Monday, September 11, 2017

காணாமல் போனோர் உறவுகளுக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தினர் இப்படி செய்யலாமா?


 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலின் ஒதுக்குபுறமாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், தமது உறவுகளுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் திருவிழா இடம்பெறும் 10 நாட்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடம் தங்களின் பந்தலை அகற்றி திருவிழாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், பின் மீண்டும் வழமை போல் பந்தல் அமைத்து போராட்டத்தை முன்னெடுக்கும்படியும் ஆலய நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள சிறிய கடை ஒன்றில் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த ஆறாம் திகதி திருவிழா நிறைவுற்ற நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆலய நிர்வாகம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனா்.

அந்தக் கடிதத்தில்
2017-09-10 திகதி நிர்வாக கூட்டத்தின் தீர்மானத்தின் படி ஆலயத்தில் தொடர்ந்தும் விழாக்கள் இடம்பெற இருப்பதால் ஆலய வீதியை தங்களுக்கு வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த கடித்தின் பிரதிகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா், பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன், கரைச்சி பிரதேச செயலாளா், கிராம சேவையாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில் ஆலய நிர்வாகத்தின் இந்த செயற்பாடு சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போனவர்கள் பிரச்சினையா? கோவில் வெளி வீதியா தேவை?
தமிழர்களின் உணர்வுடன் தமிழரே விளையாடாதீர்கள். வன்மையாக கண்டிக்கிறோம் என பலர் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

No comments:

Post a Comment