மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து இந்த இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.
ஓகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தின் முதற்கட்ட பணி, ஜூலை 1942ல் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழுவில் தொடங்கியது.
அதன்பின்னர் ஓகஸ்ட் 8 ஆம் திகதி மும்பையில் இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை வலியுறுத்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதனை ஒடுக்க நினைத்த பிரிட்டிஷ் படை, மறுநாள் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை சிறைப்பிடித்தது.
ஓராண்டுக்குள் இந்த இயக்கத்தையும் ஒடுக்கி விட்டது. ஆனால், இந்த இயக்கம் ஆரம்பித்த பிறகுதான், விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது சுதந்திரத்திற்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment