Sunday, September 3, 2017

நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசம்: 18 பேர் பலி!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசத்தினால் 18 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் ஒரு மதத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் போகோஹரம் தீவிரவாத அமைப்பினர் 2002 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தங்கள் கண் எதிரே பட்டவர்களையெல்லாம் அவர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு, அங்கிருந்து தப்பினர்.
இதனால் அந்த நகரில் பெரும் பதற்றம் நிலவுவதாக கூறப்படும் அதேவேளை, 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment