அமெரிக்கா – மெக்சிக்கோ வளைகுடா கடலில் ‘ஹார்வி’ எனும் அதிபயங்கர புயல் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகியுள்ளது.
இந்த புயலின் எதிரொலியாக கடலின் நீர்மட்டம் தற்போது 12 அடி உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகதிறது.
டெக்சாஸ், லூசியானா மற்றும் வடக்கு மெக்சிக்கோ பகுதிகளில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்வதாக கூறப்படுகிறது.
அத்துடன் 97 சென்ரி மீற்றர் மழை வீழ்ச்சி இருந்தமையால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்வி’ புயல் இன்று அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என கூறப்படும் நிலையில், குறித்த புயலானது கரையைக் கடக்கும்போது மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
கடும் மழையும் வெள்ள அபாயமும் ஏற்படலாமென்பதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2005 ஆம் ஆண்டு புளோரிடாவை வில்மா புயல் தாக்கியிருந்தது.
No comments:
Post a Comment