Saturday, September 23, 2017

மாணவர்களைக் கொன்றழித்த விமானப்படை: உணர்வுப்பூர்வ அஞ்சலி

 நாகர்கோவில் பகுதியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு விமானப் படையினால் நடாத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்களுடைய அஞ்சலி நிகழ்வானது உணர்வுப் பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 22ஆம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலத்தில் மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது இலங்கையின் விமானப் படையினர் குண்டு வீச்சுத் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.
 இதன்போது அப் பாடசாலையில் கல்வி கற்ற 21 மாணவர்கள் இவ் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மாணவர்களினது 22ஆவது நினைவு தினமானது நேற்றைய தினம் நாகர் கோவில் மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
 இந் நிகழ்வில் பாடசாலையின் மத்தியில் இம் மாணவர்களின் நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மலர் அஞ்சலி செலுத்தியும் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து கொல்லப்பட்ட ஒவ்வொரு மாணவர்களினதும் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் இம் மாணவர்களின் நினைவாக கனன் கோம்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் வடமராச்சி கிழக்கு பிரதேச செயலகமும் இனைந்து கல்வி கற்க போதிய வசதியற்ற மாணவர்கள் 50 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் ஒவ்வொருக்கும் ஒரு வருடத்திற்கு 12ஆயிரம் ரூபாய் வீதம் 50 மாணவர்களுக்கும் ரூபாய் 6 இலட்சத்தை வழங்கியிருந்தார்கள்.
அத்துடன் கற்றல் உபகரணங்களும்வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment