குழந்தையொன்றை சித்திரவதை செய்யும் பெண்ணொருவரின் காணொளி, கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த பெண் யார்? என்பது தொடர்பில் பலர், சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த பெண், இந்தியா – தமிழகத்தின் விழுப்புரம் பகுதியில் வசிக்கும் பெண் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த பெண் தொடர்பில் விழுப்புரம் பொலிஸார், வழக்கு பதிவு செய்து, தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான துளசி என்ற பெண், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான வடிவழகன் என்ற, ஒருவரையே திருமணம் செய்து, விழுப்புரத்தில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான வடிவழகன் என்ற, ஒருவரையே திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
குறித்த இருவருக்கும் திருமணமாகி, 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அவ்வப்போது, கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என கூறப்படுகின்றது.
இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், துளசி, தனது இரண்டு வயது மகனை அடித்து துன்புறுத்துவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையை அடித்துக்கும் சந்தர்ப்பத்தில், அதனை அவரே தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துக்கொண்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேநேரம், கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி, கணவர், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, துளசி தனது குழந்தையின் வாயில் அடித்து, காயப்படுத்தும் காணொளியையும், அவரே கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
குழந்தை, கீழே வீழ்ந்து அடிப்பட்டதாக தெரிவித்து, குழந்தையை புதுச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், குறித்த பெண் குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் காணொளி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.
குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் காணொளியை, கணவர், மனைவியின் கையடக்கத் தொலைபேசியில் அவதானித்துள்ள நிலையில், அது தொடர்பில் சத்தியமங்கலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment