுகமாக நேற்று முந்தினமும் இவர்கள் மாட்டு வண்டியில் நாடாளுமன்றம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 8, 2017

போராட்டம் நடத்த தயாராகும் பட்டதாரிகள்!

தேர்தலுக்கு முன்னராக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமெனக் கோரி பட்டதாரிகள் 15 ஆம் திகதி போராட்டம் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் நிர்வாக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ளது.
இதுவரை நியமனம் தொடர்பான சரியானதொரு தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
தேர்தலிற்கு முன் எமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் என எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்வதாக தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது.
எனவே வட மாகாணத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் வருகைதந்து தேர்தலிற்கு முன் எமக்கான அரச நியமனங்களை பெற வழிவகுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Thursday, November 2, 2017

இந்தியப் பெருங்கடலில் வலிமையான நிலநடுக்கம் ஏற்படப்போகிறது'- பிரதமருக்கு கேரள நிறுவனம் கடிதம்

ஆசிய நாடுகளின் கடல் எல்லைகளையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ’ இந்தியப் பெருங்கடலில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்படப் போகிறது. வலிமையான அந்த நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் கடல் எல்லைகளே மாறும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் வரை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

இதனால் கடலில் மணிக்கு 120 கி.மீ. முதல் 180 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று விசுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும். மேலும், சுனாமி அலைகளும் ஏற்படக் கூடும்' என்று அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இ.எஸ்.பி சக்தி மூலம் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  

Wednesday, November 1, 2017

என் சுதந்திரக்காற்றே...

கார்த்திகை என்றாலே விளக்கீடுதான் நினைவுக்கு வரும்(எந்த விளக்கீடு?)
கண்ணீரும் கதறலும் நிறைந்து வழியும்
கல்லறையெங்கும் நறுமணச்சோலையாகும்
ஒவ்வொரு கல்லறைக்கும் ஒவ்வொரு வரலாறு
ஒவ்வொரு கல்லறையும் ஒவ்வொரு காவியம்
பிள்ளைகள்,உறவுகள்,நண்பர்கள் இறந்தது வருத்தம் தந்தாலும் அந்த மரணங்கள் தரும் கர்வம்,பெருமை வார்த்தையிலடங்காது.
அன்னையின் கண்ணீரை துடைத்திடும் அண்ணனின் உரை இத்தனையும் இன்று எங்கே?
கல்லறைக்கும் பயந்துதான் இடித்து நொருக்கி மைதானமாக்கினார்கள்.
புலி என்பது ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதில் உள்ள வீரமே...
என்றுதான் சுதந்திரக்காற்றை சுவாசிப்போமோ என்ற ஏக்கத்துடன்
உங்களில் ஒருவன்...

Tuesday, October 31, 2017

வவுனியாவில் பொலிசார் குவிப்பு!!

 வவுனியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றக்கோரி இளைஞர்கள் சிலரால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த பகுதியில் பதற்றமான ஒரு நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு மக்களை பொருளாதாரத்தால் அடிக்கும் மைத்திரியின் நல்லாட்சியும் அதை எதிர்த்து கேட்காத தமிழ் அரசியல்வாதிகளும்..



யுத்தம் முனைப்புப் பெற்ற காலங்களிலிருந்து வட தமிழீழத்துக்கு எல்லாம் தடை, மின்சாரம் இல்லை, பெற்றோல் இல்லை, சீமெந்தில்லை, சவர்க்காரம் இல்லை, சீனியில்லை, பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களெல்லாம் வடபுல மக்களுக்கு தடை. அத்தோடு ஷெல் அடி, விமானத்தாக்குதலென எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்ற நிலையும்,
நிலக்கீழ் பதுங்குகுழியில் ஒரு ஜாம்போத்தலில் உப்புப் போட்டு அதற்குள் சொட்டு எண்ணை விட்டு அந்தத் திரியின் வெளிச்சத்தில் தான் அனைவரும் படித்தார்கள், இலங்கையில் வேறெந்த மக்களுக்குக்கும் ஒருதசாப்தத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக இப்படி ஒரு அடக்கு முறை நிகழந்ததில்லை, ஆயினும் எப்படி நெருக்கியும் எவராலும் அந்த மக்களை வீழ்த்த முடியவில்லை.
அதற்குக் காரணம் அவர்களது தன்னிறைவு வாழ்க்கை முறை.
பணப்பயிர் என்று சொல்லப்படும் புகையிலை,
இருபது அடியில் சுத்தமான கிணற்று நீர்
பனைவளம், அது சார்ந்த வருமானம்
நீண்ட கடற்கரை, அது நீள மீன்பாடு, அதன் வருமானம்.
வட புலத்தின் செறிந்த வளமுள்ள சிவந்த வலிகாம மண்ணில் பயிர்ச்செய்கை, இலங்கையின் மற்றைய நிலங்களின் ஒரு ஏக்கரில் விளைவதை, இந்தச் சிவந்த மண்ணில் ஒரு பரப்பில் விளைவிக்கலாம்.
இப்படி தமைச் சுற்றிக் கொட்டிக் கிடந்த வளங்களால் தமக்குள் தாமே விற்று வாங்கி பணப்புழக்கமும் தமக்குள்ளேயே நிகழ்ந்து
எப்படி நெருக்கிய போதும் அடித்த போதும் வடக்கு மக்கள் வீழாமல் வாழ்ந்தார்கள்.

அதையெல்லாம் மிக அவதானமாக ஆராய்ந்து கவனித்த எதிரி எதெல்லாவற்றாலும் உடைந்து விழாமல் மக்கள் இருந்தார்களோ அது எல்லாவற்றையும் மக்களிடமிருந்து பிடுங்கி விட்டான்,

யுத்தத்தின் பின் வடக்கில் மரக்கறிக் கடையையை விட வங்கிகள் தான் அதிகம், பல்வேறு கவர்ச்சிகர நுண்கடன் வசதிகளைக் காண்பித்து வடக்கில் சுழன்று கொண்டிருந்த அத்தனை பணமும் உறிஞ்சப்பட்டு தெற்கிற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.
வளமான செம்மண் நிலப்பரப்புகள் உயர் பாதுகாப்பு வலையமென்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டு விட்டது
நிலக்கீழ் நன்னீர் செத்துக் கொண்டிருக்கிறது
புகையிலைப் பயிர்செய்கைக்கு தடை
மீன்பாடு தடை
இப்போது பனையில் இருந்து கள் எடுப்பதும் தடை.

புலம்பெயர் தேசங்களில் இருந்து பணம் வருவது நிற்கப்போகும் இன்னும் சில ஆண்டுகளில் வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் தங்கி வாழ்வோராகப் போவார்கள். இனி ஒரு நெருக்கத்தை யுத்தத்தை எதிர் கொள்ள அவர்களால் முடியாது.

எமது எதிர்காலத்தை அழிக்கப்போகிற எப்படிப் பாரதூரமான ஆபத்தில் வடக்கு மக்கள் மாட்டப்பட்டிருக்கிறார்களென்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலையற்று வடபுலத்தின் அரசியற் தலைமைகள்.

Monday, October 30, 2017

யாழ் பல்கலையில் இன்றிலிருந்து கதவடைப்பு போராட்டம்!

அரசியற் கைதிகளின் போராட்டத்திற்கு உரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். குறித்த கைதிகளின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்வழி பல்கலைக்கழக மாணவர்களும் தமது போராட்டங்களினை நடத்திவந்த நிலையில் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர். குறித்த சந்திப்பிலும் சாதகமான நிலை எதுவும் எட்டப்படாத நிலையிலேயே ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகம் இந்த கதவடைப்பு போராட்டத்தினைத் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பல்கலைக்கழகத்தில் பருவகாலப் பரீட்சைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் பலவும் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்திற்கும் மத்தியிலேயே குறித்த கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 29, 2017

மன்னாரில் எண்ணெய் அகழ்வதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம்!!

மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
கெய்ன் இந்தியா நிறுவனம் முன்னர் எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட எம்2 துண்டில், எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு கேள்விப் பத்திரங்களைக் கோரியிருந்தது.
இங்கு எண்ணெய் அகழ்வில் ஈடுபட விருப்பம் தெரிவித்து, 11 நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக, பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் பிரீனி விதானகே தெரிவித்துள்ளார்.
2015இல் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, எம்2 துண்டில் எரிவாயு அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட கெய்ன் இந்தியா நிறுவனம், அதிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்: சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யாழ் அரியாலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி 17 லட்சம் ரூபாய் பணத்தை நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து, ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனால் குடும்பமே இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட யாழ் இளைஞர்கள்!

ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட 4 தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து நாடுகடத்தப்பட்ட குறித்த நால்வரையும் விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை நாடுகடத்தப்பட்ட நான்கு பேரும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Saturday, October 28, 2017

இளஞ்செழியனுக்கு தற்கொலை செய்த தாய் எழுதிய கடிதம்

 ‘நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டோம், மன்னித்து கொள்ளுங்கள்’ இளஞ்செழியனுக்கு தற்கொலை செய்த தாய் எழுதிய கடிதம்

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்த பெண்ணால் எழுதி வைக்கப்பட்ட கடிதமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தனது தாய் வீட்டாருக்கும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகியோருக்கு இவ்வாறு கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.
குறித்த கடிதத்தில் ஒரு கோடியே 17 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து தனது கணவன் ஏமார்ந்த நிலையில் தற்கொலை செய்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், தனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு தன்னால் பதில் கூற முடியாத நிலையிலேயே குடும்பத்துடன் தான் தற்கொலை செய்துள்ளதாக மிகவும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.
அத்துடன், தனதும் தனது பிள்ளைகளினதும் இறுதிக் கிரியைகளை தனது வீட்டார் நடத்த வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் தனது கணவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸாரிடம் குறித்த கடிதத்தைக் காட்டி எந்தப் பிரச்சினையும் இல்லாம் தனது இறுதிக் கிரியைகளை மிகவும் எளிமையான முறையில் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு எழுதி வைத்த கடிதத்தில், தனது கணவன் 1 கோடியே 17 இலட்சம் ரூபாவைக் கொடுத்து ஏமார்ந்ததனால் கடந்த 09 ஆம் மாதம் 03 ஆம் திகதி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவன் உயிரிழந்த காலத்தில் இருந்து தனது பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்றும், அப்பா எப்ப வருவார், அப்பா கண் திறந்து விட்டாரா, எப்ப பார்ப்பார், ஏன் வரவில்லை, போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளை தானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா, அப்பா வர நாங்கள் பார்க்குப் போவம் என்ற என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை.

தவறு செய்தவர்களை விட தவறு செய்யத் தூண்டுபவர்களே குற்றவாளி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி வீதியைச் சேர்ந்த சுநேத்திரா என்ற 28 வயதுடைய தாய், கர்சா என்ற 04 வயதுடைய மகள், சஜித் என்ற 2 வயதுடை மகன் மற்றும் சரவணா என்ற ஒரு வயதுடைய மகன் ஆகியோர்கள் இன்றைய தினம் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான கிருசாந்தன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடன் தொல்லை காரணத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்கும் உணவில் விஷத்தை கலந்து சாப்பிடக் கொடுத்த தாய், தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் நுண்கடன் தொல்லையால் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் இவ்வாறு கடன் வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக அமைப்புகள் கோரி வருகின்ற நிலையில், இன்றைய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


Thursday, October 26, 2017

உலகிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் பாஸ்போர்ட் : விசா இன்றி 159 நாடுகளுக்கு செல்லலாம்!!

உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளது.
இந்த பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இதன்படி விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 159 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
அதற்கு அடுத்த இடத்தில் 158 புள்ளிகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா 154 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், இந்திய பாஸ்போர்ட் 51 புள்ளிகளுடன் 75வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் நாடு உள்ளது. அந்த நாட்டின் குடிமக்களை விசா இன்றி 22 நாடுகள் மட்டுமே அனுமதிக்கின்றன.
அதற்கு முந்தைய இடத்தில் ஈராக் (26), பாகிஸ்தான்(26), சிரியா (29) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
159 – சிங்கப்பூர்
158 – ஜெர்மனி
157 – சுவீடன், தென்கொரியா.
156 – பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின்.நார்வே, ஜப்பான்
155 – லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஒஸ்திரியா, போர்சுக்கல்,
154 – மலேசியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா,
153 – கிரீஸ், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா
152 – மால்டா, ஐஸ்லாந்து, செக் குடியரசு,
150 – ஹங்கேரி.
149 – சுலோவேனியா, சுலோவாக்கியா, போலந்து, லுதுவேனியா, லாத்வியா.
இதுகுறித்து ஆர்டான் கேபிட்டல் நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலக நிர்வாகி பிலிப்பி மே கூறியதாவது;
முதல் முறையாக ஆசிய நாடு ஒன்று சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
இது அந்நாட்டின் தூதரக உறவுகள் மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு ஒரு சான்று என கூறியுள்ளார்.
இந்த பட்டியலில் அமெரிக்க மிகவும் பின்தங்கியுள்ளதற்கு காரணம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் விசா கெடுபிடி காட்டியது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.