போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களை தண்டிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் என்பது இலகுவாக நிறைவேற்றப்படக்கூடிய ஓர் விடயம் அல்ல என்றும் கூறினார்.
ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஸ் தலைமையிலான குழுவினர் இலங்கை விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உடனான சந்திப்புக்குப் பின் ஊடகவியலாளர்களை சந்தித்த போது மேற்கண்டவாறு கூறினரார்.
மேலும், யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தனிநபர்களையும் அடையாளப்படுத்தி அவர்களை தண்டனைக்கு உட்படுத்துதல், அல்லது போரிற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிறுவனங்கள் மற்றும் இந்த விடயங்களை குழப்பியவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பது என்பது கடினம்.
No comments:
Post a Comment