Friday, September 29, 2017

விஜயகலாவின் உருவப்படத்துடன் யாழில் சுவரொட்டிகள்!!

 குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளே என சுட்டிக்காட்டி விஜயகலா மகேஸ்வரனின் உருவப்படத்துடன் யாழ்.முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
வித்தியா படுகொலை தொடர்பான வழக்கிற்கு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் யாழில் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன், அந்த சுவரொட்டிகளில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் படமும் அச்சிடப்பட்டுள்ளது.
அத்துடன், அதில் நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சுவரொட்டிகளின் கீழ் தீவக மக்கள் மற்றும் யாழ். பெண்கள் அமைப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை கர்த்தால் அனுஷ்டிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஈபிடிபி ஆயுதகுழுவினரால் யாழ் நகரின் முக்கிய இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thursday, September 28, 2017

சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை எழுதிய யுவதிக்கு SMS அனுப்பிய ஊழியர்... பின்னர் நடந்தது என்ன??


நேற்று இடம்பெற்ற சாரதி அனுமதிப்பத்திர பரீட்சைக்குத் தோற்றிய யுவதி ஒருவருக்கு கைபேசியூடாக குறுந்தகவல் அனுப்பியதாக கூறி இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு சென்ற யுவதியின் தந்தை உத்தியோகத்தரை அவர்களது அலுவலகத்தில் வைத்து கண்டித்துள்ளார்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நேற்று சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை இடம்பெற்றிருந்தது.

 அப்பரீட்சையில் இளம் யுவதி ஒருவர் தோற்றியுள்ளார்.

குறித்த பரீட்சை மண்டபத்தில் அங்கு பணியாற்றும் அலுவலக இளம் உத்தியோகத்தர் ஒருவர் யுவதியின் பரீட்சை எழுதிய விண்ணப்பத்திலுள்ள கைபேசி இலக்கத்தினை திருடி நேற்று பரீட்சை இடம்பெற்று சில மணி நேரத்தினுள் யுவதிக்கு குறுந்தகவல் ஊடாக நீங்கள் பரீட்சையில் சித்திபெறவில்லை என்று தகவல் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து இன்று காலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்குச் சென்ற குறித்த யுவதி மற்றும் தந்தை அலுவலக உத்தியோகத்தரை வெளியே அழைத்து பரீட்சை எழுதிய விண்ணப்பத்திலுள்ள கைபேசி இலக்கத்தினை எவ்வாறு எடுத்து குறுந்தகவல் அனுப்ப முடியும் என்று கேள்வி கேட்டு கண்டித்துள்ளார்.

 இச்சம்பவம் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளருக்கு முறையிட முயன்றபோதும் ஆணையாளர் திங்கட்கிழமையே அலுவலகத்திற்கு சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை வந்து முறையிடுவதாகத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.

Wednesday, September 27, 2017

வித்தியாவின் வழக்கு இன்று இறுதிக்கட்ட விசாரணைகள் நடைபெறுகிறது

காணொளி எடுக்கப்பட்டது உண்மை! மாணவனின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது
**************
********
2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளே வன்புணர்வை மேற்கொண்டனர்.கூட்டு வன்கொடுமை உறுதியானது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் பாடசாலை மாணவன் வழங்கிய சாட்சியத்தையும் குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரிக்கு வழக்கின் சந்தேகநபர் லஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பாக சாட்சியமளித்த இப்லானின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது.

தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.

இந்த வழக்கில் இரண்டாம் எதிரியை வீதியில் கண்டதாக சிறுவன் வழங்கிய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரிக்கு வழக்கின் சந்தேகநபர் லஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பாக சாட்சியமளித்த இப்லானின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அவர் குற்றம் நடத்த இடத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்ற ரீதியும், குற்றத்துடன் தொடர்பற்றவர் என்ற ரீதியிலும் தீர்ப்பாயம் சாட்சியத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதேவேளை, நடராசா புவனேந்திரனின் (மாப்பிள்ளை) சாட்சியத்தை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலும், முதன்மை விசாரணைகளின் போது கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும் குற்றச் செயல் காணொளி எடுக்கப்பட்டதை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது. 



Monday, September 25, 2017

தியாகச் செம்மல் திலீபன்!

தமிழர் விடுதலைப் போராட்டத்திலே யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் பங்கு அதிகம். அவர்கள் போராட்டத்திற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கின்றார்கள்.
தமிழ் மாணவர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டிவிட்ட மொழி இன மத வேறுபாடுகள் தமிழ் மாணவர்களை தரப்படுத்தல் என்ற போர்வைக்குள் தள்ளி மாணவர்களை கல்வியில் பின்னடைய வைத்தது.
இதன் காரணமாக ஈழ தேசத்திலே கல்லூரி மாணவர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடப் புறப்பட்டார்கள்.
அவர்களில் ஒருவர் தான் திலீபன். இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்.
யாழ் இந்துக் கல்லூரியிலே மாணவனாக இருந்து மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியும் அந்த மருத்துவ பீட வாழ்க்கையைத் துறந்து தமிழின விடுதலைக்காக தன்னைப் போராட்டத்திலே அர்ப்பணித்துக் கொண்டவர்.
அந்தப் போராட்டத்திலே திலீபன் அளப்பரிய பங்காற்றி வந்ததனால் தேசியத் தலைவர் பிரபாகரனினால் புலிகளின் அரசியற்பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அந்த வேளையில் தமிழ் மக்கள் தங்களது விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதிலே வெற்றி பெறவிருந்ததொரு காலகட்டத்தை அடைந்து வருகின்ற அந்தக் கனிந்த காலத்திலே சிங்கள அரசுடன் சேர்ந்து இந்திய அரசும் செய்த சதிச் சூழ்ச்சியில் தமிழினம் சிக்கியிருந்து பாரிய அழிவுகளைச் சந்தித்திருந்தது.
இக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த இராசையா பார்த்தீபன் எனும் சொந்தப் பெயரைக் கொண்ட திலீபன் எனும் விடுதலைப் போராளி தனது இனத்திற்காக இந்திய அரசிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு புலிகளின் தலைவரிடம் அனுமதி கேட்டார்.
இந்திய அரசு அத்தகைய போராட்டத்தை ஏற்கும். உலகம் அதைப் புரிந்து கொள்ளும் என்பதற்காக அவர் உண்ணாநோன்பிருக்க நல்லூர்க் கோவில் வடக்கு வீதியிலே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அன்று நல்லூர் வீதியெங்கும் திலீபனுடைய தீயாக வேள்வியைப் பார்ப்பதற்கு தினந்தினம் பல ஆயிரக்கணக்கான மக்கள் போவார்கள்.
அந்த வேள்வியிலையே ஒலிக்கின்ற கவிதைகள், கவிஞர் புதுவை இரத்துனதுரையின் கவி வரிகளிலே விடுதலையை உணர்வுகளை வாட்டுகின்ற அத்தகைய வரிகளும் வந்து பாரடா வந்து பாரடா வாட முன்னொரு செய்தி கூறடா இந்திரா பெற்றெடுத்தவ வந்து பாரடா இங்கு ஓர் உயிர் வாடுகின்றது இதய நாடிகள் ஒடுங்குகின்றது.
தங்க மேனியைக் காவு திண்னுது வந்து பாரடா என்ற கவிதை வரிகள் நல்லூரான் வீதியெங்கும் ஒலித்துக் கொண்டிருந்ததது.
அவருடைய விடுதலை வேள்வி யாகத்திற்கு புதுவை இரத்தினதுரை கவிதையிலே ஒரு அர்ச்சணை செய்து கொண்டிருந்தார்.
ஒவ்வொரு இடங்களில் இருந்தும் ஒவ்வொரு நாளும் பேராளிகளெல்லாம் அணி அணியாக திலீபனுடைய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அதே போன்று மக்களும் பல ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டிருந்தனர். அதிலும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அந்தப் போராட்டத்திலே வந்து கலந்து கொண்டிருந்தார்.
அவர் திலீபனைச் சந்தித்து சில வாக்குறுதிகளையும் பெற்றிருந்தார். ஆனாலும் திலீபன் தன்னுடைய மக்களுக்காக தான் எடுத்த அந்தக் கொள்கையிலிருந்து தன்னை விடுவிப்பதில்லை என்ற உறுதியிலே இருந்ததனால் தலைவர் கூட அந்தப் போராளியின் மரணத்தைத் தடுக்க முயற்சித்த போதும் முடியவில்லை.
இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திலே ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களுடன் பேசிக் கொண்டிருந்த திலீபன் 12 நாட்கள் கடந்த நிலையில் 12 ஆம் நாளில் தியாக தேசத்திற்கு தியாகத்தை உணர்த்திவிட்டு தியாக மரணடைந்தார்.
இதனால் இந்தியாவின் கபடத்தனமும் வேசமும் உலகமும் அறிய வேண்டும்.
மக்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அந்தப் புனிதமான போராளி தன்னுடைய தியாகத்தின் உச்சத்திற்குச் சென்றார்.
பாடும் பறவைகள் பாடுங்கள் புலி வீரர் திலீபனின் பாடுங்கள் என்கின்ற வரிகளும் அன்று தான் ஒலிக்கத் தொடங்கியது.
அன்று தமிழ் மக்கள் மத்தியிலே எல்லோரையும் அழ வைத்த மரணம். தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றிலே ஒரு வித்தியாசமான மைல்கல்.
களத்திலே போராடி வீரச்சாவடைவதைவிட தன்னினத்துக்காக நீராகரம் ஏதும் அருந்தாமல் போராடி தன் உயிரைத் துறந்த மாபெரும் தியாகியாக உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியிலே ஓர் வித்தியாசமானவராக பார்க்கப்பட்டார்.
அந்தப் போராட்டத்தில் தான் இறந்ததன் பின்னர் தன்னுடைய உடலைக் கூட மருத்துவ பீட மாணவர்கள் கற்பதற்காகக் கொடுக்கும் படியும் கூறியிருந்தார்.
இதே வேளை இந்தக் காலப்பகுதியிலே இந்திய அரசின் இலங்கைத் தூதுவராக இருந்தவர் திலீபனுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை திரை மறைவில் தடுப்பதற்கு எத்தனையோ சதிகளை மேற்கொண்டிருந்தார்.
அந்தச் சதிகளை எல்லாமே தமிழினத்திற்கும் தமிழின விடுதலைக்குமான போராளியான திலீபன் தகர்த்தெறிந்து புனிதமானதொரு போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் போராட்டத்தினூடாக இந்தியாவினுடைய போலித் தனத்தையும் கபடத்தனத்தையும் உலகமெங்கும் காட்டி தியாக மரணமடைந்தார்.
திலீபன் தியாக மரணமடைந்த காலப்பகுதியில் திலீபனுடைய இறுதி நிகழ்வுகள் இரண்டு மூன்று நாட்களாக தீவகம் வடமராட்சி தென்மராட்சி வலிகாமம் என்ற யாழ்ப்பாணத்தின் நான்கு பிரதேசங்களிலும் பூதவுடல்கள் மக்களுடைய அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அருவடைய புகழுடல் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்டது.
அந்த வகையில் ஈழ விடுதலைப் போராட்டத்திலே ஓர் வித்தியாசமான அரசியல் போராளியாக வாழ்ந்து தன்னுடைய வாழ்க்கையை தமிழ்த் தேசியத்திற்காகவும் தமிழினத்திற்காகவும் தியாகம் செய்த அற்புதமான போராளி.
ஆனால் அன்று எங்கள் மக்களுடைய மனங்களிலிலெல்லாம் நிறைந்திருந்த அற்புதமான அந்தப் மாபெரும் தியாகி இன்று முப்பது வருடங்களுக்குப் பின்னரும் மக்களின் மனங்களில் நிங்கா இடம்பிடித்திரிருக்கின்ற தியாகியாகவே காணப்படுகின்றார்.
அப்படிப்பட்ட அந்தப் தியாகச் செம்மல் மக்கள் மனங்களில் தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதற்காகவும் அந்த மக்கள் நேசிக்க வேண்டுமென்பதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.
தமிழர்களுக்கான எந்த தேசியக் கட்சிகளும் தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பான ஓர் தெளிவான பாதையையும் பார்வையையும் மக்களுக்குக் காட்டுவதில்லை.
இன்றைய தமிழ் மக்களின் தேவை என்ன, அரசியல் கைதிகளின் நிலை என்ன. அன்று தீலிபனுடைய போராட்டத்திலே கூட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும். தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என எத்தனையோ அரசியல் போராட்டங்களின் புதிய புதிய வடிவங்களையெல்லாம் திலீபன் தனது ஐந்து அம்சக் கோரிக்கையிலையே முன்வைத்திருந்தார்.
ஆனால் இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருக்கின்ற அதே அரசியல்வாதிகள் தங்களது பாராளுமன்றக் கதிரைகளில் இருந்து விட்டு வருவது தான் வழமை.
அது தான் அவர்களது கடமையாகவும் இருக்கின்றது. அதே போன்று தான் தேசியம் பேசுகின்ற ஏனைய அரசியல்வாதிகளும் தங்களுக்கும் பாராளுமன்ற கதிரைகளைப் பிடிப்பதற்கும் தங்களது அரசியல் கதிரைகளைக் காப்பாற்றுவதற்குமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக தேசியம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ்த் தேசத்திற்காகவும் தமிழினத்திற்காகவும் குரல்கள் ஒலிப்பதில்லை.
இனத்திற்காகவும் தேசத்திற்காகவும் பாடுபட்ட, அர்ப்பணித்த, தியாகம் செய்த, உயிரை இழந்த ஒவ்வொரு போராளிகளுக்கு மத்தியிலும் இந்த அரசியல் வாதிகளுடைய போலி முகங்கள் எல்லாம் வெகு விரைவில் அரங்கேற வேண்டும். மக்கள் விடுதலைப் போராளிகளை புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைக்கான போராட்டத்தின் வடிவத்திலே எத்தனையோ வடிவங்கள் இருக்கின்றன.
அத்தகைய வடிவங்களை கைக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி ஏமாறுகின்ற இந்தச் சமுதாயம் விழித்தெழ வேண்டும்.
தன்னினத்தின் விடுதலைக்காக சாதாரண போராளி தியாகம் செய்த அளவிற்கு அந்த இனத்தை வைத்து தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகள் ஏதும் செய்யவில்லை.
இறுதியாக முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்ட போதும் அரசியல் தலைவர்கள் பலரும் சுகபோகங்களையே அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
அதேபோன்று இன்றைக்கும் எம் மக்கள் பல்வேறு வழிகளிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அன்றைக்கு தேசியம் பேசி மௌனமாக சுகபோகங்களை அனுபவித்த அதே அரசியல்வாதிகள் தான் இன்றைக்கும் தேசியம் பேசிக் கொண்டு எல்லாவற்றையும் பார்த்து வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.

Sunday, September 24, 2017

நாளை முதல் இலங்கையில் காலநிலை மாற்றம்

நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 25 மற்றும் 26ம் திகதிகளில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. 
குறிப்பாக மேல் மற்றும் தென் பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
மேலும், கடும் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

Saturday, September 23, 2017

வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பது எப்படி?

வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செயற்பட்டுவந்த ஆவா குழுவின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் மது போதையில் வீதிகளில் மக்களுக்கு இடையூறு விளைவிப்போர் மற்றும் போதைவஸ்து பாவனையாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
தமிழ் பேசும் பொலிஸார் குறைவாக காணப்படுவதனால் பணிகளை தமிழ் மொழில் மேற்கொள்வதில் சிரமங்கள் நிலவுவதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தனர்.
மேலும் அனுமதியற்ற வகையில் வீதீ ஓரங்களில் இந்து, பௌத்த, கிறிஸ்த சமயங்களின் தெய்வங்களை அமைப்பதன் காரணமாக வீண் பிரச்சினைகள் சமூகங்களுக்கு இடையில் எழுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் றெஜினோல்ட் கூரே
தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வடக்கு வாழ் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள அனைத்து தரப்பினரும் இளைஞர் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முக்கிய நகரங்கள் மற்றும் பொதுமக்கள் செறிந்து காணப்படும் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்காண்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசித்துள்ளதாகவும். அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.
அனுமதியற்று வீதி ஓரங்கள் மற்றும் மரங்களின் கீழ் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வரும் சிலைகள் தொடர்பில் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சர் காமினி ஜெயவிக்கரம பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தடம் புரண்டது ரயில்






மாணவர்களைக் கொன்றழித்த விமானப்படை: உணர்வுப்பூர்வ அஞ்சலி

 நாகர்கோவில் பகுதியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு விமானப் படையினால் நடாத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்களுடைய அஞ்சலி நிகழ்வானது உணர்வுப் பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 22ஆம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலத்தில் மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது இலங்கையின் விமானப் படையினர் குண்டு வீச்சுத் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.
 இதன்போது அப் பாடசாலையில் கல்வி கற்ற 21 மாணவர்கள் இவ் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மாணவர்களினது 22ஆவது நினைவு தினமானது நேற்றைய தினம் நாகர் கோவில் மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
 இந் நிகழ்வில் பாடசாலையின் மத்தியில் இம் மாணவர்களின் நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் மலர் அஞ்சலி செலுத்தியும் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து கொல்லப்பட்ட ஒவ்வொரு மாணவர்களினதும் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் இம் மாணவர்களின் நினைவாக கனன் கோம்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் வடமராச்சி கிழக்கு பிரதேச செயலகமும் இனைந்து கல்வி கற்க போதிய வசதியற்ற மாணவர்கள் 50 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் ஒவ்வொருக்கும் ஒரு வருடத்திற்கு 12ஆயிரம் ரூபாய் வீதம் 50 மாணவர்களுக்கும் ரூபாய் 6 இலட்சத்தை வழங்கியிருந்தார்கள்.
அத்துடன் கற்றல் உபகரணங்களும்வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

Friday, September 22, 2017

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிக்கு!!

சிறு­மியை பாலியல் ரீதியில் துன்­பு­றுத்­தி­யதன் பேரில் விகாராதிபதி ஒருவரை பொலிசார் கைது செய்­துள்­ளனர்.
கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் கம்­பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சாந்­தினி மீகொட முன்­னி­லையில் நேற்று (21) ஆஜர்படுத்தியபோது எதிர்­வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்குமாறு உத்­தர­விட்­டுள்ளார்.
குறித்த விகாராதிபதி சமய வகுப்­பிற்குச் சென்ற சிறு­மியை அங்­கி­ருந்த அரச மரமொன்றின் பின்னால் மறை­வான இடத்துக்கு ஏமாற்றி கூட்டிச் சென்று பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதை­ய­டுத்து பெற்றோர் குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்­திக ஸ்ரீகாந்­தவின் கவ­னத்­திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மேற்கண்ட உத்தரவினை நீதிவான் பிறப்பித்தார்.

Thursday, September 21, 2017

வடமராட்சியில் போராட்டம் (படங்கள்)

 வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் தொழில் புரியும் இடங்களை உள்ளடக்கி வனஜீவராசிகள் தேசிய பூங்காவாக உருவாக்கியதைக் கண்டித்து மக்கள் கவயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
குறித்த வனஜீவராசிகள் தேசிய பூங்காவுக்காக கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான பகுதிகளில் மக்களின் வாழ்விடங்களையும் தொழில் புரியும் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
 இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் தமது பூர்வீக நிலங்கள் எனறும் அதற்கான காணி உறுதிப் பத்திரம் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தமது பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்க இடமளிக்கப் போவதில்லை.
தமது நிலையினை கவனத்திற்க் கொண்டு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கும் இவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை தமது கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்து,கவயீர்ப்பு போராட்டத்தினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக ஈடுபட்டுள்ளனர்.
எமது ஜீவனோபாயத்தினை அழிக்காதே, வன ஜீவராசிகளுக்கு கொடுக்கும் முக்கியம் எமக்கு இல்லையா?
மக்களின் அன்ராட செயற்பாட்டினை குலைக்காதே!, அரசே சுண்டிக்குளம் மக்களை மீள் குடியேற்றம் செய். போன்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கி நின்றனர்.

செப்டெம்பர் 21: உலக அமைதி நாள்

இன்று உலக அமைதி நாள். ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் திகதி அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாள் 1981 இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனாலும் 2002 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 21ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது

21-09-2017 இன்றைய ராசிபலன்கள்

21.9.2017 வியாழக்கிழமை ஹேவிளம்பி வருடம் புரட்டாசி மாதம் 5ம் நாள். தேய்பிறை பிரதமை திதி காலை மணி 11.51 வரை, பிறகு துவிதியை திதி.
அஸ்த நட்சத்திரம் நள்ளிரவு மணி 1.06 வரை, பிறகு சித்திரை. யோகம்: சித்தயோகம். நவராத்திரி பூஜை ஆரம்பம்.
நல்ல நேரம் 9-12, 4-7, 8-9
எமகண்டம் காலை மணி 6.00-7.30
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00
குளிகை: 9:00 – 10:30
மேஷம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். பழைய பிரச்னைகளைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
ரிஷபம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.
வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.
மிதுனம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.
யோகா, தியானம் என மனம் செல்லும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கடகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும்.
வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
கன்னி
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவுகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
துலாம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்.
தனுசு
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
மகரம்
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
கும்பம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து போகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.
மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

Wednesday, September 20, 2017

நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்கு நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தாலும் பிரச்­சினை இல்லையாம் ; ஞான­சார தேரர்

ராஜபக்ஷ அர­சாங்கம் யுத்­தத்தின் மூலம் புலி­களை வெற்றி கொண்­ட­போதும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­ தற்கு எந்த வேலைத்­திட்­டமும் அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை. தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்கு  நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தாலும் பிரச்­சினை இல்லை என்று பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
பொது­ப­ல­சேனா கட்சி செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
30 வருட யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு மஹிந்த ராஜபக்ஷ் எடுத்த அர­சியல் தீர்­மா­னத்தை யாரும் மறக்க முடி­யாது. எந்த அர­சியல் கொள்­கையில் இருந்­தாலும் நாட்டு மக்கள் அவ­ருக்கு நன்­றி­யு­டை­ய­வ­ராக இருக்­க­வேண்டும். அது வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மான தீர்­மா­ன­மாகும். அத்­துடன் சர்­வ­தேச நாடு­களின் அழுத்­தங்கள் மற்றும் உயிர் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யிலே அவர் இந்த தீர்­மா­னத்தை எடுத்து யுத்­தத்தை வெற்­றி­கொள்ள தலை­மைத்­துவம் வகித்தார்.
அத்­துடன் மஹிந்த ராஜபக்ஷ் வாழ்நாள் முழு­வதும் இந்த நாட்டில் அர­ச­ராக இருக்­க­வேண்­டி­யவர். என்­றாலும் அது நடை­பெ­ற­வில்லை. ஏனெனில் அவரை சுற்­றி­யி­ருந்த ஆலோ­ச­கர்கள் சரி­யான ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருந்தால் இந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. அவரின் தோல்­வி­யுடன் நாடும் நிலை­யான நிலைப்­பாட்டில் இருந்து விழுந்­துள்­ளது.
விடு­த­லைப்­பு­லி­களை யுத்­தத்தின் மூலம் தோல்­வி­ய­டை­யச்­செய்­தாலும் அவர்­களால் சமூ­க­ம­ய­மாக்­கி­யுள்ள பிரி­வி­னை­வாத நிகழ்ச்சி நிரலை தோற்­க­டிக்க முடி­ய­வில்லை. அதே­போன்று அதன் அர­சியல், சர்­வ­தேச முன்­ன­ணி­களை தோற்­க­டிக்க முடி­யாமல் போயுள்­ளது.  
உண்­மை­யான விடு­த­லைப்­பு­லிகள் வடக்கில் இல்லை. சர்­வ­தே­சத்­திலே இருக்­கின்­றனர். அவர்கள் சொல்­வ­தையே பிர­பா­கரன் இங்கு மேற்­கொண்டார். ஆனால்  எங்­களால் சர்­வ­தே­சத்தை வெற்­றி­கொள்ள முடி­ய­வில்லை.
வடக்கில் யுத்தத்தின் மூலம் புலி­களை வெற்­றி­கொண்ட பின்னர் அங்கு அடிப்­படை வச­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டன, பாட­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. ஆனாலும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு அன்று அர­சாங்­கத்­திடம் எந்த வேலைத்­திட்­டமும் இருக்­க­வில்லை.  
என்­னதான் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்­டாலும் மக்­களின் உள்­ளத்தை மாற்­று­வது இல­கு­வான விட­ய­மல்ல. அன்று மஹிந்த ராஜ­பக்ஷ்­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­ப­வர்களாக நாங்கள் இருந்­தி­ருந்தால் துட்­டகைமுனு மன்­னனின் முன்­மா­தி­ரியை பின்­பற்­று­மாறு தெரி­வித்­தி­ருப்போம்.  அத்­துடன் தேசிய ஒற்­று­மையை பாது­காத்­துக்­கொள்ளும் பொருட்டு நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்­காக  நினை­வுத்­தூபி ஒன்றை அமைப்­பதும் பிரச்சினை இல்லை.  
ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ் இங்குள்ள மக்களுக்கு வீரர்போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வீரராவார். சரியோ பிழையோ அதுதான் உண்மை. யுத்த வெற்றி விழாக்களை கொண்டாடவேண்டும். நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு அந்த மக்களின் உரிமையையும் பாதுகாக்கவேண்டும் என்றார். 

வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றத்துடன் திருவிழா இன்று ஆரம்பமானது...

 வடமராட்சி- வல்லிபுராழ்வார் சுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம் இன்று(20.09.2017) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
 மாயக்கண்ணனின் வருடாந்த மகோட்சவம் பெரும் பக்தர்கள் மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது


வாகனத்தை துரத்திச் சென்ற அதிரடிப்படையினர்: அம்பலமானது கடத்தல்!!

 சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை விஷேட அதிரடிப்படையினர் சந்தேகத்தினால் பின் தொடர்ந்து சென்ற போது வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
வனியாவில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
தாண்டிக்குளம், கொக்குவெளி பகுதியிலுள்ள இரணுவ முகாமிற்கு முன்னாள் இருக்கக்கூடிய புகையிரதக்கடவைக்கு அருகில் வாகனத்தில் பல முதுரை மரக்குற்றிகளை சட்டவிரோமான முறையில் கடத்திச் சென்றுள்ளனர்.
சந்தேகமடைந்த விஷேட அதிரடிப்படையினர் வாகனத்தை துரத்திச் சென்றபோதே மரக் கடத்தல் சம்பமவ் அம்பலமாகியுள்ளது.
இதனால் புகையிரதக்கடவைக்கு அருகில் வாகனம் குடைசாந்துள்ளது வாகனச்சாரதி தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற விஷேட அதிரடிப்படையினர் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, September 19, 2017

