வடமராட்சி துன்னாலையில் சுற்றி வளைக்கப்பட்டு இருவர் சந்தேகத்தின் பேரில் கைது !!
தமிழ் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டமை, சிறப்பு அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய
சந்தேகநபர்களைத் தேடி வடமராட்சியில் பொலிஸார் சிறப்புத் தேடுதலை நேற்று மேற்கொண்டனர். இதன்போது இருவர் கைது செய்யப்பட்டனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த மாதம் 9ஆம் திகதி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையின் போது பொலிஸ் காவலரண்கள், பொலிஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலரைப் பொலிஸார் இனம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களைத் தேடி, இரண்டு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. வடமராட்சியில் குறிப்பாக துன்னாலைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment