Tuesday, January 2, 2018

மிளகாய் பொடியை தூவிவிட்டு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை!

 நுவரெலியா நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து லொறியில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.


 இன்று காலை 08.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் லொறியை மறித்துள்ளார்.
பின்னர் மிளகாய் பொடியை சாரதி மற்றும் பணத்தை கொண்டு சென்ற நிறுவன ஊழியர் மீதும் தூவி விட்டு பணப் பைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

 இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைதாகவில்லை என தெரியவருகிறது.
மிளகாய்ப்பொடி தூவி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment