யாழ். அரியாலை உதயபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றபோது அவருடன் கூடவே சென்ற மற்றுமொரு இளைஞர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது;
“எமது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு, பெற்றோல் இல்லை என்று தெரிவித்தமையால் நாமிருவரும் எங்களது மோட்டார் சைக்கிளிலிருந்து கொஞ்ச பெற்றோலை எடுத்துச் சென்று கொடுத்து விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தோம்.
அப்போது மணியந்தோட்டம் சந்தியை அண்மித்தபோது எமக்கு எதிரே இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்திருந்தார்கள்.
எமக்கு அருகில் வந்ததும் தமது மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்தினார்கள்.
அவர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எனது நண்பனுக்கு சுட்டதில் முதுகில் காயம் ஏற்பட்டது.
அப்படியே சென்றுகொண்டிருக்கையில் தனக்கு மயக்கம் வருவதாகக் கூறினார்.
இதையடுத்து அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் நண்பனை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் என்று கூறினார்..
இதுகுறித்து இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கையில்;
வீட்டில் உணவு உட்கொண்டிருந்த சமயம் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததைத்தொடர்ந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment