Tuesday, September 12, 2017

27 பேரை கொலை செய்த விவகாரம்: விசாரணையின் பிடியில் கோத்தா

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 27 பேரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் பாதுகாப்புத் துறை உத்தியோகத்தர்கள் பலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை என்பவற்றிலுள்ள பலரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய நேரடியாக தொடர்புபடுவதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment