இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் துணிகளால் முகத்தை மறைத்துக் கட்டிக் கொண்டு வந்த குழுவினர் வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று மாலை மூன்று மணியளவில் யாழ். மருதடி வீதி செட்டித்தெரு சந்தி நல்லூர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சிவன்புதுவீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானசேகரம் குமணேந்திரன் என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் வாய்க்குத் துணிகட்டி முகத்தை மறைத்துக் கொண்டு வந்த மூன்று பேர் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன் போது இளைஞனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு பதினெட்டு தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment