Thursday, September 28, 2017

சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை எழுதிய யுவதிக்கு SMS அனுப்பிய ஊழியர்... பின்னர் நடந்தது என்ன??


நேற்று இடம்பெற்ற சாரதி அனுமதிப்பத்திர பரீட்சைக்குத் தோற்றிய யுவதி ஒருவருக்கு கைபேசியூடாக குறுந்தகவல் அனுப்பியதாக கூறி இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு சென்ற யுவதியின் தந்தை உத்தியோகத்தரை அவர்களது அலுவலகத்தில் வைத்து கண்டித்துள்ளார்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நேற்று சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை இடம்பெற்றிருந்தது.

 அப்பரீட்சையில் இளம் யுவதி ஒருவர் தோற்றியுள்ளார்.

குறித்த பரீட்சை மண்டபத்தில் அங்கு பணியாற்றும் அலுவலக இளம் உத்தியோகத்தர் ஒருவர் யுவதியின் பரீட்சை எழுதிய விண்ணப்பத்திலுள்ள கைபேசி இலக்கத்தினை திருடி நேற்று பரீட்சை இடம்பெற்று சில மணி நேரத்தினுள் யுவதிக்கு குறுந்தகவல் ஊடாக நீங்கள் பரீட்சையில் சித்திபெறவில்லை என்று தகவல் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து இன்று காலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்குச் சென்ற குறித்த யுவதி மற்றும் தந்தை அலுவலக உத்தியோகத்தரை வெளியே அழைத்து பரீட்சை எழுதிய விண்ணப்பத்திலுள்ள கைபேசி இலக்கத்தினை எவ்வாறு எடுத்து குறுந்தகவல் அனுப்ப முடியும் என்று கேள்வி கேட்டு கண்டித்துள்ளார்.

 இச்சம்பவம் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளருக்கு முறையிட முயன்றபோதும் ஆணையாளர் திங்கட்கிழமையே அலுவலகத்திற்கு சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை வந்து முறையிடுவதாகத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment