நோயாளி போல வைத்தியசாலையில் சிகிச்சைக்காகத் தங்கி ஏனைய நோயாளிகளின் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்ற நபரொருவரை சிலாபம் பொலிஸார் இன்று கைதுச்செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் பெறுமதியான கைத்தொலைபேசியைத் திருடியுள்ளார்.
பின்னர் அந்த கைத்தொலைபேசி புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே சுகயீனம் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்துள் ளார். அவரது கட்டிலுக்கு அருகிலிருந்த மற்றொரு நோயாளியுடன் இவர் நட்பாகியுள்ளார்.
மாதம்பை நோயாளி ஒரு நாள் மலசலகூடத்துக்குச் சென்றுவிட்டு வந்து பார்த்த போது கட்டிலின் தலையணைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி காணாமல் போயிருந்ததோடு பக்கத்து கட்டிலிலிருந்த நோயாளியும் காணாமல் போயிருந்துள்ளதையடுத்து அவர் அது தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
No comments:
Post a Comment