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபைக்குப் பின்பாக உள்ள பண்டிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்து குடும்பஸ்தர் அரை உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்.நாவலர் வீதி அரியாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் பத்மபாலசிங்கம் (வயது 38) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.நாவலர் வீதி அரியாலைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (18) இரவு 4 பேர் சென்று குடும்பஸ்தரை கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட குடும்பஸ்தர் பண்டிக் கோட்டுப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அடித்துப் போட்ட நிலையில் அரை உயிருடன் கிடந்துள்ளார்.
கோவில் பகுதியால் சென்றவர்கள் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் குடும்பஸ்தரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தினமொரு பேரிச்சம்பழம் சாப்பிடுங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடற்சக்தியை வலுப்படுத்த பேரிச்சம்பழம் உதவுகிறது.
தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடையும்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம்.
இதில் இருக்கும் விட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க பயன் தருகின்றன.
பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.
மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.
கர்ப்பமாக இருக்கும் போது, பெண்கள் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.
தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

அக்கரைப்பற்றில் விபத்து, ஸ்தலத்திலேயே ஒருவர் பலி...

 அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று 2ஆம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 8ஆம் கட்டையை சேர்ந்த அலியார் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
 மற்றும் அக்கரைப்பற்று 06ஆம் குறிச்சியை சேர்ந்த அரூஸ் என்பவர் காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்றுமுன்…மன்னாரில் விபத்து: ஒருவர் பலி (படங்கள்)

 மன்னாரில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் கட்டை அடம்பன் பாடசாலை முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.
 இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்


திலீபனின் நினைவு தூபியை புனரமைக்க தீர்மானம்

தியாகி திலீபன் நினைவு தூபியை புனரமைப்புக்கான தீர்மானம் நேற்று (திங்கட்கிழமை) யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை யாழ் மாநகர சபை புனரமைப்பு செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இணைத் தலைவர்கள் மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் புனரமைப்பு செய்வதற்குரிய தடைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
அதன் போது, கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் மாநகர சபைக்கு வழங்கியும் ஏன் இதுவரையில் புனரமைப்பு  செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
1989 ஆம் ஆண்டு தற்போது வடமாகாண சபை அவைத் தலைவராக இருக்கும் சீ.வி.கே.சிவஞானம் மாநகர ஆணையாளராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட தூபியை புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்கள்.
இருப்பினும், நல்லூர் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் நினைவுத் தூபி அமைந்துள்ளது.
இதனால் நல்லூர் ஆலய நிர்வாகத்துடன் கலந்தாலோசிப்பது மற்றும் நினைவு தூபி அமைந்துள்ள காணியை குத்தக க்கு எடுப்பது சம்பந்தமான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட பின்னர் புனரமைப்பதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Monday, September 18, 2017

வேதன மோசடிகள்: தொடரும் மின்சாரசபை போராட்டம்!!

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த மின்சார சபை போராட்டம் தொடர்கிறது.
இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
இதேவேளை மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லையென மின்வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார பணியாளர்களின் 2 நாள் போராட்டம் வேதனத்துடனான விடுமுறையான கருதப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை உணவுக்காக பாண் வாங்கியவருக்கு கிடைத்த அதிர்ச்சி!!

பாண் வாங்கிய நபருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
வவுனியாவில் காலை உணவுக்காக நபர் ஒருவர் பாண் வாங்கி அதனை வெட்டிய போது பாணிற்குள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது.
வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று சாப்பாட்டுக்காக வாங்கிய பாண் ஒன்றிலேயே உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் நடத்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது